பூமியில் இப்படி நடக்கவே கூடாதே.. "5000 மர்ம நிகழ்வுகள்.." மிரண்டு நிற்கும் ஆய்வாளர்கள்! பரபர பின்னணி

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: நமது பிரபஞ்சத்திலேயே ஏற்படும் மிக மிக வலிமையான நிகழ்வு பூமியிலும் ஏற்படுவதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதுவும் 10 ஆண்டுகளில் இதுபோல பல ஆயிரம் நிகழ்வுகள் நடந்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்த உலகம் பல்வேறு மர்மங்கள் நிறைந்த ஒன்றாகவே இருக்கிறது. இந்த மர்மங்களுக்கு விடை கண்டுபிடிக்க ஆய்வாளர்கள் தொடர்ச்சியாக ஆய்வுகளைச் செய்கிறார்கள்.

 More than 5000 mysterious bursts are discovered in earth during heavy rain

அப்படி தான் இப்போது பிரபஞ்சத்திலேயே ஏற்படும் மிகச் சக்திவாய்ந்த நிகழ்வு பூமியில் ஏற்படுவதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது வானியல் சார்ந்த மிக முக்கிய கண்டுபிடிப்பாகப் பார்க்கப்படுகிறது.

காமா கதிர்கள்: அப்படி விண்வெளி சார்ந்த ஆய்வுகளுக்கு அமெரிக்கா அனுப்பிய டெலஸ்கோப் தான் ஃபெர்மி காமா-கதிர் விண்வெளி தொலைநோக்கி.. அந்த டெலஸ்கோப் தான் இப்போது மிக முக்கிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளது. இடி மின்னல் சமயங்களில் அதீத சத்தம் ஏற்படும் நிலையில், அதில் உள்ள மர்மத்தைக் கண்டுபிடித்துள்ளனர். இவை பொதுவாகப் பிரபஞ்சத்தில் உள்ள கருந்துளைகள், நியூட்ரான் நட்சத்திரங்கள், காமா- கதிர் வெடிப்புகள் போன்ற மிகப் பெரிய நிகழ்வுகளில் மட்டுமே கண்டறியக்கூடியது என்பதே இதை முக்கியமானதாக மாற்றுகிறது.

10 ஆண்டுகளில் மட்டும் இந்த டெலஸ்கோப் சுமார் 5000 நிகழ்வுகளைக் கண்டறிந்தது. ஆனால் இப்போது, ​​ஒவ்வொரு நாளும் இதேபோல சுமார் 10,000 ஃப்ளாஷ்கள் நடப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 10 ஆயிரம் நிகழ்வுகள் நடக்கிறது என்றால் டெலஸ்கோப் ஏன் இவ்வளவு குறைவாகக் கண்டுபிடித்துள்ளது என்ற சந்தேகம் வரலாம். இந்த டெலஸ்கோப் அதன் வழக்கமான பாதையில் இருந்து 500 மைல்களுக்குள் இருப்பதை மட்டுமே கண்டறிய முடியும் என்பதாலேயே குறைவான எண்ணிக்கையில் இதனால் கண்டறிய முடிந்துள்ளது.

எங்கே இருக்கும்: GRB எனப்படும் காமா-கதிர் வெடிப்புகள் என்பது விண்வெளியின் தொலைதூர பகுதிகளிலிருந்து வரும் காமா-கதிர் ஒளியின் மிகச் சக்திவாய்ந்த ஃப்ளாஷ்கள் ஆகும். அவை பிரபஞ்சத்தில் ஏற்படும் மிகவும் ஆற்றல் மிக்க நிகழ்வுகளாகும். இந்த நிகழ்வுகளில் நமது சூரியன் தனது வாழ்நாள் முழுவதும் வெளியிடும் ஆற்றலை விட அதிக ஆற்றலை ஒரு சில நொடிகளில் வெளிப்படும்.

இவ்வளவு வலிமையான நிகழ்வுகள் தான் இடி மின்னல் ஏற்படும் போது பூமியில் ஏற்படுகிறதாம். புயல் காரணமாக மழை பெய்யும் போது சூடான, ஈரப்பதமான காற்று உயர்ந்து குளிர்ந்த காற்றுடன் மோதுவதால், ஈரப்பதம் நீர்த்துளிகளாக மாறுகிறது. இந்த நீர்த்துளிகள் மேலே செல்லும்போது, ​​​​அவை மேகங்களுடன் மோதுகின்றன.. அப்போது மேகத்திற்குள் ஒரு நிலையான சார்ஜ் உருவாகிறது.

எப்படி: இதனால் புயலின் மேற்பகுதியில் பாசிடிவ் சார்ஜ் ஏற்படுகிறது. அதேபோல புயலின் கீழ்ப் பகுதி நெகட்டிவாக சார்ஜ் ஆகிறது, இது பேட்டரியை போல மாறி, சார்ஜ் இன்சுலேடிங் காற்றைக் கடக்கும்போது, ​​மின்னல் ஏற்படுகிறது. மின்னல் மேகத்தில் எலக்ட்ரான்கள் அதிவேகமாக நகரும். அப்போது அங்கே காமா-கதிர் ஃப்ளாஷ்களை உருவாக்குகின்றன.

பூமியில் பொதுவாக இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காது என்றே ஆய்வாளர்கள் இதுவரை நினைத்த நிலையில், அதற்கு நேர்மாறாக இது இருக்கிறது. இதன் மூலம் பூமியில் நிகழும் மிகவும் சக்திவாய்ந்த இயற்கை நிகழ்வாக இடி மின்னல் மாறுகிறது. கடந்த 2008 முதல் 2018 வரை ஏற்பட்ட காமா ஃப்ளாஷ்களை தான் நாசா இப்போது வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 2014ஆம் ஆண்டில் வெப்பமண்டல புயல் ஜூலியோ ஏற்பட்ட போது வெறும் 100 நிமிடங்களில் நான்கு ஃப்ளாஷ்கள் உருவானதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+