டேன்ஞர்! அண்டார்டிக்காவையும் விட்டு வைக்காத பிளாஸ்டிக்.. ரொம்ப ஆபத்து என வார்ன் செய்யும் ஆய்வாளர்கள்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: உலகெங்கும் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ள பிளாஸ்டிக் மாசு, இப்போது அண்டார்டிக்காவையும் விட்டுவைக்கவில்லை.

மனிதர்களின் பேராசை காரணமாக உலகம் தொடர்ந்து மோசமான பாதிப்பை எதிர் கொண்டு வருகிறது. ஏற்கனவே, பல உயிரினங்கள் மனிதனின் பேராசையால் உலகில் இருந்து ஒட்டுமொத்தமாக அழிந்து போயுள்ளது.

குறிப்பாக பிளாஸ்டிக் காரணமாக அனைத்து வகையான உயிரினங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் இல்லாத வாழ்க்கையை நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாது என்ற நிலை ஏற்கனவே உருவாகிவிட்டது.

 பிளாஸ்டிக்

பிளாஸ்டிக்

உலகின் மனிதர்கள் மற்றும் விலங்குகள் இல்லாத இடங்களைக் கூட கண்டுபிடித்துவிடலாம். ஆனால், பிளாஸ்டிக் இல்லாத இடங்களைக் கண்டுபிடிப்பது கடினமாகி விட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான், மனித ரத்தத்தில் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அந்த அதிர்ச்சியில் இருந்தே ஆய்வாளர்கள் இன்னும் மீளாத நிலையில், அடுத்த அதிர்ச்சியாக அண்டார்டிகாவின் பனிப்பாறைகளில் மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 அண்டார்டிகா

அண்டார்டிகா

அண்டார்டிக்காவில் பனிப்பாறைகளில் மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். இது பனி உருகுவதை விரைவுபடுத்துவது, உடல்நல அபாயங்களை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. நியூசிலாந்தில் உள்ள கேன்டர்பரி பல்கலைக்கழகத்தின் மாணவர் அலெக்ஸ் ஏவ்ஸ், 2019இல் அண்டார்டிக்காவில் உள்ள ராஸ் ஐஸ் ஷெல்ஃப் முழுவதும் 19 இடங்களில் இருந்து பனி மாதிரிகளைச் சேகரித்தார். அந்த மாதிரிகளில் தான் ஐந்து மில்லிமீட்டருக்கும் குறைவான மைக்ரோ பிளாஸ்டிக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 29 பிளாஸ்டிக் துகள்கள்

29 பிளாஸ்டிக் துகள்கள்

அண்டார்டிக்காவில் மைக்ரோ பிளாஸ்டிக் கண்டுபிடிக்கப்பட்டது வருத்தமாகச் செய்தி. இருப்பினும், அண்டார்டிக் பனியில் மைக்ரோபிளாஸ்டிக்ஸைக் கண்டறிவது உலகின் தொலைதூரப் பகுதியும் கூட பிளாஸ்டிக்கால் மாசடைந்து உள்ளதையே காட்டுகிறது என்கிறார் ஆய்வாளர்.. ஒரு லிட்டருக்கு சராசரியாக 29 மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பிளாஸ்டிக் மாசின் தீவிர தன்மை உணர்த்துவதாக உள்ளது.

 முதல்முறை

முதல்முறை

இதற்கு முன்னதாக கடலின் ஆழமான பகுதிகளிலும், ஆர்க்டிக் பனிக்கட்டிகளிலும் மைக்ரோ பிளாஸ்டி துகள்கள் காணப்பட்டன. ஆனால் இதுவரை புதிதாக விழுந்த பணியில் கண்டறியப்பட்டது இல்லை. இப்போது தான் முதல்முறையாகப் புதிதாக விழுந்த பணியில் அண்டார்டிக்காவில் பிளாஸ்டிக் துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகில் 13 வகையான பிளாஸ்டிக் மாசு தான் அதிகம் காணப்படுகிறது. அதில் கூல் டிரிங்கஸ் தயாரிக்கப் பயன்படும் PET பாட்டில்களே அதிக மாசை ஏற்படுத்துகிறது.

 எப்படி

எப்படி

மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் காற்றில் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணித்து, அண்டார்டிக்காவுக்கு வந்து இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இப்போது மனிதர்களால் ஏற்படும் மாசு காரணமாக விலங்குகள் உட்பட எந்தவொரு உயிரினமும் தப்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, பிளாஸ்டிக் மாசை தடுக்க உலக நாடுகள் ஒன்றிணைந்து உடனடியாக நடவடிக்கை எடு்க வேண்டும் என்ற மாதமும் அதிகரித்துள்ளது.

 புவி வெப்ப மயமாதல்

புவி வெப்ப மயமாதல்

பிளாஸ்டிக் பொருட்கள் பெருங்கடல்களைக் குப்பைகளை ஏற்படுத்துவது மட்டுமில்லை. அது புவி வெப்ப மயமாதலுக்குக் காரணமான கிரீன் ஹவுஸ் கேஸ்களையும் வெளியேற்றுகிறது. இது மனிதர்களுக்குப் பெரிய ஆபத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. புவி வெப்ப மயமாதல் காரணமாகப் பருவ நிலை மாற்றம் ஏற்பட்டு மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.

 பிளாஸ்டிக்

பிளாஸ்டிக்

1950களில் இருந்து, சுமார் 8.3 பில்லியன் டன் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது, அதில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவை நிலப்பரப்புகளில் ஆறுகளில் பெருங்கடல்களில் கொட்டப்பட்டன. 2019இல் மட்டும் சுமார் 460 மில்லியன் டன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டது, இது 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இரண்டு மடங்கு அதிகமாகும். பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+