அமெரிக்காவில் குடியேற்ற அதிகாரிகளால் ஒருவர் சுட்டுக்கொலை.. ஒரே மாதத்தில் நடந்த 2-வது ஷாக்! என்ன நடந்தது?
வாஷிங்டன்: அமெரிக்காவில் மினியாபொலிசில் குடியேற்ற அதிகாரிகளால் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மீண்டும் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அலெக்ஸ் ஜெப்ரி (வயது 37) என்பவர் குடியேற்ற நடைமுறைகளின் போது, குடியேற்ற அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளன.
அமெரிக்காவில் டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, வெளிநாட்டினர் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறார்கள். சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைந்தவர்கள், சட்டப்பூர்வமாக அமெரிக்காவில் நுழைந்தவர்கள் என இரு தரப்புமே நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது.

சில நேரங்களில் அமெரிக்க அதிகாரிகளின் செயல்கள் கடும் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் குடியேறியவர்களிடம் குடியேற்ற அதிகாரிகள் காட்டும் கடுமை சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இந்த நிலையில், மினியாபொலிசில் நடைபெற்ற ஒருதுப்பாக்கிச்சூடு அங்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அலெக்ஸ் ஜெப்ரி (வயது 37) என்பவர் குடியேற்ற நடைமுறைகளின் போது, குடியேற்ற அதிகாரிகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அந்த மாகாணத்தில் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றன. இது தொடர்பாக அமெரிக்காவின் உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:-
டிரம்பின் குடியேற்ற கட்டுப்பாடுகளை செயல்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்ட போது, தற்காப்புக்காக நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார். கைத்துப்பாக்கி வைத்து இருந்த நபர் ஒருவர் அடாவடியாக நடந்து கொண்டதாகவும் அவரிடம் இருந்து துப்பாக்கியை கைப்பற்ற முயன்ற போது எதிர்த்ததால், நடைபெற்ற மோதலில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.
இது தொடர்பான வீடியோ ஒன்றும் பரவி வருகிறது. அந்த வீடியோவில், பிரவுன் நிற ஜாக்கெட் அணிந்து இருந்த அந்த நபரை குடியேற்ற அதிகாரிகளை, நெஞ்சில் கை வைத்து தள்ளும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. கடந்த 7 ஆம் தேதி 37 வயதான ரினீ குட் என்பவரின் கார் மீது குடியேற்ற மற்றும் சுங்க அதிகாரிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், அவர் கொல்லப்பட்டார்.
இதையடுத்து அங்கு தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் மீண்டும் ஒரு துப்பாக்கி சூடு நடைபெற்று இருப்பது அம்மாகாணத்தில் பெரும் அதிர்ச்சியையும் கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications