விரைவில் பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்.. அழைத்து வர விண்ணில் பாய்ந்தது Space X-ன் விண்கலம்!
வாஷிங்டன்: விரைவில் பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ். 9 மாதங்களாக விண்வெளியில் சிக்கித் தவித்து வரும் சுனிதா வில்லியம்ஸை அழைத்து வரச் சென்றது Space X-ன் எண்டூரன்ஸ் விண்கலம்.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சார்பில், போயிங் ஸ்டார்லைனர் ராக்கெட் மூலம் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஜூன் 5ஆம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்றனர். அங்கு ஆய்வு நடத்திவிட்டு, ஜூன் 14 ஆம் தேதி பூமிக்கு திரும்பத் திட்டமிடப்பட்டிருந்தது. அந்தச் சூழலில் அவர்கள் பயணித்த ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

இதன் காரணமாக அவர்கள் இருவரும் அங்கேயே இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. 9 மாதங்களுக்கும் மேலாக அவர்கள் விண்வெளியில் தங்கி இருக்கின்றனர். பிப்ரவரி மாதம் தான் அவர்கள் பூமிக்குத் திரும்புவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, ஸ்பேஸ் எக்ஸ் திட்டத்தை செயல்படுத்துவதில் கால தாமதம் காரணமாக அவர்கள் மார்ச் மாதத்தில் தான் திரும்புவார்கள் எனத் தகவல் வெளியானது.
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோரை பூமிக்கு அழைத்து வரும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதன்படி ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் என்டூரன்ஸ் விண்கலம் கடந்த 12-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட இருந்தது. ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடைசி நேரத்தில் விண்கலம் செலுத்தப்படுவது நிறுத்தப்பட்டது. க்ரூ டிராகன் ராக்கெட் ஏவுதளத்தில் உள்ள ஹைட்ராலிக் இயந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், மிஷன் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து, மார்ச் 14 ஆம் தேதி அமெரிக்காவின் புளோரிடா கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து பால்கன் 9 ஏவுகணை மூலம் என்டூரன்ஸ் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இந்த விண்கலத்தில் அமெரிக்க விண்வெளி வீரர்கள் ஆனி மெக்கிளைன், நிக்கோலி அயர்ஸ், ஜப்பான் விண்வெளி வீரர் டகுயா ஒனிஸி, ரஷ்ய விண்வெளி வீரர் கிரிஸ் பெஸ்கோவ் ஆகியோர் சென்றுள்ளனர்.
மார்ச் 15 ஆம் தேதியான இன்று சர்வதேச விண்வெளி மையத்தில் என்டூரன்ஸ் விண்கலம் இணையும். இந்த ராக்கெட் இன்றிரவு 11.30 மணியளவில் ஐ.எஸ்.எஸ்.-சுக்கு சென்றடைந்ததும் Crew-9 குழுவினர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோர் பூமிக்கு திரும்புவர்.
சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து மார்ச் 19-ம் தேதி டிராகன் விண்கலம் மூலம் அமெரிக்காவை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், பேரி வில்மோர், நிக் ஹேக் மற்றும் ரஷ்யாவை சேர்ந்த அலெக்சாண்டர் ஆகியோர் பூமிக்கு திரும்ப உள்ளனர். வானிலையை பொறுத்து தேதிகள் மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.
சுனிதா வில்லியம்ஸ் சுமார் 9 மாதங்களுக்கு மேலாக விண்வெளியில் தங்கியிருப்பதால் பூமிக்கு திரும்பிய உடன் அவரால் நடக்க முடியாது. அவருக்கு பல்வேறு உடல் உபாதைகளும் ஏற்படக்கூடும். 45 நாட்கள் முதல் சில மாதங்களுக்கு பிறகே அவரால் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் என சர்வதேச விண்வெளி ஆய்வு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications