திடீரென வெளியுறவுத்துறை மீது ஆர்வம் காட்டியது ஏன்? மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சொன்ன செம காரணம்
வாஷிங்டன்: ‛‛வெளிநாட்டு மியூசிக், உணவு மீதான நாட்டம் தான் வெளிநாட்டு சேவை துறையில்(Foreign services) பணி செய்யும் ஆர்வத்தை அதிகரித்தது'' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மாணவ-மாணவிகளுடனான கலந்துரையாடலில் கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருப்பவர் ஜெய்சங்கர். இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை செயலாளராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
வெளியுறவுத் துறையில் ஏறக்குறைய 40 ஆண்டுகள் அனுபவம் கொண்ட இவர் தற்போது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக செயல்பட்டு வருகிறார்.

2 பிளஸ் 2 பேச்சுவார்த்தை
இந்நிலையில் தான் இந்தியா-அமெரிக்கா இடையே 2 பிளஸ் 2 என்ற பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. நேற்று வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், ராணுவத்துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டின் ஆகியோரை முறையே மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ராணுவத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஜெய்சங்கரிடம் கேள்வி
இந்ந வேளையில் வெளியுறவுத்துறை அமைச்சர்களாக ஆண்டனி பிளிங்கன், ஜெய்சங்கர் ஆகியோர் ஹோவர்ட் பல்கலைக்கழக மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினர். அப்போது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் ஒருவர், ‛‛வெளிநாடுகளின் உறவுகள் தொடர்பான இந்த துறை மீதுஅதிக நாட்டம் வந்தது எப்போது?. இதற்கான காரணம் என்ன?'' என கேள்வி எழுப்பினார். இதற்கு புன்சிரிப்போடு ஜெய்சங்கர் பதிலளித்தார். அவர் கூறியதாவது:

மியூசிக்
எனக்கு வெளிநாடுகள் மீது ஆர்வம் வர மியூசிக் தான் காரணம். உங்கள் சொந்த நாட்டின் மியூசிக்கிற்கு அப்பாற்பட்டு புதிய இசையை நீங்கள் கேட்கும்போது வியந்து இருக்கலாம். ஏனென்றால் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வகையான மியூசிக் உள்ளது. இதை கேட்கும்போது அது எந்த மாதிரியான இசை. அது எந்த வகை கருவியில் இருந்து வருகிறது என்பதற்கான ஆவல் ஏற்பட்டது. நான் முதன்முதலில் 1959ல் அமெரிக்காவில் 'தி ஹிட்மேக்கர்ஸ்' ஆல்பம் கேட்டேன். இது அத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்போதும் அதை நினைவில் வைத்து அடிக்கடி கேட்டு வருகிறேன். வெளிநாடுகள் மீதான ஆர்வத்துக்கு மியூசிக் தான் முதன்மையானது.
Recommended Video

உணவு, குடும்ப சூழல்
இதற்கு அடுத்ததாக உணவு மற்றும் குடும்ப சூழலையும் கூறுவேன். இளமையாக இருக்கும்போது உணவை விட இசையே போதுமானதாக இருக்கும் என நினைக்கிறேன். இதனால் தான் இசைக்கு அடுத்து உணவை ஒரு காரணமாக கூறுகிறேன். மேலும் குடும்ப சூழலும் ஒரு காரணமாகும். நான் 10 வயதாக இருந்தபோது எனது தந்தை பணி நிமித்தமாக அமெரிக்கா வந்தார். இங்கு படிக்கவும் சில வகையான தொழில்முறை பயிற்சிகளை மேற்கொள்ளவும் அவர் பயணப்பட்டார். இதுவும் வெளிநாடுகள் மீதான நாட்டத்தை அதிகரித்தன" என்றார்.
-
அதானிக்கு கிடைத்த மெகா அங்கீகாரம்.. உலகின் அழகான விமான நிலையங்கள் பட்டியலில் 2 இந்திய ஏர்போர்ட்டுகள் -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி -
அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
டாக்டர் சீட்டு இல்லையா? இனி சிரப் வாங்கவே முடியாது.. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு.. பின்னணி -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications