பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது!
வாஷிங்டன்: ஈரானுக்குள் அமெரிக்க கடற்படை வீரர்கள் நுழைய ரெடியாகி வருகின்றனர். அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான, பென்டகன் திட்டத்தின்படி வீரர்கள் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது நடந்தால், ஈரான் தற்போது இருக்கும் நிலையை விட, இன்னும் மோசமாக பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
அமெரிக்கா-இஸ்ரேல் மோதலில் அதிபர் டொனால்ட் டிரம்ப் அடுத்தகட்ட நடவடிக்கைகளை யோசித்து வருகிறார். ஈரானில் அமெரிக்க தரைப்படை நிலைநிறுத்த பென்டகன் விரிவான வியூகங்களை வகுத்துள்ளதாக சிபிஎஸ் செய்தி ஊடகம் கூறியுள்ளது.

பென்கனின் பிளான்
இருப்பினும் டிரம்ப் இதனை மறுத்திருக்கிறார். நான் தற்போது எங்கும் படைகளை அனுப்பவில்லை. ஒருவேளை அப்படித் திட்டமிட்டிருந்தாலும், அதை உங்களிடம் ஊடகங்களிடம் சொல்ல மாட்டேன், என்று அவர் கூறியுள்ளார். மறுபுறம், இந்த விவகாரம் குறித்து வெள்ளை மாளிகை செயலாளர் கரோலின் லீவிட் கூறுகையில், "அதிபருக்குத் தேவையான அனைத்து மாற்றுத் தேர்வுகளையும் தயார் நிலையில் வைப்பதே பென்டகனின் வேலை" என விளக்கியுள்ளார்.
திட்டம் இதுதான்
இந்தத் திட்டமிடலில் மிக முக்கியமான அம்சம், போர் ஏற்பட்டால் ஈரான் இராணுவத்தினர் மற்றும் துணை இராணுவப் படையினரை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த விரிவான தளவாடத் திட்டம்:
- ஈரானியப் படையினரைக் கைது செய்தல் மற்றும் சிறைபிடித்தல்.
- அவர்களை எந்தெந்த இடங்களில் தடுத்து வைத்து விசாரணை நடத்துவது என்பது குறித்த இடங்களையும் இராணுவம் ஏற்கனவே அடையாளம் கண்டுள்ளது.
அமெரிக்க வீரர்கள்
இதற்காக அமெரிக்கா தனது வலிமையான மூன்று முக்கியப் பிரிவுகளை மத்திய கிழக்கு நோக்கித் தயார் செய்துள்ளது. 82வது ஏர்போர்ன் டிவிஷன் (82nd Airborne Division). இது வான்வழித் தாக்குதல் மற்றும் விரைவான செயல்பாட்டிற்குப் பெயர் பெற்றது. அதேபோல மரைன் எக்ஸ்பெடிஷனரி யூனிட். இது கடல் வழியாகத் தரைப்படையை இறக்கும் திறன் கொண்டது. குளோபல் ரெஸ்பான்ஸ் ஃபோர்ஸ் (Global Response Force). இது எந்தவொரு அவசரச் சூழலையும் உலகளவில் எதிர்கொள்ளும் ராணுவப் பிரிவு.
பதற்றம் அதிகரிப்பு
சுமார் 2,200 கடற்படை வீரர்களுடன் மூன்று அமெரிக்கப் போர்க்கப்பல்கள் கலிபோர்னியாவிலிருந்து ஏற்கனவே மத்திய கிழக்கு நோக்கிப் புறப்பட்டுவிட்டன. பசிபிக் பிராந்தியத்தில் இருந்த மற்றொரு படைப்பிரிவும் ஏற்கனவே மத்திய கிழக்கு நோக்கித் திசைதிருப்பப்பட்டுள்ளது. இதனால் மொத்த வளைகுடா நாடுகளிலும் பதற்றம் அதிகரித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications