Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதிய சாப்பாட்டை மறந்ததால் அடித்த அதிர்ஷ்டம்.. லாட்டரியில் ரூ 25 கோடியை அள்ளிய நபர்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: திண்ணையில் கிடந்தவனுக்கு திடுக்குன்னு அடிச்சதாம் யோகம் என்பது போல மதிய உணவை மறந்து சென்ற அமெரிக்க நபருக்கு லாட்டரியில் ரூபாய் 25 கோடி பரிசு கிடைத்துள்ளது. திடீரென இவ்வளவு பெரிய தொகை பரிசாக அடித்ததும் ஒரு நிமிடம் அந்த நபருக்கு தலையே சுற்றிப்போச்சாம்.. அந்த நபருக்கு எப்படி ரூபாய் 25 கோடி அடித்தது என்பது பற்றி இங்கே பார்ப்போம்.

அலுவலகத்திற்கு செல்லும் போது மதிய உணவை மறந்துவிட்டோமே என பாதி வழியில் நினைவு வந்தால் பலரும் உடனடியாக யு டர்ன் அடித்து வீட்டிற்கு சென்று உணவை எடுத்து செல்வார்கள். இன்னும் சிலரோ இன்றைக்கு அலுவலக கேண்டீனிலோ, ஹோட்டல்களில் சாப்பிட்டு சமாளிக்க வேண்டியதுதான் என பர்சில் இருக்கும் பணத்தை பார்த்துவிட்டு அலுவலகத்திற்கே வண்டியை விட்டுவிடுவார்கள்.

lottery offbeat lottery prize

பெரும்பாலான நடுத்தர மக்கள் வருடத்திற்கு ஒருநாளாவது இப்படி ஒரு தினத்தை அனுபவித்து இருப்பார்கள்.. ஆனால், லஞ்ச் பாக்ஸை மறந்து சென்றதன் விளைவாக பல கோடிக்கு அதிபதியாகியிருக்கிறார் அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர். அது எப்படி? என நீங்கள் புருவத்தை உயர்த்தி பார்ப்பது புரிகிறது.. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்..

அமெரிக்காவின் மிசூரி மாகாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் வழக்கம் போல் அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது, அவரது மனைவி போன் செய்து.. "ஏங்க! லஞ்ச் பாக்சை வீட்டில் மறந்து வைத்து விட்டு சென்று வீட்டீர்களே...” எனக்கேட்டுள்ளார். அப்போதுதான் அவருக்கு லஞ்ச் பாக்சை மறந்து வைத்துவிட்டு வந்தது நினைவுக்கு வந்தது.

பாதி வழி வந்துவிட்டோம்.. இனியும் திரும்பி போனால் தாமதம் ஆகிவிடும் என்று நினைத்த அந்த நபர், அருகே இருந்த ஒரு பலசரக்கு கடையை கவனித்துள்ளார். சரி.. இங்கே ஏதாவது வாங்கி மதியத்தை சமாளித்துவிடலாம் என்று கடைக்கு போனவருக்கு கண்ணில் லாட்டரி தென்பட்டுள்ளது. லாட்டரி வாங்கவே எண்ணம் இல்லையென்றாலும், தானக கண்ணில் தென்படுதே என நினைத்து 30 டாலர் மதிப்புள்ள லாட்டரியை வாங்கியுள்ளார்.

சிறிது நேரத்தில் அந்த லாட்டரிக்கு 3 மில்லியன் டாலர் ( இந்திய மதிப்பில் ரூ.25.4 கோடி) பரிசு அடித்துள்ளது. இவ்வளவு பெரிய தொகை பரிசாக அடித்ததும் ஒரு நிமிடம் தலை சுற்றிப்போன அந்த நபர் உடனடியக தனது மனைவிக்கு போன் செய்து தகவலை கூறியிருக்கிறார். சாப்பாட்டை மறந்து வந்ததால் ரூ.25 கோடி பரிசு அடித்து இருக்கிறது என மகிழ்ச்சி பொங்க அதிர்ஷ்டக்காரர் சொல்லி மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து வருகிறார்.

இது குறித்து அந்த அதிர்ஷ்டக்கார நபர் கூறுகையில், “நான் 30 டாலர் மதிப்பு கொண்ட லாட்டரிகளை வாங்கி விளையாடுவது இல்லை. ஆனால் அன்றைய தினம் என்னிடம் 60 டாலர் கையில் இருந்தது. அதனால், ஒரு டிக்கெட்டை வாங்கி பார்ப்போமே என வாங்கினேன். ஸ்க்ராட்ச் செய்து விளையாடும் டிக்கெட் அது.. நான் வாங்கிய லாட்டரியில் ஸ்கார்ட்ச் செய்து பார்த்ததில் அதற்கு 3 மில்லியன் டாலர் பரிசுத்தொகை அடித்துள்ளதை தெரிந்து கொண்டேன்.

முதலில் எனக்கு நம்பிக்கையில்லை. எத்தனை ஜீரோக்கள் என எண்ணி பார்த்தேன். அதன்பிறகுதான் எனக்கு நம்பிக்கை வந்தது. உடனடியாக மனைவியிடம் சொன்ன போது.. நான் ஜோக் அடிக்கிறேன் என நினைத்துக்கொண்டு அவர் நம்ப மறுத்தார். உண்மைதான் என மீண்டும் சொன்ன பிறகே பரிசு அடித்ததை நம்பினார்” என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+