சைவம் சாப்பிடுபவருக்கு மாட்டுக்கறி கொடுத்து "டார்ச்சர்.." வெளிநாட்டு சிறையில் இந்தியருக்கு கொடூரம்!
வாஷிங்டன்: காலிஸ்தான் பயங்கரவாதியை கொலை செய்த விவகாரத்தில் நிகில் குப்தா கைது செய்யப்பட்ட நிலையில், அவரை சிறையில் வைத்து டார்ச்சர் செய்வதாக அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அமெரிக்காவில் இருக்கும் காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் என்பவரைக் கொலை செய்ய இந்திய அரசு அதிகாரி ஒருவர் திட்டமிட்டதாக அமெரிக்கா கடந்த சில வாரங்களுக்கு முன்பு பரபர குற்றச்சாட்டை முன்வைத்தது.

இருப்பினும், இந்த கொலை முயற்சியை முறியடித்துவிட்டதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது. இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குர்பத்வந்த் சிங்: இந்த காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங்கை கொல்ல சதி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் இந்தியரான நிகில் குப்தா மீது அமெரிக்கா வழக்குப்பதிவு செய்திருந்தது. இதற்கிடையே இப்போது செக் குடியரசில் தனிமைச் சிறையில் இருக்கும் நிகில் குப்தா மீது மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். குறிப்பாக அவரை மாட்டுக்கறி மற்றும் பன்றி இறைச்சி சாப்பிட சொல்லியும் துன்புறுத்தியதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.
52 வயது இந்தியர் குர்பத்வந்த் சிங் காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங்கை கொல்ல சதி செய்ததாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியது. இந்த குற்றச்சாட்டில் அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று, கடந்த ஜூன் 30ஆம் தேதி குர்பத்வந்த் சிங்கை செக் குடியரசு போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே நிகில் குப்தாவின் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.
மாட்டிறைச்சி & பன்றி இறைச்சி: சைவ உணவை சாப்பிடும் நிகில் குப்தாவுக்கு 11 நாட்கள் சாப்பாடு போடாமல் பட்டினியாக வைத்திருந்ததாகவும் அதன் பிறகு மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சியை கொடுத்து அதை சாப்பிட சொல்லி கட்டாயப்படுத்தியதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
அந்த மனுவில், "தான் சைவ உணவை மட்டுமே சாப்பிடுவேன் என பல முறை கூறிய பிறகும் அவருக்கு மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சி உள்ளிட்ட அசைவ உணவுகளை மட்டுமே கொடுத்துள்ளனர். இது குறித்து சிறை அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும், 10 முதல் 11 நாட்களுக்கு சைவ உணவை வழங்கவில்லை" என்று கூறப்பட்டுள்ளது.
டார்ச்சர்: இது தொடர்பாக நிகில் குப்தாவின் மகள் கூறுகையில், "எனது தந்தையை தடுப்பு மையத்தில் சித்திரவதை செய்தது மட்டுமல்லாமல்.. உண்ண உணவு.. அவ்வளவு ஏன் தண்ணீர் கூட தரவில்லை. சைவ உணவை மட்டும் சாப்பிடுவேன் கூறிய போதிலும் எனது தந்தைக்கு மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சியை மட்டுமே கொடுத்துள்ளனர். இந்த விவகாரத்தில் மத மற்றும் அடிப்படை உரிமைகளை மட்டுமின்றி, மனித உரிமைகளும் மீறப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
நீண்ட போராட்டத்திற்கு பிறகு அவருக்கு மளிகை பொருட்களை வாங்கி தர அனுமதித்ததாகவும் அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். குப்தா தூதரக அணுகலை பல முறை கோரியதாகவும் இருப்பினும், அதற்கும் கூட அனுமதிக்கவில்லை என்றும் குப்தாவின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை தூதரகத்தை அணுகல் கோரியும் செக் நாட்டில் உள்ள இந்தியத் தூதருக்கு வழிகாட்ட கோரியும் குப்தாவின் குடும்பத்தினர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இருப்பினும், இந்த வழக்கில் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்காத சுப்ரீம் கோர்ட்ஸ செக் குடியரசில் உள்ள நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தியது.
-
ஈரான் பந்தர் அப்பாஸில் அமெரிக்க தாக்குதல்.. வேலையை காட்டிய டிரம்ப்.. அப்போ அமைதி எல்லாம் கனவுதான் -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
நள்ளிரவில் பாய்ந்த அமெரிக்க ஏவுகணைகள்... அதிகாலையில் திருப்பி அடித்த ஈரான்! மீண்டும் வெடிக்கும் போர் -
யுரேனியத்தை ஒப்படைத்தால் கூட.. ஈரான் தப்பிக்காது! டிரம்ப் கொடுத்த பகிரங்க வார்னிங்! -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில்












Click it and Unblock the Notifications