ஜோபிடன் அதிபரானால்.. செப்டம்பர் 11 போன்று தாக்குதல் மீண்டும் நடைபெறும்.. பின்லேடன் மருமகள் ஆரூடம்!
வாஷிங்டன்: ஜோ பிடன் அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டால் செப்டம்பர் 11 போன்று மற்றொரு தீவிரவாத தாக்குதலை அமெரிக்கா எதிர்கொள்ளக் கூடும் என ஒசாமா பின்லேடனின் மருமகள் நூர் பின்லேடன் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி நடந்த உலக வர்த்தக மையம் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 3000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதை பாகிஸ்தான் பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தானில் அமெரிக்க பாதுகாப்பு படைகளால் ஸ்கெட்ச் போடப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.

மருமகள்
ஒசாமா பின்லேடன் இறப்பு குறித்து பல்வேறு தகவல்கள் மர்மமாகவே இருக்கிறது. இவ்வளவு ஏன் அவரது இறப்பே மர்மமாக உள்ளது என்கிறார்கள். அவர் உயிருடன் இருப்பதாக சிலர் கூறுகிறார்கள். இந்த நிலையில் நியூயார்க் போஸ்ட்டிற்கு ஒசாமா பின்லேடனின் மருமகள் நூர் பில்லேடன் பேட்டி அளித்துள்ளார்.

ஜோ பைடன்
அதில் அவர் கூறுகையில் நான் அமெரிக்க அதிபர் டிரம்பின் ரசிகை. டிரம்பால் மட்டுமே இரட்டை கோபுரத் தாக்குதல் போன்ற மற்றொரு பயங்கரவாத தாக்குதல் நடத்தாமல் தடுக்க முடியும். ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோபைடன் அதிபராக தேர்வு செய்யப்படக் கூடாது.

அமெரிக்கா
அவ்வாறு அவர் அதிபராக தேர்வு செய்யப்பட்டால் செப்டம்பர் 11 தாக்குதலை போன்று மற்றொரு பயங்கரவாத தாக்குதலை அமெரிக்கா எதிர்கொள்ளக் கூடும். பயங்கரவாதிகள் வேரோடு ஒழிப்பதில் டிரம்ப் முன்மாதிரியாக திகழ்கிறார். வெளிநாட்டு பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல்களில் இருந்து அமெரிக்காவையும் எங்களையும் டிரம்ப் திறம்பட காப்பாற்றி வருகிறார்.

ஆதரவாளர்
அதிபர் தேர்தலில் 2015-ஆம் ஆண்டு டிரம்ப் போட்டியிடுவதாக அறிவித்தது முதல் நான் டிரம்பின் ஆதரவாளராக உள்ளேன். அவரது தீர்மானங்களை பாராட்டுகிறேன். அவர்தான் மீண்டும் அதிபராக வேண்டும். அவர் அதிபராவது அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மேற்கத்திய நாடுகளின் எதிர்காலத்திற்கும் நல்லதாகும் என்றார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications