நிர்வாணமாக சுற்றியவரை பிடித்து சிறையில் போட்டால்.. அங்கும் அதே கதைதான்! பெண் கைதியிடம் சில்மிஷம்!
வாஷிங்டன்: பொது இடத்தில் உடம்பில் ஒட்டு துணி கூட இல்லாத சுற்றித் திரிந்த நபரை சிறையில் அடைத்தால் அங்கும் அதே மாதிரி நிர்வாணமாக சுற்றிய நபர் அங்கிருந்த பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு ஷாப்பிங் சென்டரில் டெர்பியை சேர்ந்த எரோல் மோர்கன் என்பவர் நிர்வாணமாக உடம்பில் ஒட்டு துணிக் கூட இல்லாமல் நடந்து சென்றார். இதுகுறித்து அங்கிருந்த பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர்.
இதையடுத்து நிர்வாணமாக சுற்றித் திரிந்த அந்த நபரை கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்து சிறையில் அடைத்தனர். பொதுவாக தப்பு செய்பவர்களுக்கு தண்டனை கொடுப்பதற்கு காரணம், அந்த தவறை அவர்கள் மீண்டும் செய்யாமல் இருப்பதற்காகத்தான்.

துணியே இல்லாமல்
ஆனால் அந்த நபரோ சிறைச் சாலையிலும் உடலில் துணியே இல்லாமல் வலம் வந்துள்ளார். இதனால் பெண் கைதிகளும் பெண் சிறைத் துறை அதிகாரிகளும் சங்கடத்தில் இருந்தனர். ஒரு நாள் சிறைத் துறை பெண் காவலர் மற்றும் பெண் அதிகாரி உள்ளிட்டோரிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

குளியலறை
மேலும் 33 வயதான பெண் கைதியின் குளியலறைக்குள் நுழைந்து அவரிடம் தவறாக நடந்து கொண்டார். இதையடுத்து போலீஸார் கண்டித்தும் அவர் சிறையில் உடை அணியாமலேயே இருந்துள்ளார். அது போல் ஒரு பெண் சிறை காவலரை குளியலறைக்கு இழுத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகவும் தெரிகிறது.

நீதிபதிகள்
இதையடுத்து அந்த நபர் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது எரோலை மனநலம் பாதிக்கப்பட்ட அழைத்துச் செல்ல உத்தரவிட்டார். அவர் குறிப்பிட்ட நாளுக்கு முன்பு மரு்துவமனையில் இருக்க அறிவுறுத்தப்பட்டது. மேலும் அவரை எப்போது விடுவிப்பது என்பதற்கு நீதிபதிகள் சில விதிகளை வகுத்தனர்.

7 ஆண்டுகள்
முதலில் எர்ரோலுக்கு தெரியாத யாருடனும் அவர் பேசக் கூடாது. ஓட்டல், பப், பஸ் அல்லது கடைகளுக்கு செல்லும் போது நீங்கள் அங்குள்ளவர்களிடம் பேசலாம். பெண்கள் கழிப்பறை உடை மாற்றும் அறைகளுக்குள் நீங்கள் செல்லக் கூடாது. இந்த விதிகள் எல்லாம் அடுத்த 7 ஆண்டுகள் வரை இருக்கும் என நீதிபதிகள் கூறினர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications