டிரம்ப் அப்போது இருந்திருந்தால் உக்ரைன் போரே தொடங்கியிருக்காது.. சந்திப்புக்கு பின் ஓபனாக சொன்ன புதின்!
வாஷிங்டன்: அலஸ்காவில் அமெரிக்க அதிபர் டிரம்புக்கும், ரஷ்ய அதிபர் புதினுக்கும் (Trump Putin meet) இடையே சுமார் இரண்டரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடந்தது. உலகமே கவனித்து வந்த இந்த பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக நடைபெற்றதாக டிரம்ப் கூறினார். ரஷ்ய அதிபர் புதின் கூறுகையில், டிரம்ப் அப்போது இருந்திருந்தால் உக்ரைன் போரே தொடங்கியிருக்காது என்றும் இருவரும் வெளிப்படையாக பேசியதாகவும் கூறினார்.
அலஸ்காவில் அமெரிக்க அதிபர் டிரம்புக்கும், ரஷ்ய அதிபர் புதினுக்கும் இடையே சுமார் இரண்டரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. உலகமே இந்த சந்திப்பை உற்று நோக்கியது. ரஷ்யா - உக்ரைன் போர் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில், இந்த போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக இரு தலைவர்களுக்கும் இடையேயான சந்திப்பு நடைபெற்றது.

டிரம்ப் புதின் சந்திப்பு
பேச்சுவார்த்தைக்கு பிறகு இரு தலைவர்களும் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர். செய்தியாளர்கள் கேள்விகள் எதையும் எதிர்கொள்ளாமல் இருவரும் பேசினர். டிரம்ப் கூறுகையில், "சந்திப்பு ஆக்கப்பூர்வமாக நடைபெற்றது. முன்னேற்றங்கள் நடைபெற்றது. ஆனால், இறுதி ஒப்பந்தம் எதுவும் ஏற்படவில்லை. பல விஷயங்களை நாங்கள் ஒப்புக்கொண்டு இருக்கிறோம். நாங்கள் சில முன்னேற்றங்களை கண்டுள்ளோம்.
உக்ரைன் போரே தொடங்கியிருக்காது
எனவே ஒரு ஒப்பந்தம் ஏற்படும் வரை எந்த ஒப்பந்தமும் இல்லை' என்றார். புதின் கூறுகையில், அமெரிக்க அதிபராக டிரம்ப் 2022 ஆம் ஆண்டு இருந்திருந்தால், உக்ரைன் - ரஷ்யா மோதலே ஏற்பட்டு இருக்காது. பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இருவரும் வெளிப்படையாக பேசினோம். உக்ரைன் பாதுகாப்பு கண்டிப்பாக உறுதி செய்யப்பட வேண்டும் என்ற டிரம்ப் கருத்தில் நான் உடன்படுகிறேன்.
பரஸ்பர புரிதல் உக்ரைனில் அமைதியை எற்படுத்தும் என்று நான் நம்புகிறேன். கடந்த ஆட்சி நிர்வாகத்தின் போது, அப்போதைய அமெரிக்க அதிபரை சமாதானப்படுத்த முயற்சித்தேன். பகை ஏற்படும் போது அதை முடிவுக்கு கொண்டு வராத நிலைக்கு கொண்டு வரக்கூடாது" என்றார்.
போர் நிறுத்தம் அறிவிக்கப்படுமா?
புதின் - டிரம்ப் சந்திப்பினை சர்வதேச நாடுகள் உன்னிப்பாக கவனித்து வந்தன. இந்த பேச்சுவார்த்தையின் நிறைவில் உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் நிறுத்தம் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் எதுவும் நடைபெறுமா? ஜெலன்ஸ்கியுடன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை தொடர்பாக டிரம்ப் அறிவிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
ஆனால், அத்தகைய எந்த முடிவும் எட்டப்பட்டதாக தெரிவியவில்லை. வெறுமனே ஆக்கப்பூர்வமாக இருந்தது மட்டுமே என்று டிரம்ப் கூறினார். மேலும், நேட்டோ மற்றும் ஜெலன்ஸ்கியை விரைவில் சந்தித்து பேசுவதாக டிரம்ப் கூறியிருக்கிறார். இதனால், அந்த சந்திப்புக்கு பிறகு உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் நிறுத்தம் தொடர்பாக அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications