இன்னும் சில மணி நேரத்தில்.. விண்வெளி வீரர்கள் உள்ள சாட்டிலைட் உடனான சிக்னலை இழக்க போகும் நாசா!
வாஷிங்டன்: நிலவை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ள அர்டெமிஸ் விண்கலம் இன்னும் சில மணி நேரத்தில் நிலவுக்கு மிக அருகே செல்லப் போகிறது. ஆனால், அதுபோல அருகே செல்லும்போது சுமார் 40 நிமிடங்கள் பூமி உடனான அனைத்து தொடர்புகளையும் இந்த விண்கலம் இழக்கப் போகிறது. அப்படி என்ன நடக்கும்.. ஏன் இதுபோல சிக்னல் கட் ஆகிறது என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
நிலவு குறித்த ஆய்வுகள் இப்போது மீண்டும் சூடுபிடித்துள்ளது. இதற்கிடையே அமெரிக்காவின் நாசா நிலவு குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள விண்வெளி வீரர்களோடு அர்டெமிஸ் விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியுள்ளது. இந்த விண்கலம் நிலவில் தரையிறங்காது. மாறாக நிலவைச் சுற்றி வரும்.

அர்டெமிஸ்
கடந்த ஏப்ரல் 1ம் தேதி ஏவப்பட்ட இந்த அர்டெமிஸ் விண்வெளி வீரர்கள் பூமியிலிருந்து ஏற்கனவே வெகுதூரம் பயணித்துவிட்டனர். இவ்வளவு காலம் அமெரிக்காவின் ஹூஸ்டனில் உள்ள கட்டுப்பாட்டு மையத்துடன் அவர்களுக்குத் தொடர்ச்சியான தொடர்பு இருந்தது. இங்கிருந்தபடியே ஆய்வாளர்கள் விண்கலத்தைத் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்த தொடர்பு விண்வெளி வீரர்கள் மற்றும் பூமியில் உள்ள ஆய்வாளர்கள் என இரு தரப்பிற்கும் நம்பிக்கை தரும் ஒன்றாக இருந்து வந்தது.
கட் ஆகும் சிக்னல்
ஆனால், இந்தத் தொடர்பு விரைவில் துண்டிக்கப்பட உள்ளது. பிரிட்டிஷ் நேரப்படி இரவு 11:47 மணிக்கு, அதாவது இந்திய நேரப்படி நாளை அதிகாலை 4.15 மணியளவில் இந்த தொடர்பு துண்டிக்கப்பட உள்ளது. எது சாட்டிலைட் உடனான தொடர்பு துண்டிக்க போகுதா.. என்ன பிரச்சனை.. அப்போ உள்ளே இருக்கும் விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக இருப்பார்களா என நமக்குப் பல கேள்விகள் எழும். ஆனால், இதில் பயப்பட எதுவும் இல்லை. எல்லாமே திட்டமிடப்பட்ட ஒன்று தான்.
அதாவது அர்டெமிஸ் விண்கலம் நிலவின் பின்னால் செல்லும்போது ரேடியோ மற்றும் லேசர் சிக்னல்கள் நிலவினாலேயே தடுக்கப்படும். இதன் காரணமாகவே சுமார் 40 நிமிடங்கள் எந்தவொரு தகவல் தொடர்பும் இருக்காது. அந்த 40 நிமிடங்கள் நான்கு விண்வெளி வீரர்களும் விண்வெளியின் இருளில் தனிமையையும், ஆழ்ந்த அமைதியையும் உணர்வார்கள்.
வழக்கமானது
அதேநேரம் விண்வெளிக்குச் செல்லும் வீரர்கள் இதுபோல சிக்னல் இழப்பைச் சந்திப்பது இது முதல்முறை இல்லை. கடந்த 50 ஆண்டுகளுக்கும் முன், அப்பல்லோ விண்வெளி வீரர்களும் நிலவுக்குச் செல்லும்போது இதேபோல சிக்னல் இழப்பால் தனிமையை அனுபவித்தனர். அப்பல்லோ 11 மிஷனில் தான் இதுபோல நடந்தது. இந்த அப்பல்லோ 11 மிஷனில் தான் அமெரிக்க விண்வெளி வீரர்கள் முதல்முறையாக நிலவில் கால் வைத்தனர்.
அப்பல்லோ மிஷன்
1969ல் இந்த மிஷனில் நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்ட்ரின் ஆகியோர் நிலவில் கால் வைத்தபோது, அப்பல்லோ விண்கலத்தில் தனியாக மைக்கேல் கொலின்ஸ் நிலவைச் சுற்றி வந்தார். அப்போது விண்கலம் நிலவின் மறுபக்கம் வழியே செல்லும்போது சுமார் 48 நிமிடங்கள் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அமெரிக்கக் கட்டுப்பாட்டு மையத்துடன் மட்டுமின்றி நிலவில் இருந்த நீல் ஆம்ஸ்ட்ராங் உள்ளிட்டோர் உடன் கூட கொலின்ஸால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அந்த 48 நிமிடங்கள் உண்மையிலேயே தனிமையை உணர்ந்ததாக அவர் பின்னாட்களில் குறிப்பிட்டார். அச்சம் இல்லை என்றாலும் ஒருவித மரண அமைதி இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
பூமியில் இருக்கும் ஆய்வாளர்களுக்கும் கூட இந்தத் தொடர்பு துண்டிப்பு ஒரு பதற்றமான தருணம். இங்கிலாந்தில் உள்ள கூன்ஹில்லி எர்த் ஸ்டேஷன் தான் நிலவைச் சுற்றி வரும் ஓரியன் காப்ஸ்யூலின் சிக்னல்களைச் சேகரித்து, அதன் நிலையை நாசாவுக்கு உடனுக்குடன் அனுப்பி வருகிறது. இது தொடர்பாக கூன்ஹில்லியின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி மாட் காஸ்பி மேலும் கூறுகையில், "மனிதர்களுடன் விண்கலத்தைக் கண்காணிப்பது இதுவே முதல்முறை. நிலவின் பின்னால் செல்லும்போது பதற்றமாகவே இருக்கும். மீண்டும் சிக்னல் கிடைக்கும்போது தான் நிம்மதியாக இருக்கும்" என்றார்.
முடிவுக்கு வரும் பதற்றம்
நிலவு குறித்த ஆய்வுகள் இப்போது மீண்டும் தீவிரமடைந்துள்ள சூழலில், ஒவ்வொரு முறையும் மறுபக்கம் செல்லும்போது இதுபோல சிக்னல் துண்டித்தால் அது தேவையில்லாத பதற்றத்தையே ஏற்படுத்தும். ஆனால், இது சீக்கிரமே முடிவுக்குக் கொண்டு வரத்தான் நிலவில் நிரந்தரத் தளம் அமைப்பதற்கும், ஆய்வுகளை அதிகரிப்பதற்கும் நாசா திட்டமிட்டு வருகிறது.
என்ன செய்வார்கள்
தொடர்பு முழுமையாக இல்லாத போது, அர்டெமிஸ் விண்வெளி வீரர்களால் நிலவில் முழு கவனம் செலுத்த முடியும். இந்தத் துண்டிப்புக் காலத்தில் அவர்கள் நிலவு ஆராய்ச்சியில் ஈடுபடுவார்கள்.. நிலவின் மறுபுறத்தைப் படமெடுப்பது, புவியியல் ஆய்வுகள் என பல்வேறு ஆய்வுகளைச் செய்யத் திட்டமிட்டுள்ளனர். என்ன தான் திட்டம் எல்லாம் பக்காவாக இருந்தாலும், அவர்கள் நிலவின் மறுபுறம் வந்து மீண்டும் சிக்னல் கிடைத்தால் மட்டுமே உலகமே நிம்மதி அடையும்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications