அமெரிக்காவில் ஷாக்! குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கிய சிறிய விமானம்.. மீட்பு பணிகள் தீவிரம்
வாஷிங்டன்: அமெரிக்காவில் மீண்டும் விமான விபத்து நடந்துள்ளது. அமெரிக்காவில் சிறிய ரக விமானம் குடியிருப்பு வணிக வளாகம் அமைந்துள்ள பகுதி அருகே விழுந்து நொறுங்கியுள்ளது. விமானம் விழுந்ததும் பயங்கர தீப்பிழம்புகள் ஏற்பட்டதால் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மீட்புக்குழுவினர் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பில்டெல்பியாவில் சிறிய ரக பயணிகள் விமானம் வெடித்து சிதறி விபத்துக்குள்ளாகியுள்ளது. விமானம் வெடித்து குடியிருப்பு பகுதிக்குள் விழுந்தது. பெரும் தீப்பிழம்புகளுடன் விழுந்த விமானம் அங்கு சென்று கோண்டிருந்த வாகனங்கள் மீதும் விழுந்தது. இந்த கோர விபத்தில் இதுவரை 2 பேர் உயிரிழந்து இருப்பது தெரியவந்துள்ளது.

பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு
விபத்துக்குள்ளான விமானத்தில் 6 பேர் பயணம் செய்துள்ளனர். விமானம் குடியிருப்பு பகுதிக்குள் விழுந்ததால் பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விமானம் விபத்துக்குள்ளான தகவல் கிடைத்ததும் அவசர சேவைக்குழு நிகழ்விடத்திற்கு வந்து மீட்பு பணியில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது. 12 க்கும் மேற்பட தீ அணைப்பு வாகனங்கள் விபத்துக்குள்ளான இடத்தில் முகாமிட்டுள்ளன.
சாலைகள் மூடப்பட்டன
விமானம் விழுந்து நொறுங்கிய இடத்திற்கு அருகில் தான், பிலேடெல்பியாவில் விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான விபத்து குறித்து பென்சில்வேனியா மாகான எமெர்ஜென்சி சேவை குழு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பில்டெல்பியாவின் வடகிழக்கு அருகே உள்ள கோட்மன் மற்றும் பஸ்டெல்டன் அவென்யூ மற்றும் ரூஸ்வெல்ட் மால் அருகே விமான விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் சாலைகள் மூடப்பட்டுள்ளன. வாகன ஓட்டிகள் அப்பகுதியை தவிர்க்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
விமானம் ஹெலிகாப்டர் மோதல்
விபத்து தொடர்பாக மேலும் விவரங்களை அவசர சேவைக்குழு தற்போது வரை தெரிவிக்கவில்லை. அமெரிக்காவில் கடந்த இரு தினங்களுக்கு முன்புதான், ஜெட் விமானம் ஒன்றும் ஹெலிகாப்டரும் நடுவானில் மோதி விபத்துக்குள்ளானது. 60 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் போடோமேக் ஆற்றின் மீது சுமார் 400 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது.
அப்போது, ராணுவ ஹெலிகாப்டர் ஒன்றும், அதே வான்வழித்தடத்தில் வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் விமானமும், ஹெலிகாப்டரும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில், விமானமும் ஹெலிகாப்டரும் ஆற்றில் விழுந்தன. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 64 பேரும், ஹெலிகாப்டரில் இருந்த 3 ராணுவ வீரர்களும் பலியானதாக தகவல் வெளியானது.
கருப்பு பெட்டி மீட்பு
விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விபத்துக்குள்ளான விமானத்தின் கடைசி நிமிடத்தில் என்ன நடந்தது என்று தெரிய வரும் என அதிகாரிகள் கூறினர். இந்த விபத்து அமெரிக்கா மட்டும் இன்றி உலகம் முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விமான விபத்து நடைபெற்ற இரண்டே நாட்களில் மீண்டும் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது விமான பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications