கணவருக்கு தாய்ப்பால் கொடுக்கிறேன்.. 2 வருடங்களில் ஒருமுறை கூட சளி பிடிக்கவில்லை.. மனைவி பேட்டி
வாஷிங்டன்: நான் தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிச்ச பின்னாடி, கடந்த இரண்டு வருசத்தில் ஒருமுறை கூட என் கணவருக்கு சளிபிடிக்கவில்லை என்று அமெரிக்காவைச் சேர்ந்த ரேச்சல் கூறியுள்ளார்.
தன் தாய்ப்பாலை கணவர் குடிப்பதால் அவரது சருமம் மேம்படுகிறது என்றும் அவரது ஆரோக்கியம் மேம்படுகிறது என்றும், அவர் இரண்டு வருடங்களாக நோய் வாய்படாமல் இருக்கிறார் என்றும் கூறி ரேச்சல் அதிரவைத்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர் பெய்லி வயது 30, இவரது மனைவி ரேச்சல் வயது 30. இவர்களுக்கு ஒரு வித்தியாசமான பழக்கம் இருக்கிறது. அந்த பழக்கம் சமூக வலைதளங்களில் அதிகம் விவாதிக்கப்படுகிறது. அது என்ன பழக்கம் என்றால் கணவருக்கு தாய்ப்பால் கொடுப்பது தான்.
ரேச்சல், தனது கணவர் அலெக்சாண்டருக்கு முதன்முதலாக கடந்த 2017 ம் ஆண்டு தாய்ப்பால் கொடுத்திருக்கிறார். அதன்பின்னர் இப்போது வரை தாய்ப்பால் குடிப்பது தொடர்கிறதாம்.
இதுபற்றி ரேச்சல் கூறும் போது, "நான் முதல் முதலாக 2017ம் ஆண்டு தாய்ப்பால் கொடுத்தேன். அதன்பிறகு அடிக்கடி கொடுத்தேன். ஒரு கட்டத்தில் என் கணவருக்கு நான் தாய்ப்பால் கொடுப்பதில் எந்த தவறும் இல்லை என்பதை உணர்ந்தேன். அது மிகவும் சத்தானதாக இருப்பதால் அது உண்மையில் அவருக்கு நல்லது என்றே நான் முடிவு செய்தேன்.
தாய்ப்பாலை குடிக்க ஆரம்பித்த இரண்டு வருடங்களாக அவருக்கு சளி பிடிக்கவில்லை. என் கணவரின் சருமம் மிகவும் நன்றாக இருக்கிறது என்று பலர் கூறுகிறார்கள். என் கணவரும், தாய்ப்பால் சுவையாக இருப்பதால், இப்போது பசும்பாலை விடவும் அதிகமாக விரும்புகிறார்.
அலெக்சாண்டர் என்னிடம் மிகவும் வித்தியாசமான உணர்வாக இருப்பதாக கூறினார். தாய்ப்பாலின் சுவை, அவர் குடித்து பழகிய பசும்பால் போல் இல்லை. என் கணவருக்கு முதல்முதலாக நான் தாய்ப்பால் கொடுத்தபோது, நாங்கள் கப்பல் பயணத்தில் இருந்தோம். அப்போது எனக்கு மார்ப்பகத்தில் வலி அதிகமாக இருந்தது. தாய்ப்பாலை மகளுக்கு கொடுக்க விரும்பினேன். ஆனால் என் குழந்தை குடிக்கவில்லை. இதனால் நான் மிகவும் வேதனையில் இருந்தேன். எனக்கு நோய்த்தொற்று ஏற்படுமோ என்று பயந்தேன். இதை பார்த்த என் கணவர் என்னை அந்த பயத்தில் இருந்து விடுவிப்பதற்காக, முதல் முதலாக பாலை குடிக்க முயற்சித்தார்.
அவர் என்னிடமிருந்து தாய்ப்பால் குடித்த பின்னர் நான் பதற்றம் அடைந்தேன். ஆனால் அதைச் செய்தவுடன், எனக்கு நன்றாக இருந்தது. இது மோசமான விஷயமாக எனக்கு தோன்றவில்லை, உணர்ச்சிபூர்வமான உறவின் பிணைப்பாக நாங்கள் இருவருமே உணர்கிறோம். இருவருக்குமே ஆரோக்கியத்தில் நன்மையாக இருந்தது.நான் என் கணவருக்கு தாய்ப்பால் கொடுக்கும் முன்பு என் குழந்தைக்கு போதுமானஅளவு தாய்ப்பால் கொடுப்பதை உறுதி செய்து வந்தேன்.

என் மூத்த குழந்தை ஆர்யாவுக்கு மட்டுமல்ல, இளைய குழந்தையான மத்தேயுக்கு 2 வயதில் தாய்ப்பால் கொடுக்கும் போதும் எனக்கு அதிக பால் வந்து கொண்டிருந்தது. அதனால் காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவின் போது அலெக்சாண்டருக்கு தாய்ப்பால் கொடுத்தேன். இப்போது என் கணவர் அலெக்சாண்டருக்கு இரவில் மட்டுமே தாய்ப்பால் தருகிறேன்.
இதில் என்ன ஒரு சிக்கல் என்றால், நான் இன்று என்ன சாப்பிட்டாலும், அலெக்சாண்டருக்கு அதன் விளைவுகள் வருகிறது. காரமான ஒன்றை சாப்பிட்டால், அது அலெக்சாண்டருக்கு வாயுவையும் தருகிறது. இந்த தாய்ப்பால் பழக்கம் தவறாக தோன்றினாலும் இந்த செயலுக்காக வெட்கப்படவில்லை, மோசமானது என்று நினைக்கவில்லை. இந்த பழக்கம் எங்களுக்குள் அன்பை அதிகரிக்கிறது" இவ்வாறு ரேச்சல் கூறினார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications