Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிரம்ப் வைத்த டிமாண்ட்! நோ சொன்ன மோடி.. வரி மோதலுக்கு நோபல் பரிசுதான் காரணமா? பரபர தகவல்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியா மீது கடுமையான வரிகளை விதித்துள்ள நிலையில், இருநாடுகளுக்கும் இடையேயான வர்த்தக மோதலுக்கு, டிரம்பின் கோரிக்கையை மோடி ஏற்காததே காரணமாக இருக்கலாம் என்று அமெரிக்க நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. நோபல் பரிசு விவகாரத்தில் டிரம்பின் கோரிக்கையை பிரதமர் மோடி திட்டவட்டமாக மறுத்ததால், அதன் வெளிப்பாடாக டிரம்ப் இப்படி நடந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்தியா - அமெரிக்கா இடையே முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வர்த்தக உறவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய இறக்குமதி பொருட்கள் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் 50 சதவீத வரியை விதித்துள்ளது. டிரம்பின் இந்த வரி விதிப்பு காரணமாக இந்திய பொருட்கள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

modi-refusal-to-back-trump-for-nobel-prize-strained-us-india-relations-says-report

இந்திய பொருளாதாரம் யானை போன்றது

இந்தியாவை வரி அரசன் என்றும், நட்பு நாடாக இருந்தாலும் இந்தியா, வர்த்தகம் செய்வதற்கு நல்ல நாடு இல்லை என்றும் விமர்சித்த டிரம்ப், இந்திய பொருளாதாரத்தை இறந்த பொருளாதாரம் என்றும் கடுமையாக விமர்சித்தார். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யக்கூடாது என்றும் கூறிய டிரம்ப், இந்தியாவுக்கு எதிராக இதை காரணம் காட்டியும் இந்தக் கடுமையான வரியை விதித்துள்ளார்.

டிரம்பின் நடவடிக்கைக்கு அமெரிக்காவில் இருந்தே கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருக்கும் இந்திய பொருளாதாரம் யானை போன்றது எனவும், அமெரிக்காவின் பொருளாதாரம் எலி போன்றது என விமர்சித்த அமெரிக்க பொருளாதார நிபுணர் ரிச்சர்ட், அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை யானையுடன் எலி மோதுவது போல உள்ளது என்றும் விமர்சித்துள்ளார்.

இந்தியா - பாக். மோதலை நான் தான் தடுத்து நிறுத்தினேன்

அமெரிக்காவில் இருந்தே இப்படி எதிர்வினைகள் கிளம்பினாலும் டிரம்ப் தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார். அதுமட்டும் இன்றி பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டி இந்தியாவை சீண்டும் செயலிலும் டிரம்ப் ஈடுபட்டுள்ளார். இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத போர் ஏற்பட்டு இருக்க கூடும் என்றும், இந்த மோதலை நான் தான் தடுத்து நிறுத்தினேன் என்றும் தம்பட்டம் அடித்து வரும் டிரம்ப், இதுவரை 40 முறை இந்த கருத்தை கூறியுள்ளார்.

ஆனாலும் பாகிஸ்தான் விவகாரத்தில் எந்த ஒரு மூன்றாம் நாடும் தலையிடவில்லை என்று மத்திய அரசு கூறி வருகிறது. இப்படியாக இந்தியாவுடன் மோதல் போக்குடன் டிரம்ப் நடந்து கொள்வதற்கு என்ன காரணம் என்பது பற்றிய புதிய தகவலை அமெரிக்க நாளேடான நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக நியூயார்க் டைம்ஸ் கட்டுரையில் கூறியிருப்பதாவது:-

நோபல் பரிசுக்கான டிரம்பின் பரிந்துரை

ஜி7 உச்சி மாநாட்டிற்காக கனடாவில் இருந்த மோடியுடன் டிரம்ப் தொலைபேசியில் பேசினார். அப்போது, அமைதிக்கான நோபல் பரிசுக்கு பாகிஸ்தான் தன்னை பரிந்துரைக்கப் போவதாக டிரம்ப் மோடியிடம் கூறினார். எனினும், டிரம்பிடம் தனது கடும் அதிருப்தியை காட்டிய மோடி, "இந்தியா - பாகிஸ்தான் ராணுவ மோதல் முடிவுக்கு வந்ததில் மூன்றாம் தரப்பு நாடுகளுக்கு பங்கு எதுவும் இல்லை" என்று கூறியுள்ளார்.

பிரதமர் மோடியின் கருத்துக்களை டிரம்ப் நிராகரித்தே பேசி வருகிறார். எனினும், நோபல் பரிசுக்கான டிரம்பின் பரிந்துரைக்கு மோடி ஆதரவளிக்க மறுத்ததும், இரு தலைவர்களுக்குமிடையேயான நல்லுறவில் கசப்புணர்வு ஏற்பட முக்கிய பங்கு வகித்தது" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மோடி - டிரம்ப் உரையாடல் உண்மையா?

மோடி - டிரம்ப் உரையாடல்கள் குறித்து அறிந்தவர்கள், தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையிடம் பேசும்போது, "டிரம்ப் தனது பரிந்துரைக்கு மோடியின் ஆதரவையும் மறைமுகமாக நாடினார். ஆனால் மோடி, அமெரிக்காவிற்கு இதில் எந்தப் பங்கும் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்" என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரம்பும் மோடியும் கடந்த ஜூன் 17 ஆம் தேதிக்கு பிறகு தொலைபேசி வாயிலாக பேசிக்கொள்ளவில்லை. இந்த உரையாடல் முடிந்த சில நாட்களில் பேசிய டிரம்ப், தனக்கு நோபல் பரிசு கிடைக்காது என்றும் கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+