Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புத்தாண்டை வித்தியாசமாக கொண்டாடிய வடகொரியா.. முதல் நாளிலேயே ஏவுகணை சோதனை.. மிரட்டிய கிம் ஜாங் அன்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்கா உள்ளிட்ட நடுகளுடன் கடும் மோதல் போக்கை கையாண்டு வரும் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டல் விடுத்து வருகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டில் மட்டும் 70-க்கும் மேற்பட்ட ஏவுகணை சோதனைகள் நடத்தி அதிர வைத்து இருந்த வடகொரியா 2023 ஆண்டின் முதல் நாளிலேயே மீண்டும் ஒரு ஏவுகணை சோதனை நடத்தியிருக்கிறது.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் கடும் மோதல் போக்கை கடைபிடித்து வரும் நாடு வடகொரியா. சர்வாதிகார நாடாக அறியப்படும் வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் அன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் மோதல் போக்கை கையாண்டு வருகிறார்.

உலக நாடுகளின் எதிர்ப்பை எல்லாம் காதில் போட்டுக்கொள்ளாத வடகொரியா அணு ஆயுத சோதனை, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை என நடத்தி தொடர்ந்து மிரட்டி வருகிறது.

பொருளாதார தடை

பொருளாதார தடை

வடகொரியாவிற்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்தாலும் அடங்க மறுக்கும் வடகொரியா தனது அடவாடியில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக தன்னிடம் இருக்கும் அணு ஆயுதங்களை கொண்டு ஜப்பான் , தென்கொரியா உள்ளிட்ட நாடுகளை மிரட்டும் வகையில் அவ்வப்போது சோதனை நடத்தி வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பொருளாதார தடையால் வடகொரியா கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. அந்த நாட்டில் பல்வேறு இன்னல்களை மக்கள் சந்திப்பதாக கூட அவ்வப்போது செய்திகள் வெளியாவதுண்டு.

கொஞ்சம் கூட மாறாத வடகொரியா

கொஞ்சம் கூட மாறாத வடகொரியா

ஆனாலும் எத்தனை பொருளாதார தடைகள் போட்டாலும் அதைப்பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை என்கிற ரீதியில் தனது போக்கில் கொஞ்சம் கூட மாறாத வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன், தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறார். அதிலும், கடந்த ஆண்டு வடகொரியா முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஏவுகணை சோதனைகளை நடத்தி அதிர வைத்து வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் 70 -க்கும் மேற்பட ஏவுகணைகளை வடகொரியா சோதித்து உள்ளது.

 3 ஏவுகணைகளை அடுத்தடுத்து..

3 ஏவுகணைகளை அடுத்தடுத்து..

அதிலும் அமெரிக்கா வரையிலும் சென்று தாக்கக் கூடிய தொலை தூர ஏவுகணையை சோதனை செய்து அதிர வைத்தது. ஆண்டின் கடைசி நாளான நேற்று 3 ஏவுகணைகளை வடகொரியா அடுத்தடுத்து சோதித்து பார்த்தது. கொரிய தீபகற்பத்திற்கும் ஜப்பானுக்கும் இடையே கடல் பகுதியில் இந்த ஏவுகணைகள் விழுந்ததாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை 2.50 மணியளவில்

இன்று அதிகாலை 2.50 மணியளவில்

அதேபோல் 2023 ஆம் ஆண்டின் முதல் நாளிலும் வடகொரியா தனது ஸ்டைலில் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. இன்று அதிகாலை 2.50 மணியளவில் இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டு இருப்பதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. வடகொரியாவின் தலைநகர் பிராந்தியத்தில் வைத்து நடதப்பட்ட இந்த ஏவுகணை சுமார் 400 கி.மீட்டர் தூரம் பறந்து சென்று கடலில் விழுந்ததாகவும் தென்கொரியா தெரிவித்துள்ளது.

 ராணுவ பலம் இருமடங்காக்கப்படும்

ராணுவ பலம் இருமடங்காக்கப்படும்

ஏவுகணை சோதனைக்குப் பிறகு நடைபெற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் கிம் ஜாங் அன் பங்கேற்றார். இந்தக் கூட்டத்திற்கு பிறகு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "அணு ஆயுத உற்பத்தியை வேகமாக வடொரியா அதிகரிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் பிற பகைமை நாடுகளுடன் ஆபத்தான போக்குக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் வடகொரியாவின் நலனை பாதுகாக்கும் நோக்கிலும் நாட்டில் ராணுவ பலம் இருமடங்காக்கப்படும் என்றும் கிம் ஜாங் அன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+