Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Exclusive: டிரம்ப் வென்றால் இந்தியர்களுக்கு ரொம்பவே நல்லது.. அமெரிக்க அரசியல்வாதி ஸ்டான்லி ஜார்ஜ்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி அங்குப் பிரச்சாரம் மிகத் தீவிரமாக நடந்து வரும் நிலையில், டிரம்பின் குடியரசுக் கட்சியின் தேசிய ஆலோசனைக் குழுவின் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய வம்சாவளி உறுப்பினரான ஸ்டான்லி ஜார்ஜ் ஒன் இந்தியா தளத்திற்குச் சிறப்புப் பேட்டி அளித்தார். அதில் டிரம்ப் இந்த தேர்தலில் மிக எளிதாக வெல்வார் என்றும் அவரது வெற்றி இந்தியர்களுக்கு நல்ல பலனைக் கொடுக்கும் என்றும் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி கடந்த சில வாரங்களுக்கு முன்பு பைடன்- டிரம்ப் இடையே விவாதம் நடந்தது. இந்த விவாதத்திற்குப் பிறகு டிரம்ப் செல்வாக்கு பல மடங்கு அதிகரித்துள்ளது.

US Presidential Election 2024 Joe Biden Donald Trump 2024

இந்தாண்டு இறுதியில் நடக்கும் அதிபர் தேர்தலுக்காக டிரம்ப் தீவிரமாகப் பிரச்சாரம் செய்யும் போது அவர் மீது கொலை முயற்சி சம்பவம் நடந்துள்ளது. இருப்பினும், அதிர்ஷ்டவசமாக அதில் அவர் உயிர் தப்பிவிட்டார்.

இதற்கிடையே அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றால் அது இந்தியர்களுக்கே பெரியளவில் நன்மை தரும் என்று குடியரசுக் கட்சியின் தேசிய ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய வம்சாவளி உறுப்பினரான ஸ்டான்லி ஜார்ஜ் தெரிவித்துள்ளார். கேரளாவைச் சேர்ந்த இவர் ஒன் இந்தியாவுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில், இப்போது அதிபர் தேர்தலில் டிரம்ப் கைகளே ஓங்கி இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த நேர்காணலில் அவர், டிரம்ப் செயல்பாடுகள், பைடன் நிர்வாகத்தில் உள்ள குறைகள் குறித்து விரிவாக விவாதித்தார்.

கேள்வி: டிரம்ப் மீதான கொலை முயற்சி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இத்தகைய செயலின் பின்னணி என்னவாக இருக்கும்?

பதில்: இந்த கொலை முயற்சியில் இருந்து டிரம்ப் நூலிழையில் தப்பித்துள்ளார். இது அதிசயம் தான்.. இறைவன் தான் டிரம்பின் உயிரைக் காப்பாற்றியது என்பது தெளிவாகிறது. உலகில் ஏற்பட்டு வரும் பல வகை பாதிப்புகளில் இருந்து அமெரிக்காவையும் உலகையும் பாதுகாக்க இறைவன் தான் டிரம்பை தேர்ந்தெடுத்துள்ளார். சர்வவல்லமையுள்ள இறைவன் டிரம்பை கவனித்துக் காப்பாற்றி இருக்கிறார். அதற்காக நான் இறைவனுக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.

துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர் டிரம்பின் தலையைக் குறிவைத்து இருக்கிறார். தலையில் குண்டு தாக்கினால் நிச்சயம் மரணம் என்பது அவருக்குத் தெரிந்து இருக்கிறது. சீக்ரெட் சர்வீஸ் ஏஜெண்டுகள் இருக்கும் போது இத்தனை பேர் இருக்கும் போது, அதையும் தாண்டி சுட்டுள்ளார். பயிற்சி பெற்ற துப்பாக்கி சுடும் வீரரால் மட்டுமே இதைச் செய்ய முடியும். இதை வெறுமன வன்முறைச் சம்பவம் எனக் கடந்துவிட முடியாது. திட்டமிட்டு டிரம்பை கொல்ல முயன்றுள்ளனர். டிரம்பிற்கு தெய்வீக பாதுகாப்பு இருக்கிறது என்பதற்கு இது ஒரு சான்றாகும்.

இத்தகைய நேரத்திலும் டிரம்ப் துணிச்சலை வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்திய மாதங்களில், பைடன் நிர்வாகம் பல தொல்லை கொடுத்தாலும் அதைத் தாண்டி டிரம்ப் உறுதியாக நிற்கிறார்.

கேள்வி- கேரளாவைச் சேர்ந்த நீங்கள் எப்படி அமெரிக்க அரசியலுக்கு வந்தீர்கள்?

பதில்: நான் டீன் ஏஜ் பருவத்திலிருந்தே இந்தியாவில் உள்ளூர் மற்றும் தேசிய அரசியலில் அதிக ஈடுபாடு காட்டி வந்தேன். இதன் காரணமாகவே அமெரிக்காவுக்கு வந்தவுடன் இங்கும் அரசியலில் ஈடுபடத் தொடங்கினேன்.

கேள்வி- குடியரசுக் கட்சியில் உங்கள் பொறுப்புகள் என்ன?

பதில்: அமெரிக்க முன்னாள் அதிபர் ரொனால்ட் ரீகன் பிரச்சாரம் செய்த போது அதற்குத் தலைமை ஏற்றவரும் பிறகு அவரது ஆலோசகராகவே மாறிய எட் ரோலின்ஸை நான் சந்தித்து நட்பை ஏற்படுத்திக் கொண்டேன். அவருடன் பல விஷயங்கள் குறித்து ஆலோசித்துள்ளேன். அதுவே என்னைக் குடியரசு கட்சி பக்கம் தள்ளியது. எட் ரோலின்ஸ் தான் குடியரசுக் கட்சிக்கு ஜனநாயக கட்சிக்கும் இடையே உள்ள வேறுபாட்டை விளக்கி, யார் மக்களுக்கு நல்லது செய்கிறார்கள் என்பதைப் புரிய வைத்தார். ஜனநாயகக் கட்சியினர் என்னை எப்படி ஏமாற்றினார்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டினார்.

நான் இரு கட்சிகளுக்கும் இருக்கும் வேறுபாட்டைப் புரிந்து கொண்ட உடனே குடியரசு கட்சியில் இணைந்துவிட்டேன். 2020 டிரம்ப் பிரச்சார குழுவில் பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, 2021ல், குடியரசுக் கட்சியின் தேர்தல் ஆலோசனைக் குழுவில் என்னை நியமித்தனர். கருத்துக் கணிப்புகளை ஆய்வு செய்து அதில் இருந்து பிரச்சார யுக்திகளை வடிவமைப்பதே எனது பணியாகும். உள்ளூர், மாகாண மற்றும் தேசிய தேர்தல்களில் நான் பிரச்சார குழுவில் வேலை செய்துள்ளேன்.

கேள்வி- டிரம்ப்- பைடன் இடையே நடந்த முதல் விவாதத்தில் உங்கள் பங்கு என்ன?

பதில்: விவாதத்திற்கு முன்பு எனக்கு எந்தவொரு பங்கும் இல்லை. இருப்பினும், விவாதத்திற்குப் பிறகு பகுப்பாய்வு செய்யவும் பிரச்சார யுக்திகளை வகுக்கவும் நான் உதவினேன்.

கேள்வி: டிரம்பின் 2024 பிரச்சாரத்தின் முதன்மை இலக்குகள் என்ன? இது முந்தைய பிரச்சாரங்களிலிருந்து எப்படி வேறுபடுகின்றன?

பதில்: முதலாவதாக டிரம்ப் சாதாரண உழைக்கும் மக்களின் சாம்பியன். கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பைடென் ஆட்சியில் பணவீக்கம் மிக மோசமான நிலைக்குச் சென்றுவிட்டது. இதனால் அமெரிக்கப் பொருளாதாரம் முற்றிலும் அழித்துவிட்டது. கற்பனையான காலநிலை மாற்றம் குறித்த இலக்கு, அமெரிக்கக் குடும்ப விழுமியங்களை அழிப்பது என அமெரிக்க இறையாண்மையை பைடன் கேலிக்குள்ளாகிவிட்டார்.

கடந்த 2020இல் டிரம்பின் இலக்கு எதுவாக இருந்ததோ.. அதுவே 2024 தேர்தலிலும் இலக்காக இருக்கிறது. அமெரிக்காவில் எல்லைப் பாதுகாப்பை நிலைநாட்டுவது, சட்ட விரோத குடியேற்றத்தால் அதிகரித்துள்ள உள்நாட்டுப் பயங்கரவாதத்தின் அச்சுறுத்தலை முழுமையாக அகற்றுவதே டிரம்பின் இலக்காகும். மேலும், சட்ட விரோதமாக வரி செலுத்தாமல் இருப்போரை நாடு கடத்தவும் அவர் தயாராக இருக்கிறார். இதுபோல இருப்போரால் அமெரிக்காவுக்கு ஒரு டிரில்லியன் டாலர் நஷ்டம் ஏற்படுகிறது.

அமெரிக்காவில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்குக் கொலை, பலாத்காரம், வழிப்பறி, வீடு புகுந்து தாக்குதல் எனச் சட்டவிரோதமாகக் குடியேறுவோரால் நடக்கும் குற்றங்கள் அதிகரித்துள்ளன. பைடன் ஆட்சி சாதாரண அமெரிக்க மக்கள் மீது வெறுப்பை வெளிப்படுத்தியுள்ளது. டிரம்ப் அதிபரானால் அமெரிக்க எரிசக்தி சுதந்திரத்தை மீண்டும் நிறுவுவார். மேலும், அணுசக்தி மற்றும் பயாலஜிக்கல் மோதல்களில் சரியான நிலைப்பாட்டை எடுப்பார். சர்வதேச அளவில் ஸ்திரத்தன்மை அதிகரிக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பார். ஒட்டுமொத்த சர்வதேச சமூகமும் நிச்சயம் டிரம்பிற்கு ஆதரவாக இருக்கும்.

கேள்வி- பைடன் உடனான விவாதத்தின் போது, ​​உக்ரைனில் போரை நிறுத்துவேன் என்று டிரம்ப் உறுதியளித்தார்.. உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கின் தற்போது இருக்கும் சிக்கல்களை டிரம்ப் எப்படித் தீர்க்கப் போகிறார்?

பதில்: அமெரிக்காவுக்கான ஆயுதங்களைத் தயார் செய்யும் ராணுவ தொழில்துறை வளாகத்தை ஏதோ வேலையாள் மாதிரி பைடன் பயன்படுத்துகிறார். ஆனால், டிரம்ப் ஆட்சிக்கு வந்த உடன் உக்ரைன் போரில் இருந்து அமெரிக்கா முழுமையாக வெளியேறும். இதுதான் போரை முடிக்க முதல் ஸ்டேப்.. அடுத்து உக்ரைனில் இருந்து ரஷ்யாவை வெளியேற்றப் பேச்சுவார்த்தை நடத்துவார். கடந்த ஆட்சியிலும் அவர் இதை வெற்றிகரமாகச் செய்துள்ளார்.

மத்திய கிழக்கு மோதலைப் பொறுத்தவரை, அவருடைய திட்டம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் டிரம்ப் அங்கே போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவார் என்று நம்புகிறேன்.

கேள்வி- டிரம்பின் டீமில் இருக்கும் ஒரே இந்தியர் நீங்கள் தான்.. நீங்கள் சொல்லுங்கள் டிரம்பின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் அமெரிக்க-இந்திய உறவு எப்படி இருக்கும்?

பதில்: அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவுடனான நல்லுறவைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். அவர் நிச்சயமாக நமது பொருளாதார உறவுகளைப் பலப்படுத்துவார். இது இந்தியர்களுக்கும், அமெரிக்கர்களுக்கும் பெரும் பயனளிக்கும். அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற எந்த ஒரு சர்வதேச மாணவருக்கும் கிரீன் கார்டு வழங்கப்படும் என்று டிரம்ப் சமீபத்தில் அறிவித்தார். இந்த அறிவிப்பால் மிகப் பெரிய பயன் அடையப் போவது இந்தியா தான்.

கேள்வி- இந்திய- அமெரிக்கச் சமூகத்தின் பிரச்சினைகளைக் கையாளும் திட்டங்களில் டிரம்ப் மற்றும் பைடன் இடையே உள்ள முக்கிய வேறுபாடுகள் என்ன?

பதில்- பைடன் ஆட்சியில் அவர் இந்திய-அமெரிக்கர்களைப் பற்றி எந்த அக்கறையும் காட்டவில்லை. மறுபுறம் டிரம்பின் பொருளாதாரத் திட்டங்கள் இந்தியா- அமெரிக்க இடையேயான வர்த்தகம் மற்றும் அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்களுக்குப் பெரிதும் பயனளிக்கும்.

கேள்வி- பைடன் பிரச்சார உத்திகளை டிரம்ப் எப்படி எதிர்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்?

பதில்: நாங்கள் எதுவும் செய்யத் தேவையில்லை. பைடனே தன்னை தானே அழித்து வருகிறார். அதை டிரம்ப் வேடிக்கை மட்டுமே பார்க்கிறார். அமெரிக்க வரலாற்றில் இது மிகவும் ஈஸியான தேர்தலாக இருக்கும்.

கேள்வி- ட்ரம்பின் இமேஜை மேம்படுத்தவும்.. அவரை சுற்றி இருக்கும் சர்ச்சைகளைத் தீர்க்கவும் என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்?

பதில்: டிரம்பின் இமேஜை காலி செய்யச் சிலர் திட்டமிட்டு மோசமான செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதே அமெரிக்க மக்களின் கருத்தாக இருக்கிறது. பைடன் ஆட்சி சட்ட அமைப்புகளை ஆயுதமாக மாற்றி டிரம்பிற்கு எதிராகப் பயன்படுத்துகிறது. ஆனால், இதுவே டிரம்ப் செல்வாக்கு அதிகரிக்கவும் காரணமாக இருக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் டிரம்பின் செல்வாக்கை அதிகரிக்கவே செய்கிறது.

கேள்வி- அரசியல் ஆலோசகராக இந்திய நாடாளுமன்றத் தேர்தல் குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்: இந்தியா கூட்டணி மிகச் சிறந்த பிரச்சாரத்தை நடத்தியது.. குறிப்பாகக் காங்கிரஸுக்கு கட்சிக்குக் கூடுதல் வாக்காளர்களை ஈர்ப்பதில் ராகுல் காந்தியின் வியூகம் வெற்றி பெற்றுள்ளது.. அவரது திறமை காரணமாகவே காங்கிரஸ் அதிக இடங்களைப் பெற்றது

இதற்கு நேர்மாறாக பாஜக ஓவர் செலவு செய்து பிரச்சாரம் செய்தது. அரசு இயந்திரங்களையும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முயன்றது. இவை எல்லாம் நெகடிவ் இமேஜை தான் உருவாக்கியது. இந்திய மக்கள் வகுப்புவாத அரசியலை நிராகரித்துள்ளது. இது இந்திய ஜனநாயகத்தை ஒட்டுமொத்தமாக வலுப்படுத்தியே இருக்கிறது.

கேள்வி - நீங்கள் எப்படி அமெரிக்காவுக்குச் சென்றீர்கள்?

பதில்: எனது மனைவி தான் முதலில் அமெரிக்காவுக்கு வந்தார். அவரது ஸ்பான்ச் கீழ் தான் நானும் அமெரிக்காவுக்கு வந்தேன். நான் 1990இல் முதலில் நியூயார்க் வந்தேன். அதன் பிறகே எனக்குப் பல வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+