பூமியை நெருங்கும் மர்ம விண்கல்லில் நீர்.. ஏலியன் ஸ்பேஸ்ஷிப்தான் அது! அடித்து சொல்லும் ஆய்வாளர்கள்
வாஷிங்டன்: சூரிய குடும்பத்திற்கு கொஞ்சமும் சம்பந்தமே இல்லாத பொருள் ஒன்று பூமியை நோக்கி வந்துக்கொண்டிருக்கிறது. பார்க்க விண்கல் போல இருந்தாலும் இது ஏலியன்களின் ஸ்பேஸ்ஷிப்பாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. இதற்கு காரணம் இந்த விண்கல்லில் தண்ணீர் இருக்கிறது என்பதுதான்.
இந்த விண்கல்லுக்கு 3I/ATLAS என விஞ்ஞானிகள் பெயரிட்டிருக்கின்றனர். சக்திவாய்ந்த விண்வெளித் தொலைநோக்கிகளில் ஒன்றான SPHEREx மூலம் கடந்த 7ம் தேதி தொடங்கி 15ம் தேதி வரை இந்த விண்கல் கண்காணிக்கப்பட்டது. இந்த கண்காணிப்பின் மூலம் பல முக்கிய விஷயங்கள் தெரிய வந்திருக்கின்றன. குறிப்பாக இந்த விண்கல்லில் நீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

எனவே மிகவும் சக்தி வாய்ந்த ஜேமஸ் வெப் தொலைநோக்கி மூலம் இந்த விண்கல் ஆய்வு செய்யப்பட்டது. பார்க்க விண்கல் மாதிரி தெரிந்தாலும் இது ஒரு வால்நட்சத்திரம் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஜேம்ஸ் வெப் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இதில் நீர் பனி மற்றும் கார்பன் மோனாக்சைடு ஆகியவை குறைந்த அளவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன. பொதுவாக இவையெல்லாம் சூரிய குடும்பத்தின் எல்லையாக இருக்கும் கைப்பர் பெல்ட் பகுதியில்தான் இருக்கும் பொருட்களில்தான் காணப்படும். எனவே இந்த விண்கல் கைப்பர் பெல்ட் பகுதியிலிருந்து வந்திருக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
5.5 கிலோமீட்டர் விட்டம் கொண்ட இந்த கல், வேற்று கிரக நட்சத்திர அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டு, விண்மீன் மண்டலங்களுக்கு இடையிலான விண்வெளியில் வீசப்பட்டிருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் சந்தேகிக்கின்றனர்.
இந்த விண்கல் முதல் முறையாக கடந்த ஜூலை மாதம் 1ம் தேதியன்று சூரியனில் இருந்து 675 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டது. இது நமது சூரிய மண்டலத்திற்கு வெளியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட மூன்றாவது விண்கல்லாகும். கடந்த 2017ல் இதே போன்ற ஒரு கல் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் 3I/ATLAS என்கிற விண்கல் அநேகமாக ஒரு வால் நட்சத்திரமாக இருக்கலாம் என்று சந்தேககிக்கப்படுகிறது. ஆனாலும் இதில் சில கேள்விகள் இருக்கின்றன. அதாவது வால் நட்சத்திரங்கள் சூரியைனதான் சுற்றும். இந்த 3I/ATLAS விண்கல் சூரியனை சுற்றவில்லை. சூரியனின் ஈர்ப்பு விசைக்கு இது கட்டுப்படவில்லை. இந்த விவகாரத்தில் ஆறுதல் அளிக்கக்கூடிய ஒரே விஷயம் என்னவெனில், இந்த விண்கல்லால் பூமிக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்பதுதான். இது நமது சூரிய மண்டலத்தைக் கடந்து சென்று விண்மீன் மண்டல விண்வெளிக்குள் அதன் பயணத்தைத் தொடரும்.
கோட்பாட்டு இயற்பியலாளர் பேராசிரியர் அவி லோப், இந்த விண்கல்லை ஏலியன்கள் அனுப்பியிருக்கலாம் என்று கூறுகிறார். ஆனால் இது என்ன என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications