டிரம்பையே ஏமாற்றிய இஸ்ரேல்.. அமெரிக்காவின் நட்பு நாடான கத்தாரை தாக்கியது எப்படி? பரபரப்பு தகவல்
வாஷிங்டன்: ஹமாஸ் அமைப்பின் தலைவர்களை குறிவைத்து கத்தார் தலைநகர் தோஹா மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தி உள்ளது. இஸ்ரேல், கத்தார் ஆகியவை அமெரிக்காவின் நட்பு நாடுகளாக உள்ளதால் இது டொனால்ட் டிரம்புக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் கத்தார் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது எப்போது? டொனால்ட் டிரம்புக்கு இந்த தகவல் எப்போது சென்றது? தகவலை கேட்டதும் டொனால்ட் டிரம்ப் கத்தாரை அலர்ட் செய்தது எப்படி? என்பது பற்றி பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் போர் புரிந்து வருகிறது. காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினரை அழிக்கும் வகையில் இந்த போரை இஸ்ரேல் முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில் தான் நள்ளிரவில் திடீரென்று கத்தார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியது.

இஸ்ரேல் தனது விமானப்படை விமானங்கள் மூலமாக கத்தார் தலைநகர் தோஹாவில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது. ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹமாஸ் அமைப்பை சேர்ந்த கலில் அல் ஹயா (Khalil Al-Hayya) தான். இவர் ஹமாசின் சீனியர் அதிகாரியாக உள்ளார். இவர் காசாவில் இருந்து வெளியேற்றப்பட்டவர். இவர் தோஹாவில் வசிக்கும் நிலையில் அவரை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதலில் கலில் அல் ஹயா தப்பினார். இருப்பினம் அவரது மகன் ஹமாம் அல் ஹயா, அவரது அலுவலக இயக்குநராக செயல்பட்டு வந்த ஜிகாத் லுபத், 3 பாதுகாவலர்கள், ஒரு கத்தார் பாதுகாப்பு அதிகாரி உள்பட 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி கத்தார் மீதான இஸ்ரேலின் தாக்குதல் பற்றி பெரிய கேள்வி எழுந்துள்ளது. அமெரிக்காவை பொறுத்தவரை இஸ்ரேல் நெருங்கிய நட்பு நாடு. அதேபோல் கத்தாரும் அமெரிக்காவுக்கு நட்பு நாடாக உள்ளது. கத்தாரில் அமெரிக்காவின் விமானப்படை தளம் கூட உள்ளது. இப்படி இருக்கும்போது கத்தார் தலைநகர் தோஹாவை இஸ்ரேல் குறிவைத்தது டிரம்புக்கு தெரியாதா? இல்லாவிட்டால் டிரம்புக்கு தெரிந்தும் அவர் கத்தார் முதுகில் குத்தினாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கு தற்போது விடை கிடைத்துள்ளது. அதாவது கத்தாரின் தோஹா நகர் மீது தாக்குவதற்கு முன்பாக இஸ்ரேல் அதுபற்றி அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளது. இருப்பினும் டிரம்பால் இந்த தாக்குதலை தடுக்க முடியவில்லை. ஏனென்றால் இஸ்ரேல் தாமதமாக தான் இந்த தாக்குதல் பற்றி அமெரிக்காவுக்கு தெரிவித்துள்ளது. அதாவது கத்தாரில் அமெரிக்காவின் விமானப்படை தளம் உள்ளது. கத்தார் வான்வெளி பரப்புக்குள் இஸ்ரேல் போர் விமானங்கள் நுழைந்த போது அதனை அமெரிக்காவின் விமானப்படை அடையாளம் கண்டது.
உடனடியாக இஸ்ரேலிடம் அதுபற்றி கேள்வி எழுப்பியது. அப்போது தான் இஸ்ரேல் சார்பில் கத்தாரின் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் அமைப்பின் தலைவர்கள் உள்ளதாகவும், அவர்களை குறிவைத்து தாக்கப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் உடனடியாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதனை கேட்டு ஷாக்கான டொனால்ட் டிரம்ப், உடனடியாக கத்தாருக்கு தகவல் தெரிவிக்கும்படி உத்தரவிட்டார். இதையடுத்து அமெரிக்கா சார்பில் கத்தாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
ஆனால் இந்த தகவல் கத்தாரை சென்றடைவற்கு முன்பாக இஸ்ரேல் தனது ஏவுகணை, குண்டை வீசிவிட்டது. இதனால் டிரம்பால் இந்த தாக்குதலை தடுத்து நிறுத்த முடியவில்லை. இந்த தாக்குதல் பற்றி ஒரு வரியில் கூற வேண்டும் என்றால் டொனால்ட் டிரம்புக்கே தெரியாமல் இஸ்ரேல் இந்த அட்டாக்கை நடத்தி உள்ளது.
-
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
மோடி ஒரு போன் போட்டால் போதும்.. இஸ்ரேல் ஈரான் மோதல் முடிவுக்கு வந்துவிடும்! சொல்வது யார் பாருங்க -
அமெரிக்க'மாப்பிள்ளை சார்'.. டிரம்பின் மருமகன் ஜேரட் குஷ்னர்..ஈரான்- இஸ்ரேல் மோதல் பின்னணி -
கிம் ஜாங் உன்னை தூக்கும் டிரம்ப்? Decapitation வெறியில் அமெரிக்கா.. அடுத்த டார்க்கெட்டில் வடகொரியா? -
டிரம்ப் சொன்ன ஒரு வார்த்தை.. கச்சா எண்ணெய் விலை சரியுது.. பங்குச்சந்தை எகிறியது! உலக நாடுகள் நிம்மதி -
"ஈரான் போர் சீக்கிரமே முடிந்துவிடும்.." டிரம்ப் சொன்ன வார்த்தை.. ஆனால் அடுத்த வரியிலேயே ட்விஸ்ட் -
இன்னையோட முடிஞ்சுது! ஈரான் மீது பெரிய தாக்குதல் நடத்த முடிவு? மோசமான நாளாக இருக்கும்! அமெரிக்கா எச்சரிக்கை -
Donald Trump: சொந்த காசில் சூனியம் வைத்த டிரம்ப்.. ஈரான் மீதான போரால்.. ரஷ்யாவுக்கு கொட்ட போகுது பணமழை -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications