பசுபிக் கடல் பகுதியில் "பறக்கும் தட்டுக்கள்".. நேரில் பார்த்த விமானிகள்.. வெளியான புது தகவல்கள்
வாஷிங்டன்: பசுபிக் பெருங்கடலுக்கு மேல் விமானத்தில் பறந்துகொண்டிருந்த போது பறக்கும் தட்டுக்களை பார்த்ததாக விமானிகள் தெரிவித்துள்ளது இது தொடர்பான ஆய்வுகளுக்கு கூடுதல் வலுசேர்த்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரபஞ்சத்தில் எத்தனை கோள்கள் உள்ளன? பூமியில் வசிப்பது போன்ற வேற்று கிரகங்களிலும் மனிதர்கள் வசிக்கிறார்களா? என பல கேள்விகளும்.. கற்பனைகளும்.. மனிதர்களிடையே ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.
அவ்வப்போது பறக்கும் தட்டுக்களை கண்டதாகவும் வேற்று கிரகவாசிகளை பார்த்ததகாவும் சில வெளிநாடுகளில் யாராவது கிளப்பி விட அது பற்றிய விவாதங்கள் அதிகரித்து விடும்.

பறக்கும் தட்டுகளை பார்த்தோம்..
நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் கூட வேற்று கிரகவாசிகள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஒருபக்கம் வேற்று கிரகவாசிகளின் பறக்கும் தட்டுக்களை பார்த்ததாக சிலர் சொல்லிவந்தாலும் அது வெறும் புரளியாகவே இருக்கும் என்று தரப்பு மறுத்து வருகிறது. இந்த நிலையில், கடந்த இரு மாதங்களில் பசுபிக் பெருங்கடல் மேல் பகுதியில் விமானத்தில் செல்லும் போது பறக்கும் தட்டுக்களை கண்டதாக விமானிகள் பலர் சொல்லியிருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் இதுபற்றிய புதிய விவாதங்களையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பசுபிக் பெருங்கடல் மேல் பறக்கும் போது
இது தொடர்பாக தகவலை UFO (அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்கள்) பறக்கும் தட்டுக்கள் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டு இருக்கும் முன்னாள் எப்.பி.ஐ ஏஜென் பெஹ் ஹன்சேன் என்பவர் கூறியிருக்கிறார். இது தொடர்பான விமான கட்டுப்பாட்டு அமைப்புகளின் பதிவுகளையும் அவர் சேகரித்து ஆய்வில் ஈடுபட்டு இருப்பதாக நியூயார்க் போஸ்ட் தெரிவித்துள்ளது. சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் , ஹவேயியன் ஏர்லைன்ஸ் உள்பட மேலும் சில விமான நிறுவனங்களின் விமானிகள் பசுபிக் பெருங்கடல் மேல் பறக்கும் போது பல பறக்கும் தட்டுக்களை பார்த்தோம் என்று கூறியதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி
லாஸ் ஏஞ்சல்ஸ் கடல் பகுதியில் தனி விமானத்தில் சென்ற போது மார்க் ஹல்சே என்ற விமானி, பறக்கும் தட்டை பார்த்ததாக விமான கட்டுப்பாட்டு அமைப்பை தொடர்பு கொண்டு கூறியிருக்கிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. நமக்கு வடக்கு பகுதியில் சில விமானங்கள் பறப்பதாகவும் வட்டமிடுவதாகவும் மிக உயரமாக பறக்கின்றன. இதைப்பற்றி எதுவும் ஐடியா உள்ளதா? என்று கேட்டு இருக்கிறார். ஆனால், விமான கட்டுப்பாட்டு அமைப்பு அதிகாரிகள் உறுதியாக எதுவும் தெரியவில்லை என்று பதில் அளித்துள்ளார்.

இதற்கு முன்னர் இப்படி பார்த்ததில்லை
அடுத்த 23-வது நிமிடத்தில் 5 அயிரம் முதல் 10 ஆயிரம் அடி உயரத்தில் மேலும் 7 ஏர்கிராப்ட்களை கண்டதாகவும் தொடர்ந்து வட்டமிட்டு வருவதாகவும் இதற்கு முன்பாக இதுபோன்ற ஒரு நிகழ்வை பார்த்தது இல்லை என்றும் ஹல்சே தெரிவித்துள்ளார். அதேபோல், பறக்கும் தட்டுக்கள் குறித்த ஆய்வில் ஈடுபட்டு இருக்கும் ஹன்சேன் கூறுகையில், வர்த்தக விமானங்களின் விமானிகளும் வினோதமான ஒளியை கண்டதாக தெரிவித்து இருக்கின்றனர்.

கூடுதல் வலு சேர்க்கும்
இதில் சுமார் 6 விமானிகள் தாங்கள் விசாரணை அமைப்புகள் கேள்வி எழுப்பினால் தங்களின் பெயருடன் இந்த தகவலை பகிர்ந்து கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்து இருக்கின்றனர். தற்போது வெளியாகி இருக்கும் இந்த புது தகவல் உண்மையில் பறக்கும் தட்டுக்கள் உள்ளனவா? அல்லது வெறும் கற்பனையா? என்பதை பற்றிய ஆய்வுக்கு கூடுதல் வலு சேர்க்கும் என்று தெரிகிறது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications