உக்ரைன் மீது அடுத்த சில நாட்களில் ரஷ்யா தாக்குதல் நடத்தலாம்... எச்சரிக்கும் ஜோ பைடன்

அடுத்த சில நாட்களில் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த சாத்தியம் உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: உக்ரைனில் ரஷ்ய படையெடுப்பின் அச்சுறுத்தல் மிக அதிகமாக உள்ளதாகவும், மாஸ்கோ எல்லையில் இருந்து அதிகமான படைகள் பின்வாங்குவதாகக் கூறிய போதிலும் அடுத்த சில நாட்களில் தாக்குதல் சாத்தியமாகும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.

Recommended Video

    Ukraine-ஐ Russia ஆக்கிரமித்தால் India-வுக்கு என்ன பாதிப்பு வரும் ?

    ரஷ்யா- உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எந்த நேரத்திலும், உக்ரைன் மீது ரஷ்யா அத்துமீறல் தாக்குதல் நடத்தப்படலாம் என்று கணிக்கப்படுகிறது.

    Russia attack on Ukraine possible in next several days: Biden

    முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைனும் அதன் அண்டை நாடான ரஷியாவும் நீண்ட காலமாகவே மோதி வருகின்றன. நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்க்கக்கூடாது என்கிற ரஷ்யாவின் கோரிக்கையை அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் நிராகரித்ததை தொடர்ந்து இந்த மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
    உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா 1 லட்சத்துக்கும் மேற்பட்ட படை வீரர்களை குவித்துள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

    அமெரிக்கா- ரஷ்யா என இருநாடுகளின் படைகளும் உக்ரைனுக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், உக்ரைனில் ரஷ்ய படையெடுப்பின் அச்சுறுத்தல் மிக அதிகமாக உள்ளதாகவும், மாஸ்கோ எல்லையில் இருந்து அதிகமான படைகளை பின்வாங்குவதாகக் கூறிய போதிலும் அடுத்த சில நாட்களில் தாக்குதல் சாத்தியமாகும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

    ரஷியா எந்த நேரத்திலும் வான்வழி குண்டுவீச்சுடன் படையெடுப்பை தொடங்கலாம் என அமெரிக்கா ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்த நிலையில், தற்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைன் மீது ரஷ்யா அடுத்த சில நாட்களில் தாக்குதல் நடத்தலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் மேற்கத்திய சார்பு அண்டை நாடு மீது ரஷ்ய படையெடுப்பு பற்றிய அச்சம் அதிகரித்து வருவதால், ஜனாதிபதி விளாடிமிர் புடினை அழைக்கும் திட்டம் தனக்கு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்த சிறிது நேரத்திலேயே, உக்ரைன் மீது தாக்குதல் நடத்த எந்தவித திட்டமும் இல்லை என்று ரஷ்ய வெளியுறவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. தொடர்ந்து உக்ரைன், ரஷ்ய நாட்டு எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+