விண்வெளியில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ்.. மீட்பதற்காக புறப்பட்டது ஸ்பேஸ் எக்ஸ்.. எப்போது திரும்பும்?
வாஷிங்டன்: விண்வெளி மையத்தில் உள்ள சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை அழைத்து வருவதற்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் விண்ணுக்கு புறப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கன்வெர்லில் இருந்து 2 விண்வெளி வீரர்களுடன் இந்த டிராகன் விண்கலம் புறப்பட்டு சென்றுள்ளது.
விண்வெளி ஆய்வில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் முன்னணியில் இருந்து வருகின்றன. பூமியை போல வேறு ஏதேனும் கிரகங்களில் மனிதர்கள் வாழ சாத்தியம் உள்ளதா? என்பது உள்பட பல்வேறு ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. விண்வெளி வீரர்கள் ஆய்வு பணிகளுக்காக அடிக்கடி விண்வெளிக்கு சென்று தங்கியிருந்து ஆய்வு செய்து வருகிறார்கள்.

இந்த சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் பூமியில் இருந்து 400 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ளது. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சார்பில், இந்திய வம்சாவளியை சேந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஜூன் 5ஆம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்றனர். போயிங் ஸ்டார்லைனர் ராக்கெட் மூலம் இவர்கள் விண்வெளிக்கு சென்றனர்.
அங்கிருந்து ஆய்வு நடத்திவிட்டு, ஜூன் 14ஆம் தேதி பூமிக்கு திரும்ப திட்டமிட்டு இருந்தனர். வெறும் 8 நாட்கள் மட்டுமே விண்வெளியில் தங்கியிருந்து ஆய்வு செய்யும் திட்டத்துடன் இவர்களை நாசா அனுப்பி வைத்தது. ஆனால், சுனிதா வில்லியம்ஸ் உள்பட இருவரும் பயணித்த ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. ஸ்டார் லைனரில் ஏற்பட்ட ஹீலியம் வாயு கசிவு மற்றும் உந்து விசை கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு ஆகியவற்றால் அவர்கள் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.
விண்வெளி மையத்தில் 100- நாட்களுக்கும் மேலாக உள்ள அவர்களை பூமிக்கு அழைத்து வர நாசா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், இது எதற்கும் பலன் கிட்டவில்லை. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தான் இருவரும் பூமிக்கு திரும்புவார்கள் என நாசா அறிவித்தது. விண்வெளியில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இருவரையும் மீட்க எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியை நாசா நாடியது.
இதையடுத்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இதற்கான ஏற்பாடுகளை செய்தது. இதன்படி புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கன்வெர்லில் இருந்து டிராகன் விண்கலம் விண்ணுக்கு புறப்பட்டது. பால்கான் 9 ராக்கெட் மூலம் இந்த விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இரண்டு விண்வெளி வீரர்கள் இந்த விண்கலத்தில் உள்ளனர். மேலும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் திரும்புவதற்கு வசதியாக இரண்டு இருக்கைகள் காலியாக உள்ளது. இந்த விண்கலம் தற்போது விண்ணுக்கு புறப்பட்டுள்ளது.
இந்த விண்கலம் பிப்ரவரி மாதம் பூமிக்கு திரும்புகிறது. அப்போது சுனிதா வில்லியம்சும், புட்ச் வில்மோரும் அழைத்து வரப்பட இருக்கிறார்கள். இந்திய நேரப்படி நேற்று இரவு 10.47 மணிக்கு விண்கலம் விண்ணில் பாய்ந்தது.. இந்த விண்கலத்தில் நாசாவை சேர்ந்த வீரர் நிக் ஹாக்வே மற்றும் ரஷ்ய வீரர் அலெக்ஸாண்டர் கோர்பனோவ் ஆகியோர் உள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications