நிலவில் விண்வெளி வீரர்கள் கண்ட காட்சி.. செம பெரிய சர்ப்ரைஸ்! ஆச்சரியத்தின் உச்சத்தில் நாசா வீரர்கள்
வாஷிங்டன்: நாசாவின் அர்டெமிஸ் II திட்டம் மூலம் அமெரிக்க விண்வெளி வீரர்கள் நிலவுக்கு மிக அருகே சென்றுள்ளனர். அங்கிருந்தபடி அவர்கள் தீவிரமாக ஆய்வு செய்யும் சூழலில், அவர்கள் அங்கு ஒரு முழு சூரிய கிரகணத்தையும் கண்டனர். இது தொடர்பான வீடியோவை நாசா தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ள சூழலில், அது டிரெண்டாகி வருகிறது.
கடந்த நூற்றாண்டில் நிலவு குறித்து பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டன. அமெரிக்காவும் அப்போதைய சோவியத் ஒன்றியமும் போட்டிப் போட்டுக் கொண்டு விண்வெளி மற்றும் நிலவு குறித்த ஆய்வுகளை நடத்தின. இருப்பினும், சோவியத் ஒன்றியம் வீழ்ந்த பிறகு, நிலவு குறித்த ஆய்வுகள் பெரியளவில் நடக்கவில்லை. இந்தச் சூழலில் தான் இப்போது நிலவு குறித்த ஆய்வுகள் மீண்டும் சூடுபிடித்துள்ளன.

அர்டெமிஸ்
அதன் ஒரு பகுதியாகவே அமெரிக்காவின் நாசா நிலவு குறித்த ஆய்வுகளுக்கு அர்டெமிஸ் திட்டத்தைக் கையில் எடுத்தது. இதில் அர்டெமிஸ் II திட்டத்தின் நான்கு விண்வெளி வீரர்கள், ஓரியன் விண்கலத்தில் சந்திரனைச் சுற்றிய போது பூமியிலிருந்து வெகு தொலைவில் பயணித்த விண்வெளி வீரர்கள் என்ற சாதனையைப் படைத்தனர். அப்போது அவர்கள் ஒரு முழு சூரிய கிரகணத்தையும் கண்டனர்.
நாசாவின் அப்பல்லோ மிஷனுக்கு பிறகு கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மனிதர்கள் சந்திரனுக்கு அருகில் செல்லாத நிலையில், இப்போது அர்டெமிஸ் மிஷன் மூலம் அது சாத்தியமாகியுள்ளது. 1970களில் அப்பல்லோ 13 விண்கலம் சென்றதை விட அதிக தூரத்திற்கு இவர்கள் சென்றுள்ளனர். இதுவும் மிக முக்கியமான ஒரு சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
தரையிறங்காது
இந்த அர்டெமிஸ் விண்கலம் நிலவில் தரையிறங்காது. மாறாகப் பூமியைச் சுற்றி வந்து டேட்டாவை சேகரிக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த விண்கலம் நிலவைச் சுற்றி வந்தபோது பூமியுடனான தொடர்பை சுமார் 40 நிமிடங்கள் இழந்தது. அதாவது பூமியில் இருந்து செல்லும் சிக்னல் நிலா முழுமையாகத் தடுத்துவிடும். இதனால் அப்படி நிலவுக்குப் பின்னால் செல்லும்போது, நாசாவின் டீப் ஸ்பேஸ் நெட்வொர்க் டீமால் ஓரியனை நேரடித் தொடர்பு பெற முடியாது. கலிபோர்னியா, ஸ்பெயின் மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள என உலகெங்கும் ராட்சத ஆண்டெனாக்கள் இருந்தாலும் கூட நிலவுக்குப் பின்னால் செல்லும்போது அதைத் தொடர்பு கொள்ள முடியாது.!
சூரிய கிரகணம்
இந்த விண்கலம் கடந்த ஏப்ரல் 1ம் தேதி விண்ணுக்கு அனுப்பப்பட்டது. இது கூடுதல் சிறப்பம்சமாக அமைகிறது. ஏனென்றால் இந்த முழு சூரிய கிரகணம், பூமியிலிருந்து தெரியவில்லை. ஓரியன் விண்கலத்திலிருந்து மட்டுமே காணப்பட்டது. சூரியனின் வெளிப்புற வளிமண்டலமான கொரோனாவை சில நிமிடங்கள் மட்டும் விண்வெளி வீரர்கள் பார்த்தனர்.
அர்டெமிஸ் II
அர்டெமிஸ் II ராக்கெட் ஏப்ரல் 1ஆம் தேதி புதன்கிழமை புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து புறப்பட்டது. ரீட் வைஸ்மேன், ஜெர்மி ஹேன்சன், கிறிஸ்டினா கோச், விக்டர் குளோவர் ஆகிய நான்கு விண்வெளி வீரர்கள் இதில் பயணம் செய்கின்றனர். சந்திரனைச் சுற்றிய 10 நாள் பயணம் இது.
சந்திரன் சுற்றுப்பாதையிலிருந்து புறப்பட்டபின், விண்கலம் பூமிக்குத் திரும்ப நான்கு நாட்கள் தேவை. ஏப்ரல் 10ம் தேதி ஏவப்பட்ட ஒன்பது நாட்களுக்குப் பிறகு, சான் டியாகோ அருகே பசிபிக் பெருங்கடலில் விண்கலம் தரையிறங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications