மூச்சு பட்டாலே சர்வ நாசம் நிச்சயம்.. திடீர் திடீரென கிளம்பும் "ஜாம்பி" வைரஸ்கள்.. அலறும் ஆய்வாளர்கள்
வாஷிங்டன்: ஆர்டிக் பகுதிகளில் இருந்து திடீர் திடீரென ஜாம்பி வைரஸ்கள் கிளம்புகின்றன. அதென்ன ஜாம்பி வைரஸ்கள்.. இவை ஏன் மனிதர்களுக்கு ஆபத்து என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
ஆர்க்டிக் உள்ளிட்ட பனிக்கட்டிகளால் நிறைந்துள்ள பகுதிகள் புதைந்துள்ள வைரஸ்களால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து இப்போது ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

ஜாம்பி வைரஸ்: காலநிலை மாற்றத்தால் இப்போது ஆர்க்டிக் பெர்மாஃப்ரோஸ்ட் பகுதி உருகி வரும் நிலையில், அவை பல காலமாக உறைந்து கிடக்கும் 'ஜாம்பி வைரஸ்களை' வெளியிடலாம் வெளியிடலாம். இது சர்வதேச அளவில் மிகப் பெரிய அழிவை ஏற்படுத்தக் கூடும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.
காலநிலை மாற்றத்தால் உறைந்து கிடக்கும் பனிக்கட்டிகள் உருகத் தொடங்குவதே இதற்குக் காரணமாகும். கடந்த ஆண்டு சைபீரியன் பெர்மாஃப்ரோஸ்டில் இருந்து சில மாதிரிகளை ஆய்வாளர்கள் மீட்டெடுத்தனர். அதில் உள்ள வைரஸ்களுக்கு புத்துயிர் கொடுத்துப் பார்க்கும் போது அவை பல ஆயிரம் ஆண்டுகள் உறைந்தே இருந்தது தெரிய வந்தது.
இது குறித்து ஆய்வாளர் ஜீன்-மைக்கேல் கிளவேரி கூறுகையில், "இப்போது நாம் தென் துருவத்தில் இருந்து பரவக் கூடிய வைரஸ்கள் குறித்து மட்டுமே ஆய்வு செய்கிறோம். வட ஆபத்து: துருவத்திலும் கூட இதேபோன்ற வைரஸ்கள் உறைந்து இருக்கின்றன. அவையும் கூட ரிலீஸ் ஆனால், அது மிகப் பெரிய அழிவைத் தரும். இதை நாம் பெரிதாகக் கவனிப்பதில்லை. ஆனால், இவை மிகப் பெரிய பிரச்சினைகளில் ஒன்று" என்று அவர் தெரிவித்தார்.
உறைந்து கிடக்கும் பனிக்கட்டிகளில் என்ன மாதிரியான வைரஸ்கள் இருக்கும் என்பது யாருக்குமே தெரியாது. இருப்பினும், எதிர்பாராத விதமாகப் பேரழிவை ஏற்படுத்தும் வைரஸ் அதில் இருந்து வெளிப்படலாம். உதாரணமாகப் பண்டைக் கால போலியோ வைரஸ் உறை பனிக்கட்டியில் இருந்து வரலாம். அவை உலகில் பேரழிவை ஏற்படுத்தக் கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஏன் சிக்கல்: பல ஆயிரம் வருடம் புதைந்து இருப்பதால் வைரஸ்கள் செத்து இருக்கமே என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். ஆனால், அவை இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் உயிருடன் இருக்க வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அந்த வைரஸ்கள் இப்போது யாரை வேண்டுமானாலும் பாதிக்கலாம். இதை 2014இல் சைபீரியாவில் ஆய்வு செய்த குழு நிரூபித்தே காட்டியது.
உறைந்து கிடந்த மாதிரிகளில் மட்டும் அங்கே பல வைரஸ் மாதிரிகள் உள்ளன. ஏதோ ஒரு இடத்தில் மட்டுமில்லை. பல்வேறு இடங்களிலும் இதுபோன்ற வைரஸ்களை எடுத்துள்ளன. அதில் குறிப்பாக ஒரு வைரஸ் மட்டும் 48,500 ஆண்டுகளுக்குப் பழமையானவையாம்.
ஆய்வாளர்கள் சொல்வது: இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், "நாங்கள் இதுவரை கண்டெடுத்த வைரஸ்களால் அமீபாவை மட்டுமே பாதிக்க முடிகிறது. அவற்றினால் மனிதர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. அதேநேரம் மற்ற உறைந்து கிடக்கும் வைரஸ்களும் இதுபோல இருக்கும் என்று சொல்ல முடியாது. அவை மனிதர்களைத் தாக்கலாம். அதற்கான சான்றுகளை எங்களால் பார்க்க முடிகிறது" என்றார்.
வட துருவத்தில் ஐந்தில் ஒரு பகுதி இடம் நிரந்தரமாகப் பனிக்கட்டிகளால் மூடப்பட்டுள்ளன. ஆர்க்டிக் மற்றும் அலாஸ்கா, கனடா மற்றும் ரஷ்யாவின் பல பகுதிகள் பனிக்கட்டிகளால் மூடப்பட்டுள்ளன. இவை தான் பண்டைய கால வைரஸ்களுக்கு ஒரு வகையான நேர காப்ஸ்யூலாக செயல்படுகிறது.. இந்த பனிக்கட்டிகள் அழிந்துபோன பல உயிரினங்களின் மம்மி போலச் செயல்படுகின்றன. இவை வைரஸை பாதுகாக்கிறது.
என்ன காரணம்: புவி வெப்பமடைதல் அதிகரிப்பதால் இந்த பனிக்கட்டிகள் உருகுவதே இந்த வைரஸ்கள் இப்போது வெளிவர காரணமாக இருக்கிறது. ஆய்வாளர்கள் மேலும் கூறுகையில், "புவி வெப்ப மயமாதலால் ஆர்டிக் பகுதி உருகுகிறது. இது சைபீரியாவில் கப்பல் போக்குவரத்து, தொழில்துறை வளர்ச்சியை அதிகரிக்கிறது. அங்கே மிகப்பெரிய சுரங்க நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன. ஆனால், இதனால் மற்றொரு பேராபத்தும் ஏற்படும். அதுதான் இந்த ஜாம்பி வைரஸ்கள்" என்று எச்சரிக்கிறார்கள்.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications