குடியுரிமைக்காக.. குழந்தைகளை ஆதரவின்றி அமெரிக்க எல்லையில் விடும் இந்திய பெற்றோர்கள்! சோகம்
வாஷிங்டன்: குடியுரிமை கிடைக்கும் என்று நம்பி, இந்தியர்கள் பலர் தங்கள் குழந்தைகளை அமெரிக்க எல்லையில் ஆதரவின்றி விட்டுச்செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆதரவின்றி குழந்தைகளை விட்டு செல்லும்போது, அமெரிக்க அதிகாரிகள் அவர்களை அழைத்து சென்று குடியுரிமை வழங்குவார்கள் என்கிற நம்பிக்கையில் குழந்தைகளை விட்டு செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க குடியுரிமை கிடைக்க வெளிநாட்டினர் கடுமையாக போராடி வருகின்றனர். குறிப்பாக இந்தியர்கள் இதற்காக மிகவும் மெனக்கெடுகின்னர். சட்டத்திற்க புறம்பாக அமெரிக்காவில் குடியேற அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் ஆபத்தில் போய் முடிகின்றன. கழுதை பாதை எனப்படும் பாதுகாப்பு இல்லாத பாதையில் பயணித்து அமெரிக்காவுக்குள் நுழைய அவர்கள் முயல்கின்றனர். இதில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. டிரம்ப் அதிபரான பிறகு இப்படியான குடியேற்றத்திற்கு அதிரடி தடை விதித்திருக்கிறார்.
மீறி குடியேறுபவர்களை அவர் நாடு கடத்தவும் செய்திருக்கிறார். இதனால் சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் மாற்று வழியை கண்டுபிடித்துள்ளனர். வயது வந்தோர் நுழையும்போது அவர்கள் நாடு கடத்தப்படலாம் என்கிற அச்சம் இருப்பதால், குழந்தைகளை மட்டும் அவர்கள் எல்லை பகுதியில் விட்டுவிட்டு வந்துவிடுகின்றனர். கடந்த ஆண்டு மட்டும் இந்தியர்கள் சுமார் 500 குழந்தைகளை இப்படி விட்டு வந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
பெரும்பாலும் 12-17 வயது வரை உள்ள சிறுவர்கள் இப்படி தனியாக விடப்படுகிறார்கள். ஆனால் சில நேரங்களில் 6 வயது குழந்தைகள் கூட இப்படி விடப்படுகிறது என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். அமெரிக்க குடியுரிமை கிடைக்கவில்லை என்றாலும் கூட, குறைந்தபட்சம் அகதிகள் அந்தஸ்தாவது கிடைக்கும். குழந்தைகள் மீண்டும் சொந்த நாட்டுக்கு நாடு கடத்தப்பட மாட்டார்கள். மட்டுமல்லாது பெற்றோர்களுக்கும் அகதி என்கிற அந்தஸ்து கிடைக்கும். இப்படியாவது பிழைத்துக்கொள்ளலாம் என்கிற எண்ணத்தில் இந்த சம்பவங்கள் நடக்கிறது.
இதுவும் சட்டத்திற்கு புறம்பான வழியிலான நுழைவுதான் என்று கூறியுள்ள டிரம்ப் நிர்வாகம், இதை தடுக்க தீவிரமாக முயன்று வருகிறது.
அமெரிக்காவில் கல்வி இலவசமாக இருக்கிறது. மருத்துவமும் நம்மூர் அரசு ஆஸ்பத்திரியை போல அல்லாமல் பல மடங்கு டெவலப் ஆகியிருக்கிறது. ஏழைகளுக்கு மருத்துவம் இலவசமாக வழங்கப்படுகிறது. இது இருந்தாலே போதுமே ஏதோ ஒரு வேலையை செய்து பிழைத்துக்கொள்ளலாமே! மட்டுமல்லாது வேலைகளுக்கான ஊதியமும் அதிகம். எனவேதான் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய பலரும் முயற்சிக்கின்றனர்.
கடந்த காலங்களில் இப்படி சட்டவிரோதமாக நுழைந்தவர்களில் இந்தியர்கள்தான் அதிகம். அதுவும் குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களிலிருந்துதான் அதிக மக்கள் அங்கு நுழைய முயல்கிறார்கள் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications