நவல்னி மரணத்திற்கு புடின் தான் பொறுப்பு.. ரஷ்யாவுக்கு எதிராக வரிந்து கட்டும் ஜோ பைடன்
வாஷிங்டன்: ரஷ்யா எதிர்க்கட்சி தலைவரும், அதிபர் புடினை கடுமையாக விமர்சித்து வந்தவருமான அலெக்ஸி நவல்னி சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். நவல்னி மரணத்திற்கு புதினே காரணம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் காட்டமாக கூறியுள்ளார்.
ரஷ்ய அதிபர் புடினை மிகக் கடுமையாக எதிர்த்து வந்தவர் அலெக்ஸி நவல்னி. புடின் சொத்து மதிப்பு, அவரது ஆடம்பர வாழ்க்கை, சொகுசு பங்களா என்று ஒவ்வொன்றையும் ஆதாரத்துடன் வீடியோவாக வெளியிட்டு மிகக் கடுமையாக விமர்சித்து வந்தார் நவல்னி. ரஷ்யாவில் புதினுக்கு கடும் சவாலாக விளங்கி வந்த நவல்னிக்கு அங்கு ஆதரவு பெருகி வந்தது.
இந்த நிலையில் தான், கடந்த 2013-ல் நவல்னி மீது அறக்கட்டளை ஒன்றில் முறைகேடு செய்து பணம் கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இது தொடர்பான வழக்கில் அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதன்பிறகு தீவிரவாதத்தை ஊக்குவித்தல் நீதிமன்ற அவமதிப்பு என அடுத்தடுத்து நவல்னி மீது வழக்குகள் பாய்ந்தது. நவ்ல்னிக்கு மொத்தம் 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அதன்படி கடந்த 2021ஆம் ஆண்டு முதல் இவர் ஆர்க்டிக் சிறையில் இருந்து வந்தார். இதற்கிடையே சிறையில் இவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்ததாக ரஷ்யாவின் பெடரல் சிறைச்சாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. மரணத்திற்கான காரணம் குறித்து ரஷ்யாவின் பெடரல் சிறைச்சாலை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அலெக்ஸி நவல்னி சிறையில் வழக்கம் போல நடைபயிற்சி சென்று வந்தார்.
அப்போது திடீரென அவர் சுயநினைவை இழந்தார். இதையடுத்து சிறையில் உள்ள மருத்துவ ஊழியர்கள் உடனடியாக அவரை பரிசோதனை செய்தனர். தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துவிட்டார்" என்று தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த 2021-ல் டாம்ஸ்க் நகரில் இருந்து ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு விமானத்தில் சென்று கொண்டிருந்த நவல்னி திடீரென மயங்கி விழுந்தார்.

இதையடுத்து சிகிச்சைக்காக அவர் ஜெர்மனியில் அனுமதிக்கப்பட்டார். இதில் நவல்னிக்கு விஷம் வைக்கப்பட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இந்த சம்பவத்தில் ரஷ்ய அரசுக்கு தொடர்பு இருப்பதாக ஜெர்மனி குற்றம் சாட்டியது. எனினும் குற்றச்சாட்டை முற்றிலும் மறுப்பதாக ரஷ்யா கூறியது. இத்தகைய சூழலில் தான் நவல்னி மர்மமான முறையில் சிறையில் மரணம் அடைந்துள்ளார். இது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், நவல்னி மரணத்திற்கு புதினே பொறுப்பு என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். இது தொடர்பாக புடின் கூறுகையில், "ரஷ்யாவில் புடின் அரசாங்கம் செய்து வரும் ஊழல், வன்முறை அனைத்து கெடுதல்களுக்கு எதிராகவும் துணிச்சலாக நின்றவர் நவல்னி. நவல்னி மரணம் எனக்கு வியப்பை தரவில்லை. மாறாக கடும் கோபத்தை அளிக்கிறது. நவல்னி மரணத்திற்கு புதினே பொறுப்பு" என்றார். நவல்னி மரணம் தொடர்பாக கூடுதல் தகவல்களை கோரியிருப்பதாகவும் வெள்ளை மாளிகை கூறியுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications