Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வடகொரியாவில் இந்த ஒரு விஷயத்தை மட்டும் பண்ணிடவே கூடாதாம்.. தப்பி வந்தவர் சொல்லும் ஷாக் தகவல்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: உலகின் மர்ம தேசமாக விளங்கும் வடகொரியாவில் சிறிய குற்றங்களுக்கு கூட மரண தண்டனை விதிக்கப்படும் அளவுக்கு பல விசித்திரமான சட்டங்கள் பின்பற்றப்பட்டு வரும் நிலையில், அங்கிருந்து தப்பித்து இங்கிலாந்தில் தஞ்சம் அடைந்துள்ள நபர், அங்கு எந்த மாதிரியான கொடூர சட்டங்கள் பின்பற்றப்படுகிறது என்பது பற்றி வெளியில் கூறியுள்ளார்.

உலகின் மர்ம தேசமாக விளங்கும் நாடு வடகொரியா. அந்த நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது. அதிபராக கிம் ஜாங் உன் பதவி வகித்து வருகிறார். வடகொரியாவில் என்ன நடக்கிறது.. அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறை என்பது எல்லாம் அந்த நாட்டு மக்களுக்கே வெளிச்சம். ஒரு பெரிய திறந்த வெளி சிறைச்சாலை போல அந்த நாட்டை நிர்வகித்து வருகிறார் கிம் ஜாங் உன்.

North Korea Kim Jong Un World

சிறிய குற்றங்களுக்கும் மரண தண்டனை

வடகொரியாவை பொறுத்தவரை அண்டை நாடான தென் கொரியாவுடன் தீராப்பகையை கொண்டுள்ளது. தென்கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளதால், அமெரிக்காவுடன் முறைத்துக்கொண்டு நிற்கிறது வடகொரியா. ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் அந்த நாட்டிற்கு ஆதரவு அளிக்கின்றன. அணு ஆயுத ஏவுகணைகள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை ஆகியவற்றை நடத்தி வருவதால் வடகொரியா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதனால், கடுமையான நிதி நெருக்கடியில் தவித்து வரும் வடகொரியா தனது அடவாடி போக்கை கைவிடுவது இல்லை. உள்நாட்டிலும் மக்கள் பல இன்னல்களை எதிர்கொண்டு வருகிறார்கள். வெளிநாட்டு திரைப்படங்களை பார்க்க கூடாது, குறிப்பிட்ட ஸ்டைலில் தான் முடி வெட்டிக்கொள்ள வேண்டும். என பல விசித்திர சட்டங்கள் உள்ளன. சட்டங்களை மீறினால் தண்டனையும் கடுமையாக அளிக்கப்படும். சிறிய குற்றங்களுக்கு கூட மரண தண்டனை விதிக்கப்படுகிறது.

டிவி வாங்கினால் கூட வீட்டிற்கு வரும் அதிகாரிகள்

ஒரு குடும்பத்தில் ஒருவர் தவறு செய்தால் மொத்த குடும்பத்திற்கே தண்டனை என பல கொடூரமான சட்டங்கள் உள்ளன. வடகொரியாவில் என்ன நடக்கிறது என அவ்வப்போது அந்த நாட்டில் இருந்து தப்பி வருபவர்கள் வாயிலாக தெரிய வருகிறது. அந்த வகையில், வடகொரியாவில் டிவி வாங்கினாலும் பல கெடுபிடிகள் காட்டப்படுகிறது. அதாவது ஒரு டிவி வாங்கினால் அடுத்த சில மணி நேரங்களில் வீட்டிற்கு மொத்த அரசு அதிகாரிகள் படையும் வந்துவிடுமாம்.

ஆண்டனா பொருத்தியிருந்தால் உடனே அதை அனைத்தையும் அகற்றிவிட்டு, அரசு தொலைக்காட்சியை பார்க்கும் விதமாக ஒரே ஒரு ஆண்டனா மட்டும் பொருத்தி விட்டு சென்று விடுவார்களாம். கிம் ஜாங் உன் ஆட்சியை பற்றியும் அவரது அரசின் கொள்கைகளை மட்டுமே பார்க்க முடியும். இதை மீறினால் அடுத்து என்ன நடக்கும் என்பது அதிபருக்கே வெளிச்சம் என்று சொல்லும் அளவுக்கு அங்கு கெடுபிடிகள் காட்டபடுகிறதாம். இந்த தகவலை வடகொரியாவில் இருந்து தப்பி வந்து இங்கிலாந்தில் தஞ்சம் அடைந்துள்ள திமுதிச ஷோ என்பவர் கூறியுள்ளார்.

சிலைக்கு தலைவணங்க வேண்டும்

சிறு குழந்தைகளுக்கு கூட அரசு சொல்லி வைத்த அந்த மாடலை பின்பற்றியே முடிவெட்ட வேண்டும். இல்லையென்றால் குடும்பத்தினர் கம்பி எண்ணுவார்களாம். அது போக ஒவ்வொரு தேசிய விடுமுறை நாளிலும் கிம் ஜாங் உன் குடும்பத்தினரின் சிலைக்கு சென்று தலைவணங்க வேண்டுமாம். வடகொரியாவில் எல்லையிலும் தீவிர கண்காணிப்பு இருப்பதால் அந்த நாட்டில் இருந்து தப்பி செல்ல நினைத்தால் கூட மக்களால் முடியாது. அரிதான சில நேரங்களில் சிலர் தப்பி சென்று விடுகிறார்கள். 1950 ஆம் ஆண்டில் இருந்து 30 ஆயிரம் வடகொரிய மக்கள் நாட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்கள். என்று அவர் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+