அமெரிக்காவின் மாடெர்னா தடுப்பு மருந்து கொரோனாவை குணப்படுத்தும்- முழு பாதுகாப்பானது என அறிவிப்பு
வாஷிங்டன்: அமெரிக்காவின் மாடெர்னா நிறுவனத்தின் தடுப்பு மருந்து கடுமையான கொரோனா பாதிப்பை குணப்படுத்தக் கூடியதும் பாதுகாப்பானதும் என அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம் அறிவித்துள்ளது.
உலக நாடுகள் முழுவதும் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைகளை முழு வீச்சில் மேற்கொண்டு வருகின்றன. ஒவ்வொரு தடுப்பு மருந்தும் சோதனைகளுக்குப் பின்னர் எத்தனை விழுக்காடு பாதுகாப்பானது எனவும் அறிவிக்கப்பட்டு வருகிறது.

அமெரிக்காவின் மாடெர்னா நிறுவனத்தின் தடுப்பு மருந்து 30,000 பேருக்கு செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. இந்த பரிசோதனைகளில் கடுமையான கொரோனா பாதிப்பை மாடெர்னா குணப்படுத்தக் கூடியது; முழுமையான பாதுகாப்பானது என அமெரிக்காவின் உணவு, மருந்துகள் கட்டுப்பாட்டு நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் இது 94.1% பாதுகாப்பானது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த மருந்து ஆபத்தானது இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஏற்கனவெ ஃபைசர்- பயோஎன்டெக் நிறுவனத்தின் தடுப்பு மருந்து பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மாடெர்னா தடுப்பு மருந்தும் பாதுகாப்பானது என அமெரிக்கா ஒப்புதல் தந்தால் அடுத்தவாரம் முதல் பொதுமக்களுக்கு இது கொடுக்கப்படலாம். மாடெர்னா, ஃபைசர் நிறுவனங்களின் 200 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பு மருந்துகளை 2021-ம் ஆண்டின் முதல் கால் பகுதியில் பெறுவதற்கு அமெரிக்கா ஏற்கனவே ஒப்பந்தம் போட்டிருகிறது. அமெரிக்காவில் இந்த கொரோனா தடுப்பு மருந்துகள் இலவசமாகவே வழங்கப்பட உள்ளன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications