மைக்ரோசாப்ட் விண்டோஸ் செயலிழப்பு! உலக அளவில் வங்கி, விமான சேவைகளில் பெரும் பாதிப்பு
வாஷிங்டன்: உலகளவில் மைக்ரோசாப்ட் மென்பொருள் செயலிழந்துள்ளது. இதனால் மைக்ரோசாப்ட் இயங்குதளம், செயலிகள் உள்ளிட்டவை உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சிக்கலை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மைக்ரோசாப்ட் 365, XBox, Outlook ஆகியவை செயலிழந்துள்ளது. இதனால் மீடியா, தொழில்நுட்பம், வங்கி சேவை, மருத்துவ சேவை, விமான சேவை, அமேசான் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பிரச்சினையை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Crowdstrike அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல்களால் மைக்ரோசாப்ட் விண்டோஸ் சாப்ட்வேரில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட் பயனாளர்களின் பலரது கம்ப்யூட்டர்களில் Blue screen of Death Error ஏற்பட்டுள்ளது. அதாவது உங்கள் சாதனம் சிக்கலில் உள்ளதாக குறிப்பிட்டு ஆபரேட்டிங் சிஸ்டமே முடங்கிவிட்டது.
லண்டனை சேர்ந்த ஸ்கை நியூஸ் விண்டோஸ் சேவை பாதிப்பால் ஒளிபரப்பை நிறுத்தியுள்ளது. ஸ்கை நியூஸ் ஸ்போர்ட்ஸ் தொகுப்பாளர் ஜா்கி பெல்ட்ரா் தனது எக்ஸ் வலைதள பதிவில் தெரிவித்துள்ளார். அது போல் டிவி, ரேடியோ, பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்ட வணிகங்கள் என உலகம் முழுவதும் விண்டோஸ் சாப்ட்வேர் குளறுபடியால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் விண்டோஸ் சேவைகள் முடங்கிய நிலையில் அந்த நாட்டு அரசு அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
விண்டோஸ் எக்ஸ்பியில் தற்போது 11 ஆவது பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல புதிய அப்டேட்டுகளுடன் இந்த ஆபரேட்டிங் சிஸ்டம் செயல்படுகிறது. இதற்காக தொழில்நுட்ப ரீதியில் பல வரவேற்புகள் கிடைத்துள்ளன.
இந்த நிலையில் இந்த செயலிழப்பு குறித்து பல நெட்டிசன்கள் நீல நிற ஸ்கிரீனை ஸ்கிரீன்ஷாட் எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். அதில் ஒருவர் வார இறுதிக்கு முந்தைய நாள் மைக்ரோசாப்ட் கூடுதலாக ஒரு விடுமுறை கொடுத்துவிட்டதாக கூறியிருக்கிறார்.
நீல நிற ஸ்கிரீன் என்பது சாப்ட்வேரே செயலிழந்ததை குறிக்கிறது. அதாவது விண்டோஸ் இயங்குதளம் ஆபத்தான நிலையில் உள்ளது. இனி அதில் பாதுகாப்பாக செயல்பட முடியாது என்பதைத்தான் Blue screen of Death என்கிறார்கள். மைக்ரோசாப்ட் நிறுவனமானது ஏப்ரல் 4ஆம் தேதி 1975 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம்தான் கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் அசுர வளர்ச்சி பெற்றுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக (CEO) தற்போது இந்திய வம்சாவளியை சேர்ந்த சத்ய நாதெல்லா பதவி வகித்து வருகிறார். இவர் ஹைதராபாத்தில் பிறந்தவர். சத்ய நாதெல்லா 1992ஆம் ஆண்டு முதல் மைக்ரோசாப்ட் நிறுவனத்திலேயே பணிபுரிந்து இந்த நிறுவனத்தின் உச்ச பதவிக்கு கடினமாக உழைத்து முன்னேறியவர் என்பதுதான் சிறப்பு.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications