4 வருட தலைமறைவு.. சூடான பிரெஞ்ச் பிரைஸுக்கு ஆசைப்பட்டு.. போலீசில் சிக்கிய குற்றவாளி!
நான்கு வருடமாக தலைமறைவாக இருந்த கொலைக் குற்றவாளி, பிரெஞ்ச் பிரைஸுக்கு ஆசைப்பட்டு, தானே போலீசில் சிக்கிய சுவாரஸ்யமான சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.
வாஷிங்டன்: அமெரிக்காவில் பிரெஞ் பிரைஸ் சூடாக இல்லை என்பதற்காக போலீசை அழைக்கப் போய், நான்கு வருடமாக தேடப்பட்டு வந்த கொலை வழக்கில் தானாகவே சிக்கி இருக்கிறார் தலைமறைவாக இருந்த குற்றவாளி ஒருவர்.
Recommended Video
கோபம் நம்மைப் பல பிரச்சினைகளில் சிக்க வைத்து விடும். கோபத்தில் நிதானத்தை இழக்காமல் இருந்தால், நிச்சயம் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். குறிப்பாக சின்னச் சின்ன அல்ப விஷயங்களுக்கு கோபப்படுபவர்கள், பிரச்சினைகளை விலை கொடுத்துத்தான் வாங்கிக் கொள்வார்கள். அமெரிக்காவில் நடந்துள்ள இந்த சம்பவமே அதற்கு நல்லதொரு உதாரணம்.
சாப்பிடப் போன உணவகத்தில் பிரெஞ்ச் பிரைஸ் சூடாக இல்லை என கோபத்தில் இளைஞர் போட்ட சண்டை அவரை போலீசில் சிக்க வைத்துள்ளது.

ரசீது தரவில்லை
சம்பவத்தன்று அமெரிக்காவின் ஜார்ஜியா பகுதியில் உள்ள மெக்டொனால்ட் கடைக்கு சென்றுள்ளார் அன்டைன் சிம்ஸ் என்ற இளைஞர். அங்கு சாப்பிடுவதற்காக பிரெஞ்ச் பிரைஸ் ஒன்றை அவர் ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவருக்கு வழங்கப்பட்ட பிரெஞ்ச் பிரைஸ் சூடாக இல்லாமல், ஆறிப்போய் இருந்ததாகக் கூறப்படுகிறது.

போலீசில் புகார்
இதனால் கோபமடைந்த அவர், அங்கிருந்த ஊழியர்களுடன் சண்டையிட்டுள்ளார். தங்களது தவறுக்கு மெக்டொனால்ட் ஊழியர்கள் வருத்தம் தெரிவித்தபோதும், சிம்ஸின் கோபம் அடங்கவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக போலீசிற்கு போனில் அவர் புகார் அளித்துள்ளார்.

சிக்கிய குற்றவாளி
அந்தப் புகாரின் அடிப்படையில் கடைக்கு விரைந்து வந்த போலீசார், சிம்ஸிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டுள்ளனர். அப்போதுதான், பழைய கொலை வழக்கு ஒன்றில் தேடப்பட்டு வருபவர் சிம்ஸ் என்பது போலீசாருக்கு தெரிய வந்தது. தன் வாயால் தானே சிக்கிக் கொண்டது அப்போதுதான் சிம்ஸுக்கு புரிந்தது.

துரத்திப் பிடித்த போலீஸ்
போலீசார் தன்னை அடையாளம் கண்டு கொண்டது தெரிந்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்துள்ளார் சிம்ஸ். ஆனால், அவரைத் துரத்திச்சென்று போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவங்கள் அனைத்தும் போலீசாரின் பாக்கெட்டில் இருந்த கேமராவில் பதிவாகிய நிலையில், தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளிவந்துள்ளது.

தேடப்பட்டு வந்த குற்றவாளி
கடந்த 2018ம் ஆண்டு அமெரிக்காவில் ஒரு பெண்ணின் உடலை காருக்குள் வைத்து எரித்த வழக்கில் தேடப்பட்டு வந்தார் சிம்ஸ். கடந்த நான்கு ஆண்டுகளாகப் போலீசார் அவரைத் தேடி வந்த நிலையில், தலைமறைவாக இருந்த அவரே, பிரெஞ்ச் பிரைஸ் ஆசையில் தானே போலீசுக்கு போன் செய்து, வசமாகச் சிக்கியுள்ளார்.
-
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு மட்டும் தடை.. AI வைத்து அமெரிக்கா ஆடும் கேம்? பின்னணி -
ஒரே நாளில் 56 ஐபிஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்.. 17 மாவட்ட எஸ்.பிக்கள் அதிரடியாக மாற்றம் - அரசு உத்தரவு -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை!












Click it and Unblock the Notifications