கையில் 3 துப்பாக்கி! பள்ளியில் நுழைந்த திருநங்கை! சரமாரி துப்பாக்கி சூடு! 3 குழந்தை உட்பட 6 பேர் பலி
வாஷிங்டன்: அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் இருந்து கொண்டே தான் இருக்கிறது. இதற்கிடையே அங்குப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மூன்று சிறார்கள் உட்பட 6 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர்.
நம்ம ஊரில் ஒரு துப்பாக்கியை வைத்திருக்கக் கூட ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் இருக்கிறது. துப்பாக்கி வாங்கும் லைசென்ஸ் கூட அவ்வளவு சீக்கிரம் அனைவருக்கும் கிடைத்துவிடாது. பல கட்டுப்பாடுகள் இருக்கும்.
ஆனால், அமெரிக்காவில் அப்படியில்லை.. அங்கே மிக எளிமையாக ஒருவரால் துப்பாக்கியை வாங்க முடியும். லைசென்ஸ் வாங்குவதெல்லாம் பெரிய சிக்கலே இல்லை என்பது அங்கே பிரச்சினைக்குரிய விஷயமாகும்.

அமெரிக்கா
இப்படி யாருக்கு வேண்டுமானாலும் துப்பாக்கி கிடைக்கும் என்ற சூழல் இருப்பதால், அங்கே துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதனால் பல அப்பாவி மக்களின் உயிர்களும் போகிறது. இதுபோன்ற சம்பவங்களைக் கட்டுப்படுத்த துப்பாக்கி வாங்கக் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல காலமாகவே அங்கே இருந்து கொண்டு தான் இருக்கிறது. ஒபாமா கூடத் தான் அதிபராக இருந்த போது கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கும் சட்டத்தைக் கொண்டு வர முயன்றனர்.

பள்ளியில் துப்பாக்கிச் சூடு
இருப்பினும், ஆயுதங்களைத் தயாரிக்கும் பெரு நிறுவனங்கள் இதுபோன்ற சட்டங்கள் வராமல் பார்த்துக் கொண்டன. இப்போது வரை கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கும் சட்டம் வேண்டும் என்று பலரும் வலியுறுத்தியே வருகின்றனர். இதற்கிடையே எதற்காக இதுபோன்ற கட்டுப்பாடுகள் தேவை என்பதைக் காட்டும் வகையிலான ஒரு மோசமான சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. இதில் மூன்று குழந்தைகள் உட்பட ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தாக்குதல் நடத்தியது யார்
அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் உள்ள நாஷ்வில்லி நகரில் தான் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. அங்கே உள்ள தனியார் தொடக்கப் பள்ளியில் நடந்த நன்கு கவனமாகத் திட்டமிடப்பட்ட இந்த தாக்குதலில் மூன்று குழந்தைகள், மூன்று ஊழியர்கள் என்று ஆறு பேர் கொல்லப்பட்டனர். முன்னாள் மாணவர் ஒருவரே இந்த ஆறு பேரையும் கொன்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த கொடூர சம்பவத்தில் ஜான் டிரேக் என்பவர் ஈடுபட்டு இருக்கலாம் என்றும் திருநங்கையான அவரை தீவிரமாகத் தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

திட்டமிட்டுத் தாக்குதல்
இது ஏதோ ஆத்திரப்பட்டு கோபத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தைப் போலத் தெரியவில்லை. நன்கு திட்டமிடப்பட்டத் தாக்குதல் போலவே இருக்கிறது. துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு ஜான் டிரேக் விட்டுச் சென்ற சில ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர். அதில் பள்ளியின் கண்காணிப்பு, உள்ளே வரவும் வெளியே செல்லவும் எங்கெல்லாம் வழிகள் உள்ளன என்பது குறித்து விளக்கும் மேப்கள் இருக்கிறது. இது மட்டுமில்லாமல் அவர் போலீசாருடன் மோதலில் ஈடுபடவும் தயாராகவே இருந்ததாகவும் அதற்கான திட்டங்களை வைத்திருந்தார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொல்லப்பட்டது யார்
பள்ளியுடன் நில்லாமல் மிகப் பெரிய தாக்குதலை அந்த நபர் திட்டமிட்டுள்ளார். ஏனென்றால், அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மேப்பில் எங்கெல்லாம் துப்பாக்கிச் சூட்டை நடத்த வேண்டும் என்பதை அவர் மார்க் செய்து வைத்துள்ளார். அந்த நபர் இரு அதிநவீனத் துப்பாக்கிகள் மற்றும் ஒரு கைத்துப்பாக்கியுடன் பள்ளிக்குள் நுழைந்துள்ளார். பள்ளியில் நுழைந்த மறுகணமே அந்த நபர் சுடத் தொடங்கிவிட்டார். இதில் எட்டு வயதான ஒரு குழந்தை, 9 வயதான இரண்டு குழந்தை உயிரிழந்துள்ளனர். இது தவிரப் பள்ளி முதல்வர் உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டதாக போலீசார் உறுதி செய்துள்ளனர்.

பைடன்
காலை 10:00 மணியளவில் அங்கே துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்த 15 நிமிடங்களுக்குள் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். இருந்த போதிலும், அதற்குள் அவர் இந்த கொடூரத்தை அரங்கேற்றிவிட்டார். இந்தச் சம்பவத்திற்கு அங்குள்ள பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது ரொம்பவே மோசமான ஒரு சம்பவம் என்று குறிப்பிட்டுள்ள அமெரிக்க அதிபர் பைடன், இது நாட்டின் ஆன்மாவைக் கிழிக்கிறது என்றும் பயங்கர ஆயுதங்களின் பயன்பாட்டைத் தடுக்க அமெரிக்க நாடாளுமன்றம் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
-
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
ஈரான் மீதான தாக்குதல் 5 நாட்களுக்கு நிறுத்தம்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீர் அறிவிப்பு! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
இரண்டாக பிளந்த விமானம்.. விமான நிலையத்தில் மோசமான விபத்து.. திடீர் பரபரப்பு! -
"நடக்க கூட முடியல.." ரொம்பவே மோசமாகி போன டிரம்ப் உடல்நிலை? பெரிய விவாதமான வீடியோ -
டிரம்ப் சொன்னது பொய்யா? பேச்சுவார்த்தையே நடக்கவில்லை.. பின்வாங்கிட்டாங்க! எகிறி அடிக்கும் ஈரான் -
20% வரை சரிந்த தங்கம் விலை! ஆனாலும் இந்தியாவுக்கு முழு பலன் கிடைக்காது! நிபுணர்கள் சொல்லும் விளக்கம் -
இதை வச்சு தான் சீன் போட்டீங்களா? எப்15 போர் விமானத்தை குருவி போல் சுட்ட ஈரான்? அமெரிக்காவுக்கு ஆப்பு -
பஹ்ரைனில் சொதப்பிய US! பாதுகாப்பு டெக்னாலஜியில் பெரிய ஓட்டை! குடியிருப்புக்குள் பாய்ந்த ஏவுகணை -
ஈரான் போரில் தலையை விட்ட பாகிஸ்தான்.. ட்ரம்ப் - பாக். ராணுவ தளபதி ரகசிய போன் கால்.. ஷாக் பின்னணி -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications