சூரியனையும் விட்டு வைக்காத கொரோனா! 2 நாட்களில் பூமியை தாக்க போகுது! "பேராபத்து" ஆய்வாளர்கள் வார்னிங்
வாஷிங்டன்: இங்கிருந்து நாம் பார்த்தால் சூரியன் எப்போதும் ஆக்டிவாக ஒரே போல இருப்பது போலவே தெரியும். ஆனால், சூரியனில் ஏகப்பட்ட மாற்றங்கள் தொடர்ச்சியாக நடந்து கொண்டே இருக்கிறது. இதற்கிடையே இப்போது சூரியனில் மிகப் பெரிய துளை ஏற்பட்டுள்ளதாகவும் அதிலிருந்து வெளியாகும் கொரோனில் பூமியில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம் எனவும் ஆய்வாளர்கள் (NASA Sun research) எச்சரிக்கிறார்கள்.
சூரியன் குறித்த ஆய்வுகளை உலகெங்கும் உள்ள ஆய்வாளர்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக நாசா ஆய்வாளர்கள் சூரியின் செயல்பாடுகளில் ஏற்படும் சின்ன சின்ன மாற்றங்கள் குறித்தும் ஆய்வு செய்து வருகிறார்கள். இதற்கிடையே இப்போது அவர்கள் சூரியினில் ஏற்பட்ட மிகப் பெரிய மாற்றத்தைக் கண்டறிந்துள்ளனர்.

மிகப் பெரிய துளை
சூரிய வளிமண்டலத்தில் 1 மில்லியன், அதாவது 10 லட்சம் கிமீ-க்கு மேல் அகலத்தில் ஒரு மிகப் பெரிய துளை உருவாகியுள்ளது. இது பூமியை நோக்கி ஒரு சக்திவாய்ந்த சூரிய புயலைக் கட்டவிழ்த்து விட்டு இருக்கிறது. இதனால் பூமியில் வரும் நாட்களில் புவி காந்த புயல்கள் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கள்கிழமை சூரியனின் வடக்கு ஹெமிஸ்பியரில் இருந்து ஒரு மிகப் பெரிய காந்த இழை (magnetic filament) வெடித்து.
இதனால் சூரியனில் இருந்து எனர்ஜி துகள்களை வெளியேற்றுகிறது. சூரியனின் மேற்பரப்பான கொரோனாவில் இருந்து இந்த மாஸ் எஜக்ஷன் நிகழ்கிறது. இதை கொரோனா மாஸ் எஜக்ஷன் என்றும் குறிப்பிடுவார்கள்
பூமியைத் தாக்கலாம்
இந்த கொரோனில் மாஸ் எஜக்ஷன் மே 23ம் தேதி பூமியின் காந்தப்புலத்தில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று இது தொடர்பாக அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் G1-வகுப்பு புவி காந்த புயல் அபாயமும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக உருவான இந்த கொரோனில் துளையிலிருந்து உருவான அதிவேக சூரிய காற்று வழியாகப் பூமி நகர்கிறது. இதனால் மே 20 முதல் 22ம் தேதி வரையிலான காலகட்டத்தில் சிறிய G1 வகை புயல்களும் ஏற்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனில் துளைகள் என்பது சூரியனின் காந்தப்புலம் திறக்கும் பகுதிகள் ஆகும். இந்த பகுதிகளில் இருந்து சூரிய காற்று, அதாவது சார்ஜ் செய்யப்பட்ட துகள்கள் வினாடிக்கு 700 கிமீ-க்கு அதிகமான வேகத்தில் வெளியேறும். அப்படி வெளியேறும்போது அவை பூமியை நோக்கி வந்தால், அது பூமியின் காந்தப்புலத்தையும் கூட பாதிக்கலாம்.
எப்படி இருக்கும்!
நாசாவின் சோலார் டைனமிக்ஸ் ஆய்வகம் இந்த துளைகளை போட்டோவாகவும் எடுத்திருந்தது. அதில் துளைகள் மிகவும் கருப்பான நிறத்தில் இருப்பது தெளிவாகத் தெரிந்தது. இங்கு வாயு எதுவும் இருக்காது என்பதாலேயே இதுபோல அதீத கருப்பு நிறத்தில் அந்த துளை தெரிகிறது.
இப்போது ஏற்பட்டுள்ள கொரோனில் துளை என்பது சூரியனின் தெற்கு ஹெமிஸ்பியரில் பெரியளவு நீண்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் சூரியனின் மேற்பரப்பில் இவ்வளவு பெரிய துளை ஏற்படுவது இதுவே முதல்முறை. இது என்ன மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதில் ஆய்வாளர்கள் கவனம் செலுத்துகிறார்கள்.
அதீத எனர்ஜி கொண்ட துகள்கள்
இந்த கொரோனில் இருந்து வெளிவரும் அதீத எனர்ஜி கொண்ட துகளின் விளைவுகள் பூமி ஏற்கனவே உணர தொடங்கிவிட்டது. சூரியனில் இருந்து வரும் அதிவேக சூரிய காற்று சிறிய புவி காந்த புயல்களைத் தூண்டியுள்ளது.. பூமியில் வடக்கு மற்றும் தென் துருவ வானில் வினோதமான கலர்களில் உருவாகும் அரோராக்கள் உருவாகவும் இதுவே காரணமாக இருக்கிறது.
கொரோனில் மாஸ் எஜக்ஷன் நெருங்கி வருவதால் அது பூமியில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. ரேடியோ தொடர்பு, சாட்டிலைட் செயல்பாடுகள், அவ்வளவு ஏன் மின்சார கிரிட்களில் கூட பாதிப்புகள் ஏற்படலாம் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். அதேநேரம் இதனால் ஏற்படும் உடனடி பாதிப்பு குறைவாகவே இருக்கும் என்கிறார்கள்.
வழக்கமான ஒன்றுதான்
இங்கிருந்து பார்த்தால் பூமி எப்போதும் ஆக்டிவாக இருப்பது போலவே தெரியும். ஆனால், அது குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை உச்சத்திற்குச் செல்லும். அதேபோல குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை அதன் ஆக்டிவிட்டி லெவல் குறையவும் செய்யும். இப்போது அது மிகவும் ஆக்டிவான நிலையில் இருக்கிறது. இதனால் இதுபோன்ற மாற்றங்கள் இயல்பானது தான் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அதேநேரம் சூரியன் குறித்துத் தெரிந்து கொள்ள இவை மிக பெரியளவில் உதவும் என்றும் சொல்கிறார்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications