Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

30,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் பிரபல நிறுவனம்.. ஏஐ-யால் புலம்பும் ஐடி ஊழியர்கள்.. அடுத்த ஷாக்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: தகவல் தொழில்நுட்ப துறையில் உலகளவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக உள்ள ஆரக்கிள் நிறுவனம் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆரக்கிள் நிறுவனம் சார்பில் ஏஐ டேட்டா மையங்கள் அமைக்கும் பணிக்கு போதிய நிதி இல்லாததால் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப அந்த நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக அதிர்ச்சி செய்தி வெளியாகி உள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு ஆரக்கிள் (Oracle) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

layoffs oracle

தற்போது இந்த நிறுவனம் புதிய பிரச்சனையை சந்தித்துள்ளது. அதாவது ஆரக்கிள் நிறுவனம் புதிதாக ஏஐ (செயற்கை நுண்ணறிவு) தரவு மையங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

30,000 பேரை பணி நீக்க முடிவு

இந்த நிறுவனம் கடந்த ஆண்டு முதல் ஆரக்கிள் ஏஐ முதலீடுகளை அதிகரிக்க தொடங்கி உள்ளதது. ஓபன் ஏஐ உள்பட பல நிறுவனங்களுடன் சேர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் ஏஐ மையங்களுக்கு நிதி ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. நிதி பற்றாக்குறையில் நிறுவனம் சிக்கியது. இதனால் சுமார் 30,000 பணியாளர்களைப் பணிநீக்கம் செய்ய ஆரக்கிள் திட்டமிட்டுள்ளதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

10 பில்லியன் டாலர் வரை மிச்சம்

இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையின் மூலமாக அந்த நிறுவனத்துக்கு 8 பில்லியன் டாலர் முதல் 10 பில்லியன் டாலர் வரை சேமிக்க முடியும். இதனை அந்த நிறுவனம் ஏஐ மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் முதலீடுகளுக்கு பயன்படுத்த முடியும் என்று அந்த நிறுவனம் நம்புகிறது. இருப்பினும் இது போதுமானதாக இருக்காது. இதனால் அந்த நிறுவனம் சில பிசினஸ் யூனிட்டுகளையும் விற்பனை செய்வது பற்றியும் ஆராய்ந்து வருகிறது.

முதலீட்டு செலவு குறையும்

அதன்படி கிளவுட் அடிப்படையிலான ஹெல்த் சாப்ட்வேரை விற்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலமாக நிறுவனத்துக்கு கூடுதலாக நிதி கிடைக்கும். அதற்கு பதில் ஆரக்கிள் தனது வாடிக்கையாளர்களிடம் தங்களின் சொந்த சிப்களை பயன்படுத்த அனுமதிக்க வாய்ப்புள்ளது. இது ஆரக்கிளின் உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டுச் செலவுகளை குறைக்கும்.

கைவிரித்த வங்கிகள்

இதுபற்றி ஆரக்கிள் சார்பில் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் அந்த நிறுவனம் மேற்கூறிய திட்டத்தை கையில் எடுப்பது பற்றி பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது. அதேவேளையில் ஆரக்கிள் நிறுவனம் தொடர்பாக பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளது.

அதில், ‛‛அமெரிக்க வங்கிகள் பல, ஆரக்கிளின் புதிய ஏஐ தரவு மைய விரிவாக்க திட்டங்களுக்கு நிதியளிக்க மறுத்துவிட்டன.ஆரக்கிளின் ஏஐ விரிவாக்கத்திற்கான நிதி உதவி வழங்குவதிலிருந்து வங்கிகள் விலகியதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆரக்கிள் நிறுவனம் நிதி திரட்டுவதில் சிரமங்களை எதிர்கொள்கிறது. இதனால் நிறுவனம் செலவுகளை குறைக்கும் நடவடிக்கையை ஆராய்ந்து வருகிறது. அதன்படி உலகம் முழுவதும் 20,000 முதல் 30,000 ஊழியர்களை பணி நீக்க வாய்ப்புள்ளது. இது ஆரக்கிளின் மொத்த ஊழியர்களில் சுமார் 10 சதவீதமாகும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்கள் அதிர்ச்சி

ஆரக்கிள் நிறுவனத்தின் இந்த முடிவு என்பது அங்கு பணியாற்றும் ஊழியர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதுமட்டுமின்றி இது அந்த நிறுவனத்தின் நிதி நிலைமை, வணிக திட்டங்கள், எதிர்கால வளர்ச்சி குறித்த கவலையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மேற்கூறியபடி 30 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்தால் அது இதுவரை அந்த நிறுனம் கண்டிராத மிகப்பெரிய பணி நீக்கங்களில் ஒன்றாக அமையலாம்.

மேலும் ஆரக்கிள் மட்டுமின்றி சமீபகாலமாக பல்வேறு முக்கிய நிறுவனங்கள் ஏஐ-வை காரணம் காட்டி பணி நீக்க நடவடிக்கையை எடுத்து வருகிறது. அந்த வகையில் கடந்த டிசம்பர் மைக்ரோசாப்ட் நிறுவனம் சுமார் 10,000 பணியாளர்களைப் பணிநீக்கம் செய்வதற்கான திட்டங்களை அறிவித்தது. அதேபோல் அமேசான் நிறுவனம் 30 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+