வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதல் முறையாக ரேடியோவில் ஒலிபரப்பான இளவரசர் ஹாரி மகனின் பேச்சு... மழலை குரலில் புத்தாண்டு வாழ்த்து

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: பிரிட்டன் இளவரசர் சார்லஸ் - டயானா தம்பதியரின் இளைய மகன் இளவரசர் ஹாரி. இவரும் இவரது மனைவி மேகனும் அரசு குடும்பத்தின் உறுப்பினர் பதவியிலிருந்து விலகப்போவதாக இந்தாண்டு தொடக்கத்தில் அறிவித்தனர்.

இவர்களின் கோரிக்கைக்கு ராணி இரண்டாம் எலிசபெத் ஒப்புதல் அளித்தார். இதைத்தொடர்ந்து அவர்கள் அமெரிக்காவின் கலிபொர்னியாவில் வாழ்ந்து வருகின்றனர்.

Prince Harry, Meghans Son Archie Speaks For First Time In Royal Couples Podcast

மேலும், அரசு குடும்பத்திலிருந்து விலகியதால், அரசு குடும்ப வருமானம் இவர்களுக்கு வராது. இதனால் ஸ்பாட்டிபை, நெட்ஃபிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுடன் இளவரசர் ஹாரி-மேகன் தம்பதி பல்வேறு ஒப்பந்தங்களையும் மேற்கொண்டனர்.

இதன் ஒரு பகுதியாக, ஸ்பாட்டிபை நிறுவனத்திற்காக ஒரு பாட்காஸ்ட் நிகழ்ச்சியை இளவரசர் ஹாரி-மேகன் தம்பதி வழங்கி வருகின்றனர். இந்நிகழ்ச்சியில் தான் தற்போது அவர்களின் ஒரு வயது மகன் ஆர்ச்சி பேசியுள்ளார்.

"அவர்" இல்லாவிட்டால் என்ன.. திமுகவை நாங்களே காலி செய்வோம்.. போட்டு தாக்கும் அர்ஜுன் சம்பத்

அதில் ஆர்ச்சி தனது மழலை குரலில் புத்தாண்டு வாழ்த்தைத் தெரிவித்தார். ஆர்ச்சியின் குரலை உலகம் கேட்பது இதுவே முதல்முறையாகும். இதனால் பிரிட்டன் அரசு குடும்பத்தைப் பின்தொடர்பவர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஆர்ச்சியின் குரல் கேட்க அமெரிக்கர்களின் குரலைப் போல உள்ளதாக டெய்லி மெயில், சன் உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள் கூறியுள்ளன.

English summary
Prince Harry and Meghan Markle's toddler son Archie was heard speaking for the first time Tuesday, as the couple released their first podcast, with British media seizing on his "American" accent.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X