டிரம்பிற்கு ஒரு வழியாக கிடைக்கும் நோபல்? வெனிசுலா தலைவர் சொன்ன வார்த்தை! ஆனால் கடைசியில் ட்விஸ்ட்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபரான டிரம்ப் கடந்தாண்டு முழுக்கவே அமைதிக்கான நோபல் பரிசு தனக்கே வழங்கப்பட வேண்டும் எனத் தொடர்ந்து சொல்லி வந்தார். ஆனால், கடந்தாண்டு அவருக்கு நோபல் கிடைக்கவில்லை. இதற்கிடையே கடந்தாண்டு நோபல் பரிசு வென்ற வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மச்சாடோ தனது நோபல் பரிசை டிரம்ப்பிற்குத் தர விரும்புவதாகக் கூறியிருந்த நிலையில், இது தொடர்பாக நோபல் டீம் முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா படைகள் கடந்த வாரம் வெனிசுலாவில் இறங்கித் தாக்குதல் நடத்தியது அனைவருக்கும் தெரியும். மேலும், வெனிசுலா அதிபராக இருந்த மதுரோவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டுள்ளனர். போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் அவர்கள் மீது நடைபெறுகிறது. இது சர்வதேச அளவில் பரபரப்பைக் கிளப்பியது.

நோபல் பரிசு
இதற்கிடையே வெனிசுலா நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரான மரியா கொரினா மச்சாடோ சில கருத்துகளைக் கூறியிருந்தார். இந்த மரியா கொரினா மச்சாடோவுக்கு தான் கடந்த 2025ல் அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்திருந்தது. தனக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசை, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வெனிசுலா மக்களுக்கு அர்ப்பணிப்பதாக மச்சாடோ அறிவித்தார்.
இது குறித்துக் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர், "நான் நோபல் பரிசை ட்ரம்ப்பிடம் நேரில் வழங்க விரும்புகிறேன். அவர் செய்தது வரலாற்றுச் சிறப்பு மிக்கது. இது ஜனநாயக மாற்றத்திற்கான ஒரு முக்கிய நடவடிக்கை. வெனிசுலா மக்களாகிய நாங்கள் நோபல் பரிசை டிரம்புடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்" என்று தெரிவித்தார்.
டிரம்ப்
அமைதிக்கான நோபல் பரிசு தனக்குக் கிடைக்க வேண்டும் எனக் கடந்தாண்டு முழுக்க டிரம்ப் சொல்லி வந்தார். ஏகப்பட்ட போர்களைத் தான் நிறுத்தியுள்ளதாகவும் இதனால் தனக்கே அமைதிக்கான நோபல் பரிசு வேண்டும் என்றும் அவர் தொடர்ந்து சொல்லி வந்தார். இருப்பினும், அவருக்குப் பதிலாக மச்சாடோவுக்கு அந்த விருது கிடைத்தது. இப்போது மச்சாடோவே விருதை டிரம்பிற்கு தருவதாகச் சொல்லியுள்ளதால் ஒரு வழியாக டிரம்பிற்கு அவர் விரும்பிய நோபல் பரிசு கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது.
இது குறித்து டிரம்பிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர், "மச்சாடோ அடுத்த வாரம் அமெரிக்கா வருகிறார். அப்போது அவரிடம் இது (நோபல்) குறித்து விவாதிப்பேன். அவர் அமெரிக்காவுக்கு வர விரும்புவது மகிழ்ச்சி தருகிறது. அவர் எதற்காக வருகிறார் என்பதைப் புரிந்து கொண்டேன். நிச்சயம் அடுத்த வாரம் இது குறித்து ஆலோசிப்பேன்" என்றார்.
விளக்கம்
டிரம்ப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கப் போகிறது என்ற சந்தோஷத்தில் அவருடைய தொண்டர்கள் இருந்த நிலையில், நோபல் குழு ஒரு பெரிய இடியை இறக்கியுள்ளது. அதாவது நோபல் பரிசைப் பகிரவோ, ரத்து செய்யவோ அல்லது மாற்றவோ முடியாது என்று நோபல் குழு திட்டவட்டமாகக் கூறியுள்ளது. இது தொடர்பாக நோபல் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒரு நோபல் பரிசை ரத்து செய்யவோ, பகிரவோ அல்லது மற்றவர்களுக்குத் தரவோ முடியாது. ஒருமுறை அறிவிக்கப்பட்டால் அவ்வளவு தான்.. அதுவே நிரந்தரமானது" என்று கூறப்பட்டுள்ளது.
கிடைக்காது
இதன் மூலம் டிரம்பின் நோபல் கனவு நிறைவேறாது என்றே தெரிகிறது. மச்சாடோ என்ன தான் தனது நோபல் பரிசை டிரம்பிற்கு வழங்க ரெடி என சொல்லி இருந்தாலும், நோபல் விதிகளின்படி அப்படித் தர முடியாது என விருது குழு தெரிவித்துள்ளது. இதனால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற கதையாக டிரம்பிற்கான நோபல் பரிசு கிடைக்காமல் போய் இருக்கிறது.
-
எல்லா பிரச்சினைக்கும் டிரம்ப் தான் காரணம்.. சரியா திட்டமிடல.. சிஐஏவின் ex தலைவர் காட்டம் -
Hormuz: ஹார்முஸ் ஜலசந்தி திறக்குமா? திறக்காதா? 48 மணி நேரம் கெடு விதித்த டிரம்ப்.. ஈரான் அளித்த ரிப்ளை -
இருளில் மூழ்கும் ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியால் 48 மணிநேர கெடுவுடன் டிரம்ப் மிரட்டல்! ஷாக் அறிவிப்பு -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
"இன்னும் 48 மணி நேரம் தான் டைம்.." ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை கொடுத்த டிரம்ப்! அடுத்து பேரழிவு தான்? -
"கோழைகள்.." கண்கள் சிவந்த டிரம்ப்.. நேட்டோவில் இருந்து வெளியேறும் அமெரிக்கா? சரமாரி பாய்ச்சல் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2!












Click it and Unblock the Notifications