ப்ளீஸ் ப்ளீஸ்.. இந்தியாவிடம் கெஞ்சும் டிரம்பின் ஆலோசகர்! மிரட்டல் எடுபடாததால் திணறும் அமெரிக்கா
வாஷிங்டன்: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை டிரம்ப் விதித்துள்ளார். ஆனாலும் நம் நாடு ரஷ்யாவிடம் தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. இந்நிலையில் தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு நெருக்கமானவரும், வெள்ளை மாளிகையின் வர்த்தக பிரிவு ஆலோசகருமான பீட்டர் நவரோ நம் நாட்டிடம் கெஞ்சிய சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டின் மீது வன்மத்தை கக்கி வருகிறார். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவது மற்றும் இந்தியாவுடனான வர்த்தக பற்றாக்குறையை சுட்டிக்காட்டி வரிகளை விதித்துள்ளார். 25 சதவீதம் என்று மொத்தம் 2 முறை வரிகளை விதித்துள்ளார்.

கடந்த 7 ம் தேதி முதற்கட்டமாக 25 சதவீத வரி அமலுக்கு வந்துவிட்டது. அடுத்தக்கட்டமாக வரும் 27 ம் தேதி முதல் 25 சதவீத வரி அமலுக்கு வர உள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார். இது செயல்பாட்டுக்கு வரும் பட்சத்தில் நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு 50 சதவீத வரி கட்ட வேண்டியிருக்கும்.
இது அமெரிக்காவுக்கான நம் நாட்டின் ஏற்றுமதியை குறைக்கும். இது ஒருபுறம் இருக்க ரஷ்யாவின் கச்சா எண்ணெயை இந்தியா வாங்க கூடாது என்று டிரம்ப் மிரட்டி வருகிறார். கச்சா எண்ணெயை வாங்கும் பட்சத்தில் 2ம் நிலை பொருளாதார தடை விதிக்கப்படும் என்றும் மிரட்டி உள்ளார். ஆனால் நம் நாடு டிரம்பின் மிரட்டலுக்கு பயப்படவில்லை. ரஷ்யாவிடம் தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது.
இந்நிலையில் தான் டொனால்ட் டிரம்பின் நீண்டகால நண்பரும், வெள்ளை மாளிகையின் வர்த்தக பிரிவின் ஆலோசகருமான பீட்டர் நவரோ இந்தியா பற்றி பேசி உள்ளார். ரஷ்யா - இந்தியா உறவு, இந்தியாவுக்கான அமெரிக்காவின் வரி விதிப்பு உள்ளிட்டவை பற்றி அவர் கருத்து தெரிவித்துள்ளார். இதுபற்றி பீட்டர் நவரோ, ‛‛ரஷ்யாவிடம் கச்சா எண்ணெயை வாங்குவதற்கான தேவை இந்தியாவிற்கு இல்லை. ரஷ்யாவின் கச்சா எண்ணெய் இந்தியாவுக்கு தேவை எனக்கூறுவது முட்டாள்தனமானது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியா மீது ஆகஸ்ட் 27 ம் தேதி 2ம் கட்டமாக 25 சதவீத வரி விதிப்பது அமலுக்கு வரும்.இன்னும் 6 நாட்களில் நீங்கள் இதனை பார்க்க போகிறீர்கள்.
ஏனென்றால் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெயை வாங்கி உக்ரைன் போருக்கு இந்தியா எரிபொருளை ஊற்றி வருகிறது. இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி பயன்படுத்துவது மட்டுமின்றி அதனை விற்பனையும் செய்கிறது. ரத்த களரியில் இந்தியா தனது பங்கை நினைத்து பார்ப்பது இல்லை. அதனை கண்டுக்கொள்வதும் இல்லை. இது ஜி ஜின்பிங்கின் செயலை போல் உள்ளது. இந்த விஷயத்தில் சீனாவை போல் தான் இந்தியா செயல்படுகிறது.
இந்தியா வரி விதிப்பின் மகாராஜா. அதிக வரிகளை விதிக்கிறது. இந்தியாவுடன் எங்களுக்கு வர்த்தக பற்றாக்குறை உள்ளது. இது அமெரிக்காவின் தொழிலாளர்களை பாதிக்கிறது.அமெரிக்க வணிகங்களை பாதிக்கிறது. எங்களிடம் பொருட்களை விற்பனை செய்து கிடைக்கும் பணத்தை வைத்து இந்தியா ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி சேமித்து வைத்து லாபம் ஈட்டுகிறது.
உண்மையில் நான் இந்தியாவை நேசிக்கிறேன். பிரதமர் மோடி சிறந்த தலைவர். இதனால் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும். ப்ளீஸ்.. ப்ளீஸ்.. உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு என்ன? என்பதை பார்க்க வேண்டும். ரஷ்யா உடனான இப்போதைய உறவு அமைதியை உருவாக்குவதற்கானது அல்ல. அது போரை தொடர வைக்கிறது'' என கெஞ்சியுள்ளார்.












Click it and Unblock the Notifications