நாடு கடத்தப்படும் இந்தியர்கள்! பரபரப்பான சூழலில் டிரம்பை சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி
நியூயார்க்:அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, இந்தியா நேரப்படி இன்று அதிகாலை 2.30 மணிக்கு சந்தித்து பேசினார்.
டிரம்ப் பதவியேற்பு விழாவுக்கு மோடி அழைக்கப்படாதது விவாதமாக இருந்தாலும், இந்த சந்திப்பின்போது கூடுதல் வரி மற்றும் நாடு கடத்தப்படும் இந்தியர்கள் குறித்து மோடி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க இந்தியா உறவில் தற்போது விரிசல் விழ தொடங்கியுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இரண்டு விஷயங்கள் இருக்கின்றன.
1. Reciprocal Tariffs - இருதரப்பு வரி
2. நாடு கடத்தப்படும் இந்தியர்கள்
முதல் விஷயத்தை பொறுத்த வரை, அமெரிக்க பொருட்களுக்கு இந்தியாவில் எவ்வளவு வரி விதிக்கப்படுகிறதோ, அதே அளவுக்கு அமெரிக்காவில் இந்திய பொருட்களுக்கு வரி விதிக்கப்படும். இது அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் பாதிப்பைதான் ஏற்படுத்தும். காரணம் இந்திய பொருட்களின் விலை உயரும்போது, அமெரிக்க மக்கள் இதற்கு மாற்று பொருளை தேடுவார்கள். எனவே இந்தியாவுக்கான வருவாய் குறையும்.
அதேபோல, இந்தியாவில் உற்பத்தி செய்தால் விலை குறைவு என்பதால்தான் அமெரிக்க நிறுவனங்கள் இங்கு வருகின்றன. ஆனால் உற்பத்தி செய்த பொருளை வாங்க ஆள் இல்லை எனில் எதற்காக இங்கு உற்பத்தி செய்ய வேண்டும்? பேசாமல் அமெரிக்காவிலேயே தொழிற்சாலையை தொடங்கலாமே! என நிறுவனங்கள் பொட்டியை கட்டிக்கொண்டு அங்கு சென்றுவிடும். சரி அங்கு போனால் பிரச்சனை இருக்காதா? என்று கேட்டால்.. அமெரிக்காவில் தொழிலாளர் சட்டம் செம ஸ்ட்ராங். எனவே ஊழியர்களுக்கு அதிக ஊதியம் தர வேண்டும்.
இது அமெரிக்காவில் விலைவாசி விஷயத்தை கிளறிவிட்டுவிடும். எனவே Reciprocal Tariffs அமெரிக்காவுக்கும் பலன் கொடுக்காது. இப்படியான வரியை விதிக்க வேண்டாம் என்று மோடி வலியுறுத்த வாய்ப்பு இருக்கிறது.
இரண்டாவது விஷயத்தை பொறுத்த அளவில், சட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியர்களை திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும் என்று டிரம்ப் தரப்பு வலியுறுத்த வாய்ப்பு இருக்கிறது.
ஏற்கெனவே இந்தியர்களை போர் விமானத்தில் கை, கால்களில் சங்கிலி போட்டு கட்டி அழைத்து வந்தது எதிர்க்கட்சிகளிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது. இனியும் இதுபோன்று நடக்க கூடாது எனில், இந்திய அரசே அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை தனி விமானத்தில் அழைத்துகொள்ள வேண்டும். இது குறித்து இரு தலைவர்களும் பேசுவார்கள் என்று சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் H-1B விசாவை முடிவுக்கு கொண்டுவரக்கூடாது என்று இந்தியா தரப்பில் வலியுறுத்தலாம் என்றும் சொல்லப்படுகிறது.
இந்திய நேரப்படி நள்ளிரவு 12.15 மணியளவில் அமெரிக்க அதிபர் மாளிகையில், எலான் மஸ்க், சுந்தர் பிச்சை உள்ளிட்டோரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இதனையடுத்து அதிகாலை 2.30 மணியளவில் டிரம்பை சந்தித்து பேசினார்.
-
கொத்தடிமை முறையை ஒழிக்க இந்தியா தவறிவிட்டதாம்.. கூடுதல் வரிக்கு காரணம் சொல்லும் டிரம்ப்! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
நெதன்யாகுவை திட்டியது உண்மைதான்.. லெபனான் விவகாரத்தில் நடந்தது என்ன? ஓபனாக பேசிய டிரம்ப்! -
"மோடியை மிரட்டுவது ஆபத்து.." புதின் சொன்ன வார்த்தை.. அப்படியே டிரம்ப் மீதும் பாய்ச்சல் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications