விமானத்தை திருப்பி விட்டதால் கோபம்.. வானில் சேட்டை செய்த விமானி.. அதென்ன நீளமா? நெட்டிசன்ஸ் கலாய்!
வாஷிங்டன்: கடைசி நேரத்தில் தரையிறங்க அனுமதி கிடைக்காமல் விமானம் திருப்பி விடப்பட்டதால், எரிச்சல் அடைந்த விமானி, விமானம் வானத்தில் வட்டமிடும் போது ஆணுறுப்பு வடிவத்தில் சுற்றியது பேசுபொருளாகியுள்ளது.
விமானங்கள் வானில் பறந்து வந்து கொண்டிருக்கும் போது திடீரென வானிலையில் மாற்றம் ஏற்பட்டால் அவசரமாக வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்படும். அதேபோல், தரையிறங்க வேண்டிய விமான நிலையத்தின் சூழல் சரியில்லாமல் இருந்தாலோ... தரையிறங்குவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றாலோ... விமானத்தை பக்கத்தில் இருக்கும் வேறு விமான நிலையத்திற்கு விமான கட்டுப்பாட்டு அதிகாரிகள் திருப்பி விடுவார்கள்.

கனமழை பெய்து விமான நிலையங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும் சமயத்தில் நமது ஊரில் அடிக்கடி இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பதுண்டு.. சில நேரங்களில் விமானத்தில் பயணிகளுக்கு ஏதேனும் உடல் நலக்குறைவு உள்ளிட்ட அவசர தேவைகள் ஏற்பட்டாலும் விமானம் அவசரமாக அருகில் உள்ள விமான நிலையங்களில் தரையிறக்கப்படும். இது எல்லாம் விமானங்களில் வழக்கமாக நடக்கும் ஒரு நிகழ்வுதான்..
இதில் வியப்பதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை. ஆனால் அமெரிக்காவின் லுப்தன்சா விமானத்தின் விமானி ஒருவர்... விமானத்தை கடைசி நேரத்தில் திருப்பி விட்டதால் கடுப்பில் வானத்திலேயே ஆணுறுப்பு வடிவத்தில் வட்டமிட்டு சென்றது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இது குறித்த விவரத்தை பார்ப்போம். ஜெர்மனியின் பிரான்க்பர்ட் விமான நிலையத்தில் இருந்து இத்தாலியில் உள்ள சிசிலி நகரத்திற்கு லுப்தான்சா விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த விமானம் கடந்த மாதம் 28 ஆம் தேதி வழக்கம் போல் சிசிலி சென்று கொண்டிருந்த போது போண்டனரோஸ்சோ விமான நிலையத்தில் சேவைகள் குறைக்கப்பட்டு இருந்ததால் விமானத்தை மால்டாவில் தரையிறக்குமாறு விமானிக்கு அறிவுறுத்தப்பட்டது. இதனால், கோபம் அடைந்த பைலட் வானத்தில் வட்டமிடும் போது 24 கி.மீட்டர் தொலைவுக்கு ஆணுறுப்பு வடிவம் வரும் வகையில் சுற்றி வந்ததாக சொல்லப்படுகிறது.
பிளைட் ரேடாரில் விமானம் சென்று வந்த பாதை தெளிவாக ஆணுறுப்பு போன்றே பதிவாகியிருக்கிறது. மால்டா செல்வதற்கு முன்பாக 16 நிமிடங்கள் வானத்தில் வட்டமடித்த போது விமானி, இந்த வடிவத்தில் விமானத்தை சுற்றியதாக கூறப்படும் நிலையில், லுப்தன்சா விமான நிறுவனம் திட்டமிட்டு இதுபோல நடக்கவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது.
விமானம் எங்கு திருப்பிவிடப்படும் என்ற தகவல்கள் கிடைக்காததால் வானில் வட்டமிட வேண்டிய நிலை விமானிக்கு ஏற்பட்டது. அப்போது இதுபோன்ற நிகழ்வு எதார்த்தமாக நடைபெற்றுள்ளது. விமானி நோக்கத்துடன் இப்படி செயல்படவில்லை. காற்றின் வேகத்தில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக விமானம் திருப்பிவிடப்பட்டது" என்று விளக்கம் அளித்துள்ளது.
இந்த விவகாரம் இணையத்தில் நெட்டிசன்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. விமானத்தில் வட்டமிடும் போது தனது சேட்டையை காட்டியதாக கூறப்படும் விமானியின் செயலை ஒரு தரப்பினர் விமர்சித்து வருகின்றனர். ஒரு சில நெட்டிசன்களோ, வானத்தில் வட்டமிடும் போது தனது தனித்துவத்தை காட்டும் வகையில் விமானி செயல்பட்டு இருக்கிறாரே என கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications