அமெரிக்காவால் 1970க்கு பிறகு உலகம் சந்திக்கும் கடுமையான நெருக்கடி! எச்சரித்த வால் ஸ்ட்ரீட் ஜர்னல்!
வாஷிங்டன்: டிரம்ப், இஸ்ரேலுடன் சேர்ந்து கொண்டு தொடங்கி வைத்திருக்கும் ஈரான் போர் காரணமாக, மொத்த உலகமும் எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொண்டிருக்கிறது. கடந்த 1970களில் எதிர்கொண்ட நெருக்கடியை போலவே இப்போதும் நெருக்கடியை உலக நாடுகள் எதிர்கொண்டிருக்கின்றன என்று அமெரிக்க செய்தி ஊடகமான 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' எச்சரித்துள்ளது.
இந்தியாவில் ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உச்சத்தில் இருக்கிறது. இந்த சூழலில், மீண்டும் எரிபொருள் விலை உயர்ந்தால், அது பெரிய பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தும்.

1970களில் என்ன நடந்தது?
1970களில் இரண்டு சம்பவங்கள் நடந்தது. இரண்டும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேலை நாடுகளை உலுக்கி எடுத்துவிட்டது. முதல் சம்பவம் 1973ல் நடந்தது. எகிப்து மற்றும் சிரியா தலைமையில் அரபு நாடுகள் இஸ்ரேல் மீது போர் தொடுத்தது. ஆனால், இஸ்ரேலை காப்பாற்ற அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுக்கு ராணுவ உதவிகளை வழங்கியது.
எண்ணெய் விலை அதிகரிப்பு
இதனால் எரிச்சலடைந்த அரபு நாடுகள், குறிப்பாக சவுதி தலைமையிலான எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு (OPEC) மேற்கு நாடுகளுக்கு எண்ணெய் வழங்க தடை போட்டது. இந்த தடை காரணமாக கச்சா எண்ணெய் விலை 4 மடங்கு அதிகரித்தது. அமெரிக்காவிலும், பிரிட்டனிலும் பெட்ரோலுக்காக வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து கிடந்தன.
இரண்டாவது சம்பவம்
இரண்டாவது சம்பவம் நடந்தது 1979ல். இந்த காலத்தில்தான் ஈரானில் புரட்சி வெடித்தது. ஷா மன்னருக்கு எதிராக புரட்சி நடத்தி இஸ்லாமிய அமைப்புகள் ஆட்சி அதிகாரத்தை பிடித்தன. ஆனால், புதிய இஸ்லாமிய அரசு அமெரிக்காவுடன் விரோத போக்கை கடைபிடித்தது. குறிப்பாக ஈரானில் இருந்த அமெரிக்க தூதரர்களை பிணை கைதிகளாக பிடித்தது. இதனால் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படும் என்று பயந்த மற்ற நாடுகள், அவசர அவசரமாக எண்ணெய்யை சேமிக்க தொடங்கின.
இது உலக அளவில் எண்ணெய் விலையை உச்சத்தில் ஏற்றியது. பல நாடுகளில் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டது. தற்போது இதுபோன்ற ஒரு நெருக்கடியில்தான் மொத்த உலகமும் சிக்கியிருப்பதாக 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' எச்சரித்துள்ளது.
வால் ஸ்ட்ரீட் ஜர்னல் சொன்னது என்ன?
உலக அளவில் நடக்கும் எண்ணெய் போக்குவரத்தில் 20% ஹர்முஸ் நீரினை வழியாகத்தான் நடக்கிறது. இந்த பாதையை ஈரான் முடக்கியிருக்கிறது. இதனால் கச்சா எண்ணெய் விலை 20%ஐ அதிகரித்திருக்கிறது. உக்ரைன் போருக்கு பிறகு மீண்டும் எண்ணெய் விலை அதிகரித்திருக்கிறது. சவுதி அரேபியா, குவைத், கத்தாரின் எண்ணெய் உற்பத்தி மையங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தலாம் என்கிற அச்சம் ஏற்பட்டிருப்பதால் உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது.
இதனால் ஏற்பட்டிருக்கும் விலை உயர்வை, வெறும் சாதாரண விலை உயர்வு என்று கடந்துவிட முடியாது. இது உலக எரிபொருள் விநியோக சங்கிலியில் ஏற்பட்டிருக்கும் உடைப்பு என்றும் 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' கூறியுள்ளது.
-
ஈரான் தினமும் 1310 கோடி சம்பாதிக்கிறது.. ஹார்முஸ் ஜலசந்தியில் என்ன நடக்கிறது தெரியுமா? -
போர் ஒருபக்கம் இருக்கட்டும்.. 10 கப்பல்களில் எண்ணெய் பரிசாக கொடுத்த ஈரான்! டிரம்ப் பெருமிதம் -
அது வேற வாய்.. இது வேற வாய்! பாகிஸ்தானை அசிங்கப்படுத்திய ஈரான்! அடுத்த நாளே திடீர் ட்விஸ்ட்! என்ன? -
Iran: அமெரிக்காவின் F18 போர் விமானத்தை குருவியை சுடுவது போல சுட்டு வீழ்த்திய ஈரான் ராணுவம்.. வீடியோ! -
புஷ் போட்ட அதே உத்தரவு.. ராணுவ வீரர்கள் வயதை உயர்த்திய டிரம்ப்! பல லட்சம் பேரை ஈரானில் இறக்க முடிவு? -
ஈரான் போரில் தலையைவிட்ட புடின்.. ரஷ்யாவின் 'நிழல்' ஆட்டம்! பறந்து போன பார்சல்.. ஆபரேஷன் ஹிடன் ஹேண்ட் -
ஈரானுக்கு மேலும் 10 நாட்கள் அவகாசம்.. வழிக்கு வந்த டிரம்ப்! போருக்கு குட்டி பிரேக்! -
அபுதாபியை குறிவைத்து ஈரான் அட்டாக்.. வீதிகளில் சிதறிய ஏவுகணை சிதைவுகள்! இந்தியர் பலி, பலர் காயம் -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
ஈரானின் உச்ச தலைவராக.. என்னை பொறுப்பேற்க சொன்னார்கள்! நான்தான் வேண்டாம் என சொல்லிட்டேன் - டிரம்ப் -
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
Donald Trump: டிரம்ப் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருகிறார்.. ஈரானை மீண்டும் மிரட்டும் அமெரிக்கா












Click it and Unblock the Notifications