மார்க் ஜுக்கர்பெர்க்கிடம் கிடுக்குப்பிடி விசாரணை! சேர்த்து வைத்த பவர் எல்லாம் ஒரே நொடியில் காலி?
வாஷிங்டன்: சமூக வலைத்தள உலகில் இப்போது ஆதிக்கம் செலுத்தும் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றாக மெட்டா நிறுவனம் இருக்கிறது. பேஸ்புக், இன்ஸ்டா, வாட்ஸ்அப் எனப் பல நிறுவனங்கள் மெட்டாவுக்கு கீழ் தான் வருகிறது. இதற்கிடையே இந்த நிறுவனத்திற்கு எதிராக இப்போது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு மெட்டாவுக்கு எதிராகப் போனால் இன்ஸ்டா, வாட்ஸ்அப்பை தனி நிறுவனங்களாக மார்க் ஜூக்கர்பெர்க் விற்க வேண்டிய சூழல் ஏற்படும்.
உலகில் இப்போது டெக் நிறுவனங்கள் தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும். அதன்படி உலகில் உள்ள மேஜர் டெக் நிறுவனங்களில் ஒன்று மெட்டா. இதந் தலைவராக மார்க் ஜுக்கர்பெர்க் இருக்கிறார். 1.4 டிரில்லியன் டாலர் மதிப்பு கொண்ட இந்த மெட்டா நிறுவனத்தின் கீழ் தான் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட நிறுவனங்கள் வருகிறது.

மெட்டா மீதான வழக்கு
இந்த மெட்டா நிறுவனத்திற்கு எதிராகத் தான் இப்போது அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதாவது இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட நிறுவனங்களைக் கையகப்படுத்தி சமூக வலைத்தளச் சந்தையில் மெட்டா நிறுவனம் சட்டவிரோதமாகப் போட்டியே இல்லாத ஒரு சூழலை உருவாக்கியுள்ளதாக அமெரிக்க பெடரல் டிரேட் கமிஷன் குற்றஞ்சாட்டுகிறது.. இந்த வழக்கு மெட்டா நிறுவனத்திற்கு எதிராகப் போனால் அவர் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் செயலிகளை விற்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவார்.
இந்த வழக்கில் தான் முதல் சாட்சியாக மார்க் ஜுக்கர்பெர்க் விசாரணைக்கு ஆஜரானார். இதில் மெட்டா நிறுவனத்தின் எதிர்காலம் மட்டும் இல்லை.. வரும் காலங்களில் ஒரு டெக் நிறுவனம் இன்னொரு நிறுவனத்தை வாங்கும்போது ஏற்படக்கூடும் சட்டச் சிக்கல்களையும் விளக்குவதாக இது இருக்கிறது. நேற்று முதல் நாள் விசாரணை முடிந்த நிலையில், இன்றும் விசாரணை தொடர்ந்து நடைபெறும்.
சரமாரி குற்றச்சாட்டு
முன்னதாக நடந்த விசாரணையின்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் டேனியல் மேத்சன், "மெட்டா நிறுவனம் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் என அனைத்தையும் தன்வசம் வைத்திருக்கிறது. இதனால் யூசர்களுக்கு மாற்று என்பதே இல்லாமல் போய்விட்டது. வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் வளரும்போதே அது எதிர்காலத்தில் தனக்குப் போட்டியாக வரக்கூடாது என்பதற்காக இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் நிறுவனங்களை மெட்டா நிறுவனம் வாங்கிவிட்டது. இதன் மூலம் அவர்கள் சமூக வலைத்தள மார்க்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்" என்றார்.
மார்க் ஜுக்கர்பெர்க் விளக்கம்
இருப்பினும் தங்கள் நடவடிக்கையை மார்க் ஜுக்கர்பெர்க் சரி என நியாயப்படுத்தினார். இது தொடர்பாக மார்க் மேலும் கூறுகையில், "யூசர்களுக்கு புதுமை மற்றும் அவர்களின் அனுபவத்தை மேம்படுத்தவே மற்ற நிறுவனங்களை வாங்கினோம். மெட்டா நிறுவனம் காலப்போக்கில் பல தளங்களில் பரிணமித்துள்ளது உண்மைதான். அடிப்படையில் இருந்து வேறு விதமாக மெட்டா வளர்ந்துவிட்டது உண்மைதான். ஒருவர் வீடியோ உள்ளிட்ட கன்டெண்டுகளில் செலவிடும் நேரம் அதிகரித்தாலும், ஒருவரை அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கனெக்டட்டாக வைத்திருக்க வேண்டும் என்பதே அடிப்படை நோக்கம்" என்றார்.

கேள்வி மேல் கேள்வி
அதன் பிறகு சுமார் ஒரு மணி நேரம் சமூக வலைத்தள மார்க்கெட்டில் மெட்டா நிறுவனத்தின் ஆதிக்கம் குறித்து மார்க் ஜுக்கர்பெர்க்கிடம் டேனியல் கேள்வி எழுப்பினார். சமூக வலைத்தள சந்தையில் மெட்டா நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.. இதன் மூலம் மெட்டாவுக்கு கற்பனை செய்ய முடியாத அளவுக்கு பவர் குவிந்து கிடக்கிறது. மேலும், யூசர்களுக்கு தேர்வு செய்ய ஆப்ஷன்களே இல்லாமல் போய்விட்டது என்பதே அரசின் வாதமாகும்.
இருப்பினும், சமூக வலைத்தளம் என அரசு வரையறைக்கும் மார்க்கெட் என்பதே தவறானது என்ற வாதத்தை மெட்டா முன்வைத்தது. மேலும், டிக் டாக், ஸ்னாப்சாட், யூடியூப் மற்றும் ஐமெசேஜ் என பல தளங்களும் தங்களுக்குப் போட்டியாக இருப்பதாக மெட்டா நிறுவனம் வாதத்தை முன்வைத்தது.
ஆதாரம் என்ன!
கடந்த 2012ல் மார்க் ஜூக்கர்பெர்க் தனது ஊழியர்களுக்கு அனுப்பிய மெயில் தான் இதில் முக்கிய ஆதாரமாக அமெரிக்க பெடரல் டிரேட் கமிஷன் முன்வைத்தது. அதில் இன்ஸ்டாகிராமை வாங்குவதன் மூலம் போட்டியாளரை காலி செய்ய முடியும் என்பது போல ஜூக்கர்பெர்க் மெயில் அனுப்பி இருந்தார். மற்றொரு மெயிலில் பேஸ்புக் கேமராவில் இன்ஸ்டாகிராமுக்கு இணையான வசதிகள் இல்லை எனக் கவலை தெரிவித்திருந்தார். இந்த மெயில்களை தான் அனுப்பியது உண்மைதான் என்ற ஜுக்கர்பெர்க், இருப்பினும் அதை வேறு டோனில் அரசு வாதமாக முன்வைப்பதாகக் குறிப்பிட்டார்.
மேலும், 2012இல் இன்ஸ்டாகிராமை வாங்கும் முடிவு மற்றும் 2014இல் வாட்ஸ்அப்பை வாங்கும் முடிவு என இரண்டையும் அரசு நிர்வாகம் ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளித்ததாகவும் மெட்டா வழக்கறிஞர்கள் வாதத்தை முன்வைத்தனர். மேலும், பயனாளர்கள் அனுபவத்தை மேம்படுத்தவே இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் தளத்தை வாங்கியதாகவும் மெட்டா வாதத்தை முன்வைத்தது.

குற்றச்சாட்டு
இருப்பினும் இதை ஏற்க மறுத்த அமெரிக்க பெடரல் டிரேட் கமிஷன், இன்ஸ்டாகிராமை வாங்கிய பிறகு அதன் அப்டேட்களை வேண்டும் என்றே மெட்டா நிறுவனம் மெதுவாக்கியதாகச் சாடுகிறது. பேஸ்புக் நிறுவனத்தின் ஆதிக்கத்தைப் பாதுகாக்கவே மெட்டா நிறுவனம் இதுபோல செய்ததாகவும் அமெரிக்க பெடரல் டிரேட் கமிஷன் குற்றஞ்சாட்டியது.
இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. அதில் கடந்த காலங்களில் மெட்டா எடுத்த முடிவுகள் குறித்து மார்க் ஜூக்கர்பெர்க் விளக்கம் தர இருக்கிறார். இது மெட்டா நிறுவனத்தின் கடந்த கால நடவடிக்கைகள் குறித்து ஆராய உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கில் முன்னாள் சிஓஓ ஷெரில் சாண்ட்பெர்க் மற்றும் இன்ஸ்டாகிராம் இணை நிறுவனர் கெவின் சிஸ்ட்ரோம் உள்ளிட்டோரை விசாரிக்க அமெரிக்க பெடரல் டிரேட் கமிஷன் திட்டமிட்டுள்ளது.
சேர்த்து வைத்த பவர் காலி?
இந்த வழக்கில் ஒருவேளை அமெரிக்க பெடரல் டிரேட் கமிஷன் வெற்றி பெற்றால், மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப்பை தனி நிறுவனங்களாக விற்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். கடந்த பல ஆண்டுகளாகவே மெட்டா நிறுவனம் மூன்று தளங்களையும் ஒருங்கிணைத்து ஒரு மாடலை உருவாக்கி அதன் மூலம் வருமானம் பார்த்து வந்த நிலையில், அதற்குப் பெரிய அடியாக இருக்கும்.
மெட்டாவின் வருவாயில் சுமார் 50% வரை இன்ஸ்டாகிராமில் இருந்து மட்டும் வருகிறது. இந்தச் சூழலில் இன்ஸ்டாகிராமை தனி நிறுவனமாக விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் அது மெட்டா நிறுவனத்திற்கு மிகப் பெரிய இழப்பாகவே இருக்கும். இந்த வழக்கு விசாரணை மொத்தம் 8 வாரங்கள் நடைபெறும் நிலையில், இறுதியில் எடுக்கப்படும் முடிவு டெக் உலகையே மாற்றிப்போடுவதாக இருக்கும்.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications