கிரீன்லாந்து கண்டிப்பா வேணும்.. இந்த விஷயத்தில் வேற எதையும் ஏத்துக்க முடியாது.. டிரம்ப் விடாப்பிடி
வாஷிங்டன்: அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக கிரீன்லாந்து கட்டாயம் தேவை என்று தெரிவித்துள்ள அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப், இந்த விவகாரத்தில் கிரீன்லாந்தை பெறுவதை தவிர அதற்கு குறைவான எதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று விடாப்பிடியாய் தெரிவித்துள்ளார்.
கிரீன்லாந்தை அமெரிக்கா கட்டுப்பாட்டில் வைத்து இருப்பது மிகவும் முக்கியமானது என்று கூறியுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், கிரீன்லாந்தை கட்டுப்பாட்டில் எடுப்பதற்கு குறைவான எந்த ஒரு விவகாரத்தையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று கூறியுள்ளார்.

கிரீன்லாந்து அமெரிக்காவின் கைகளில் இருக்கும்போது, நோட்டோ மிகவும் வலிமை வாய்ந்ததாகவும் திறமையானதாகவும் மாறும். எனவே கிரீன்லாந்து அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இல்லாத எந்த ஒரு நிலையையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
கிரீன்லாந்தை அமெரிக்கா பெறுவதற்கு நோட்டோவே முன்னின்று வழிநடத்த வேண்டும். நாம் அதைச் செய்யாவிட்டால், சீனாவோ அல்லது ரஷ்யாவோ அதைச் செய்துவிடும். அது நடக்கவே விடக்கூடாது" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications