முதலை வாயில் பச்சிளம் குழந்தை! தாய் மிக கொடூரமாக கொலை.. 21 வயது தந்தை செய்த நெஞ்சை உலுக்கும் காரியம்
வாஷிங்டன்: அமெரிக்காவில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே அங்கே நெஞ்சைப் பதற வைக்கும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்காவில் கொடூர கொலை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அங்கு அதிகரிக்கும் துப்பாக்கி கலாச்சாரமே இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இருப்பினும், துப்பாக்கி நிறுவனங்கள் தங்கள் ஆதிக்கத்தால் இதுபோல எந்தவொரு சட்டமும் வராமல் பார்த்துக் கொள்கின்றனர். இதனால் அமெரிக்காவில் நடக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

அமெரிக்கா
இதனிடையே மற்றொரு பகீர் கொலை சம்பவம் இப்போது அமெரிக்காவில் நடந்துள்ளது. அமெரிக்காவின் புளோரிடாவில் மாகாணத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, 20 வயதே ஆன இளம் பெண் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருந்தார். அவரது உடலில் கத்தி குத்து உள்ளிட்ட பல கடுமையான காயங்கள் காணப்பட்டது. இந்த கொலை வழக்கில் அவரது கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், அந்த தம்பதிக்குக் குழந்தை ஒன்று இருந்தது.

குழந்தை
அந்த குழந்தை அங்கே இல்லாத நிலையில், குழந்தையைத் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டது. பல நாட்கள் கை குழந்தையைத் தேடும் பணிகள் நடைபெற்றது. இதனிடையே இரண்டு வயதான அந்த சிறுவனின் உடலைத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டவர்கள் முதலை ஒன்றின் வாயில் கண்டுபிடித்தனர். முதலில் அவர்களால் தாங்கள் கண்ட காட்சியை நம்பவே முடியவில்லை. தாங்கள் கண்ட காட்சியை ஜீரணிக்கவே அவர்களுக்குக் கொஞ்ச நேரம் ஆகியுள்ளது.

முதலை
முதலில் வேறு ஏதோ பொருளையே முதலை வாயில் வைத்திருந்தாக அதிகாரிகள் நினைத்தனர். இருப்பினும், அருகே சென்று பார்த்த போது தான் அது குழந்தையின் சடலம் என்பது அவர்களுக்குத் தெரிய வந்துள்ளது. முதலையிடம் இருந்து குழந்தையைச் சடலத்தை மீட்க முயன்றுள்ளனர். இருப்பினும், அந்த முதலை விடவில்லை. இதனால் வேறு வழியில்லாமல் அவர்கள் முதலையைச் சுட்டுக் கொன்ற பிறகே சடலத்தை மீட்டுள்ளனர்.

போலீசார்
அந்த குழந்தை முதலையிடம் சிக்கி உயிரிழந்ததா அல்லது அதற்கு முன்னரே உயிரிழந்துவிட்டதா என்பதை போலீசார் இதுவரை கண்டறிய முடியவில்லை. இது குறித்து அந்த பெண்ணின் கணவர் மீது கொடூர கொலை உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் மேலும் கூறுகையில், "நாங்கள் குழந்தையை இப்படிக் கண்டுபிடிப்போம் என்று துளியும் நினைக்கவில்லை. இதை ஏற்றுக் கொள்ளவே எங்களுக்குக் கொஞ்ச நேரம் ஆனது" என்றார்.

தாய் கொடூர கொலை
முதலில் போலீசார் அந்த குழந்தையின் அம்மா ஜெஃப்ரியின் சடலத்தை சில நாட்களுக்கு முன்பு கண்டுபிடித்துள்ளனர். கத்திக் குத்துகளால் அவர் உயிரிழந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவருக்கு மகன் இருந்தது தெரிய வந்த நிலையில், குழந்தையைத் தேடும் பணிகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். குழந்தையின் மரணத்திற்கு என்ன காரணம் என்பதை மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

தந்தையே காரணம்
அந்த பெண்ணின் 21 வயதான கணவர் தாமஸ் மோஸ்லி என்பவர் இந்த கொலையைச் செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இப்போது தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர். கொலை நடந்து சில மணி நேரத்தில் தாமஸ் கைகளில் வெட்டுக் காயங்களுடன் மருத்துவமனைக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications