என்னதான் நடக்குது? அடுத்தடுத்து ஏற்படும் நிலநடுக்கங்கள்..குலுங்கிய பப்புவா நியூ கினியா..6.2 ஆக பதிவு
பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது.
வாஷிங்டன்: பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பப்புவா நியூ கினியாவில் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.
துருக்கியில் கடந்த மாத துவக்கத்தில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி - சிரிய எல்லையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் பேரழிவை ஏற்படுத்தியது.
குறிப்பாக துருக்கியில் சுமார் 10 மாகாணங்கள் நிலைகுலைந்தன. துருக்கி நிலநடுக்கம் இந்த வருடத்தில் நடைபெற்ற மிகப்பெரிய பேரழிவாக பார்க்கப்படுகிறது.

துருக்கியில் 50 ஆயிரம் பேர் பலி
கடந்த 50 வருடங்களில் துருக்கி சந்தித்த மிக மோசமான நிலநடுக்கமாக, பேரழிவாக இந்த சம்பவம் அமைந்தது. துருக்கியில் 50 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் நிலநடுக்கம் காரணமாக படுகாயம் அடைந்துள்ளனர். நிலநடுக்கம் ஏற்பட்டு பல வாரங்களுக்கு அங்கு மீட்பு பணிகள் நடைபெற்றன. மறு கட்டமைப்பு பணிகள் தற்போது தொடர்ந்தாலும் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் இன்னும் கூட மக்கள் இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப முடியாத அளவிலே உள்ளனர்.

அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்
அந்த அளவுக்கு நிலநடுக்கம் கோர பாதிப்பை ஏற்படுத்தியது. துருக்கி, சிரியா நிலநடுக்கத்தை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் அடுத்தடுத்து ஏற்பட தொடங்கி உள்ளன. உலக அளவில் பல்வேறு நாடுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. நியூசிலாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களும் சில நாடுகளில் லேசான நிலநடுக்கங்களுமாக ஏற்பட்டது. துருக்கியில் கூட பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கத்திற்கு பிறகு அவ்வப்போது பூமி குலுங்கி மக்களை அச்சப்படுத்தி வருகிறது.

ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவு
இப்படி அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் நிலநடுக்கங்கள் மக்களுக்கு பெரும் அச்சத்தை கொடுத்துள்ளது. இந்தியாவின் அந்தமான் தீவுகளில் கூட கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவானது. இந்த நிலையில், தென்மேற்கு பசுபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியாவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது.

சுனாமி எச்சரிக்கை?
பப்புவா நியூ கினியா நாட்டின் கிழக்கு பகுதிதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மொரேஸ்பை துறைமுகத்திற்கு வடக்கு வடமேற்கே 448 கி.மீட்டர் தொலைவில் 200 கி.மீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்து தகவல் எதுவும் இல்லை. சுனாமி எச்சரிக்கையும் எதுவும் விடப்படதாக தெரியவில்லை.












Click it and Unblock the Notifications