அவிழ்ந்தது மர்மம்! 90 ஆண்டுக்கு முன் மாயமான விமானம்.. இப்போது பார்த்ததும்.. "ஐயோ" மிரண்ட ஆய்வாளர்கள்
வாஷிங்டன்: 1937ஆம் ஆண்டில் அமெலியா ஏர்ஹார்ட் என்பவரின் விமானம் மாயமானது மர்மமாகவே இத்தனை காலம் இருந்து வந்த நிலையில், அதற்கான பதில் இப்போது கிடைத்துள்ளது.
1937ஆம் ஆண்டில் பசிபிக் பெருங்கடலில் மாயமான அமெரிக்காவின் புகழ்பெற்ற ஏவியாட்ரிக்ஸ் விமானமான அமெலியா ஏர்ஹார்ட்டின் விமானத்தின் பாகங்கள் 87 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆழ்கடல் ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சோனார் படங்கள் இப்போது வெளியாகியுள்ளது.
கண்டுபிடிப்பு: அமெரிக்காவின் தென் கரோலினாவை தளமாகக் கொண்ட டீப் சீ விஷன் என்ற அமைப்பு ஹவ்லேண்ட் தீவின் மேற்கில் உள்ள பசிபிக் பகுதியில் விரிவான ஆய்வை நடத்திய நிலையில், அங்கே தான் இந்த இமேஜ் கண்டறியப்பட்டது..
அமெரிக்காவைச் சேர்ந்த அமெலியா ஏர்ஹார்ட் என்ற விமானி கடந்த 1937ஆம் ஆண்டில் உலகம் சுற்றும் விமான பயணத்தை மேற்கொண்டார். அப்போது அவர் மாயமானார். அவர் இப்படி திடீரென காணாமல் போது உலகில் தீர்க்கப்படாத மர்மமாக மாறியது. அவர் எப்படி மாயமானார், அவருக்கு என்ன நடந்தது என்பது குறித்து பல்வேறு கதைகள் இருக்கிறது. இதை வைத்துப் பல புத்தகங்கள் அவ்வளவு ஏன் படங்களும் கூட வெளி வந்துள்ளன.
மாயம்: அப்போது 39 வயதான ஏர்ஹார்ட் மற்றும் 44 வயதான நூனன் ஆகியோர் தங்கள் லட்சிய பயணத்தை முடிக்க இருந்தனர். இன்னும் ஓரிரு இடங்கள் மட்டுமே இருந்த நிலையில், அவர்கள் ஹவ்லேண்ட் தீவுக்கு அருகிலுள்ள பசிபிக் பகுதியில் வந்து கொண்டிருந்த போது அவர்கள் விமானத்தில் எரிபொருள் தீர்ந்துள்ளது. இதையடுத்து அவர்களின் இரட்டை எஞ்சின் கொண்ட விமானம் விபத்தில் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த டிஎஸ்வி நிறுவனம் பக்க ஸ்கேன் சோனார் முறையைப் பயன்படுத்தி 16,000 அடி ஆழத்தில் நீர்மூழ்கிக் கப்பலை அனுப்பி சோதனை செய்துள்ளது. அங்கே எடுக்கப்பட்ட படத்தில் தான் ஏர்ஹார்ட்டின் விமானம் கண்டறியப்பட்டுள்ளது. ஏர்ஹார்ட் பயன்படுத்திய விமானத்தின் தனித்துவமான இரட்டை வால்களை வைத்தே அது அவரது விமானம் தான் என்பதை உறுதி செய்துள்ளனர்.
என்ன நடந்தது: இது தொடர்பாக டிஎஸ்வி நிறுவனம் கூறுகையில், "செல்ல வேண்டிய இடத்தை அடைய போதுமான எரிபொருள் இல்லை என்பது ஏர்ஹோர்டிற்கு முன்கூட்டியே தெரிந்துவிட்டது. இதனால் அவர் தனது விமானத்தைத் தண்ணீரில் இறக்க முடிவு செய்துள்ளார். எவ்வளவு முடியுமோ அவ்வளவு மெதுவாக அவர் தண்ணீரில் விமானத்தை இயக்க முடிவு செய்துள்ளார். இப்போது நாங்கள் எடுத்துள்ள சோனார் படத்தைப் பார்க்கும் போதும் அதுவே தெரிகிறது" என்றார்.
பசிபிக் பெருங்கடலில் சுமார் 13,500 சதுர கிலோமீட்டர் தூரத்திற்கு 90 நாட்கள் நடத்திய ஆய்வில் இதை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஏர்ஹோர்ட் விமானம் எங்கே கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறித்த தகவல் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் கூடுதல் ஆய்வுகளை நடத்த அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

தவறு என்ன: நாசாவின் முன்னாள் ஊழியர் லிஸ் ஸ்மித் என்பவர் ஏர்ஹோர்ட் மாயமானது தொடர்பாக ஒரு முக்கிய தகவலைப் பகிர்ந்து கொண்டிருந்தார். அதாவது பல உலக நாடுகளுக்கு ஏர்ஹோர்ட் வரிசையாகப் பயணித்து வந்ததால் அவர் காலெண்டரை அதற்கேற்ப மாற்ற மறந்துவிட்டார். இதனால் அவர் தனது பாதையைத் தவறாகக் கணக்கிட்டுப் பயணிக்கவே எரிபொருள் காலியாகியுள்ளது. இதுவே விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் என்று லிஸ் ஸ்மித் கூறியிருந்தார்.
இந்த கோட்பாட்டை வைத்து ஏர்ஹோர்ட் எங்கே விழுந்து இருக்கலாம் என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்து அந்த இடத்தை இறுதி செய்துள்ளனர். அதை வைத்து நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையிலேயே இதைக் கண்டுபிடித்துள்ளனர்.
யார் இந்த ஏர்ஹார்ட்: 1930களில் உலகளவில் மிகவும் புகழ்பெற்ற பெண்மணியாக இருந்தவர் ஏர்ஹார்ட்.. இவர் 1932ஆம் ஆண்டு அட்லாண்டிக் கடலில் தனியாகப் பறந்த முதல் பெண் என்ற சாதனையைப் படைத்தார். இவர் 1937ஆண்டில் உலகைச் சுற்றி வந்த முதல் பெண்மணி என்ற சாதனையைப் படைக்க அமெரிக்காவில் இருந்து கிளம்பினார். பல மாதங்கள் அவர் வெற்றிகரமாகப் பயணித்த நிலையில், 1937 ஜூலை 2இல், பப்புவா நியூ கினியாவில் இருந்து கிளம்பினார். அவர் ஆஸ்திரேலியாவில் தரையிறக்க இருந்த நிலையில், திடீரென மாயமானார்,
-
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications