என்னாது! சமோசா, நெய்க்கு எல்லாம் தடையா? காரணம் தான் அல்டிமேட்..வெளிநாடுகளில் இருக்கும் வினோத ரூல்ஸ்
வாஷிங்டன்: நம்ம ஊரில் விரும்பி சாப்பிடும் உணவு பொருளில் சமோசாவும் உண்டு. இந்த சமோசாவுக்கு வெளிநாடு ஒன்றில் பல ஆண்டுகளாக தடை உள்ளது. இப்படி வெளிநாடுகளில் சில உணவுப்பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கான காரணம் மற்றும் அது எந்த நாடுகள் என்ற விவரங்களை பார்க்கலாம்.
உலகில் உள்ள நாடுகளுக்கு ஒரே மாதிரியான சட்டங்கள் கிடையாது. ஒவ்வொரு நாடுகளும் அதன் நிலப்பரப்பு, பழக்க வழக்கங்கள், நாகரீக கட்டமைப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு வெவ்வேறு விதமான சட்டங்களை கடைபிடித்து வருகின்றன.

அதே போலத்தான் உணவுப்பொருட்களிலும் ஒவ்வொரு நாடும் உணவுப் பொருள் அது உடல் நலனில் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை ஆராய்ந்து சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுகின்றன. அந்த வகையில் நம்ம ஊரில் விருப்பமான உணவாக இருக்கும் சில உணவுகளுக்கு சில நாடுகளில் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளன. அப்படி எந்த விதமான உணவுகளுக்கு எந்த நாடு தடை விதித்துள்ளது என்ற விவரங்களை இங்கே பார்ப்போம்.
சமோசா: இந்தியாவில் மிகவும் பிரபலமான உணவுப்பட்டியலில் இருக்கும் உணவுகளில் கண்டிப்பாக சமோசாவிற்கு இடம் இருக்கும். காலை, மாலை வேளைகளில் சமோசாக்கள் இல்லாத டீக்கடைகளே அரிதாகத்தான் இருக்கும். அதுபோல பயண நேரங்களிலும் சமோசாக்கள் விற்பனை செய்யப்படுவதுண்டு.
சமோசாக்கள் பெரும்பாலானோருக்கு பிடித்தமான ஸ்னாக்ஸ் ஆக இருப்பதால் இந்திய உணவுச்சந்தையில் சமோசா பெரும் வர்த்தகத்தைக் கூட கொண்டுள்ளது. ஆனால், இந்த சமோசாவிற்கு சோமாலியா, தென் ஆப்பிரிக்க பிராந்தியங்களில் உள்ள நாடுகளில் தடை உள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் இந்த தடை உள்ளது. இந்த தடையை மீறி சமோசா சாப்பிட்டால் தண்டனை கூட விதிக்கப்படுமாம். சமோசா முக்கோண வடிவில் இருப்பதால் இது கிறிஸ்தவ மதத்தை அடையாளப்படுத்துவது போல் இருப்பதாக அல் சஹபாப் குழுக்கள் கூறுவதாக சோமாலியாவில் இதற்கு தடை உள்ளதாம்.
சியவன்பிரஷ் (Chyawanprash): இந்தியாவில் பரவலாக மக்களால் பயன்படுத்தப்படும் சியவன்பிரஷ் எனப்படும் மூலிகை கலவை மருந்துகளுக்கு கனடாவில் தடை உள்ளது. அதிக ஊட்டச்சத்து கொண்ட உணவாக இது கூறப்பட்டாலும், பாதரசம் மற்றும் லீட் போன்ற உலோக தனிமங்கள் அதிகம் இருப்பதாக கூறி கனடா தடை விதித்து இருக்கிறது.
நெய்: பாலில் உள்ள அனைத்து பொருட்களுமே ஊட்டச்சத்து நிறைந்தவை. சிறு குழந்தைகள் முதல் பெரியவர் வரை பலரும் பால் உணவுப்பொருளை விரும்பி சாப்பிடுவார்கள். தயிர், வெண்ணெய், நெய் என பாலில் இருந்து கிடைக்கும் அனைத்து பொருட்களுமே சத்துக்கள் நிறைந்தவைதான். உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் பாலில் நிறைந்துள்ளன என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

அதேபோல், பாலில் இருந்து கிடைக்கும் நெய் பலருக்கும் விருப்பமான உணவு பொருளாகும். ஆனால் இந்த நெய்க்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம் தடை விதித்து இருக்கிறது. நெய் மூலமாக ரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு, உடல் பருமன் போன்றவை ஏற்படும் என தடை விதிக்கப்பட்டுள்ளதாம்.
சுவிங்கம்: சிங்கப்பூரில் சுத்தம் என்பது மிகக் கடுமையாக பேணப்படும். சுத்தத்தை முறையாக பராமரிக்காவிட்டால் கடுமையான தண்டனைகளும் உண்டு. அதன் காரணமாகவே அந்த நாட்டில் 1992 ஆம் ஆண்டு முதல் சுவிங்கம் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு இருந்தது. எனினும் சர்வதேச அழுத்தம் காரணமாக பல் சிகிச்சை தொடர்பான சுவிங்கம்களை பயன்படுத்த 2004 ஆம் ஆண்டு முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கெட்ச் அப்: சமோசா, பக்கோடா, நூடுல்ஸ் போன்றவை சாப்பிடும் போது ருசிக்காக கெட்ச் அப்களை நாம் பயன்படுத்துவோம். அதிலும் தக்காளி கெட்ச் அப்கள் மிகவும் பரிட்சயம். ஆனால், இந்த கெட்ச் அப்களை பயன்படுத்த பிரான்சில் தடை விதிக்கப்பட்டுள்ளது. டீன் ஏஜ் வயதினர் அதிகம் சாப்பிடுவதால் இந்த தடையை பிரான்சு அரசு விதித்துள்ளது.
கபாப்: இந்தியாவின் மிகவும் பிரபலமான ஒரு உணவு வகை எதுவென்றால் அது கபாப் தான். வெஜ் அல்லது நான் வெஜ் எதுவென்றாலும் கபாப் பலருக்கும் விருப்பமான உணவாக இருக்கிறது. பல ஃபுட்டீஸ்கள் ஒரு பிடி பிடித்து விடுவார்கள். ஆனால் இத்தாலியின் வெனிஸ் நகரத்தில் கபாப் தடை செய்யப்பட்ட உணவாகும். 2017 முதல் இந்த தடை இருக்கிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications