Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சர்வதேச விண்வெளி மையத்திற்குள் நுழைந்தார் சுபன்ஷு சுக்லா.. புதிய வரலாறு படைத்த இந்தியா

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: நேற்று தனது விண்வெளி பயணத்தைத் தொடங்கிய சுபன்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்துள்ளார். இதற்கிடையே மாலை 5 மணியளவில் அவர் விண்வெளி மையத்திற்குள் நுழைந்துள்ளார். இதன் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லும் முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அடுத்த இரண்டு வாரங்கள் விண்வெளியில் அவர் பல்வேறு ஆய்வுகளையும் மேற்கொள்ள இருக்கிறார்.

இஸ்ரோ விண்வெளி துறையில் கடந்த சில ஆண்டுகளில் பல சாதனைகளைப் படைத்துள்ளது. இதற்கிடையே இந்திய விண்வெளி துறைக்கு மற்றொரு மைல்கல்லாக நேற்று இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா விண்வெளிக்குப் புறப்பட்டார். சுபன்ஷு சுக்லாவின் டீம் கடந்த 24 மணி நேரமாக விண்வெளி மையத்தை நோக்கிய பயணத்தைத் தொடர்ந்தது.

SpaceX Dragon with Shubhanshu Shukla Nears ISS Docking Marks India s Space Milestone

சுபன்ஷு சுக்லா

இதற்கிடையே சுபன்ஷு சுக்லா மாலை 4 மணியளவில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தார். இணைவு நிகழ்வு முழுமையாக முடிந்த பிறகு மாலை 5.15 மணியளவில் இந்திய வீரர் சுபன்ஷு சுக்லா விண்வெளி மையத்திற்குள் நுழைந்தார். இதன் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்குச் செல்லும் முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

நேற்று புதன்கிழமை, குரூப் கேப்டன் சுக்லா, Ax-4 மிஷனில் விண்வெளிக்குப் புறப்பட்டார். பெக்கி விட்சன் தலைமையிலான இந்த மிஷனில் போலந்திலிருந்து ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி-விஸ்னீவ்ஸ்கி மற்றும் ஹங்கேரியிலிருந்து திபோர் கபு ஆகியோர் உள்ளனர். அவர்கள் அடுத்த இரண்டு வாரங்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திலேயே தங்கி பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளனர்.

இரண்டாவது நபர்!

குரூப் கேப்டன் சுக்லா விண்வெளிக்குச் செல்லும் இரண்டாவது இந்தியர் ஆவார். இவருக்கு முன்பு, 1984ஆம் ஆண்டு ரஷ்ய சோயுஸில் விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா விண்வெளிக்குச் சென்றார். அவர் சென்ற 41 வருடங்களுக்குப் பிறகு சுக்லாவின் இந்த பயணம் அமைந்துள்ளது. அதேநேரம் ராகேஷ் சர்மா விண்வெளிக்குச் சென்றபோது அங்கு விண்வெளி நிலையம் எதுவும் இல்லை. 2011ல் தான் சர்வதேச விண்வெளி நிலையம் முழுமையாக ஏற்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச விண்வெளி மையம்

நேற்று புதன்கிழமை இந்திய நேரப்படி பிற்பகல் 12:01 நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து சுக்லா உள்ளிட்டோர் இருந்த ராக்கெட் புறப்பட்டது. சுக்லா டீம் இருக்கும் விண்கலம் சற்று நேரத்திற்கு முன்பு சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது. அமெரிக்காவின் நாசா, இந்தியாவின் இஸ்ரோ, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் மற்றும் எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் ஆகியவை இணைந்து இந்த மிஷனை நடத்துகிறது.

மொத்தம் 60 சோதனைகள்

இந்த இரண்டு வாரத்தில் இவர்கள் பல்வேறு சோதனைகளை நடத்தவுள்ளனர். சுமார் 60 சோதனைகளைச் செய்கிறார்கள். குறிப்பாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஏழு சோதனைகளையும் மேற்கொள்ளவுள்ளனர்.

சுக்லாவின் இந்த விண்வெளி பயணம், அதற்குத் தேவையான பயிற்சி உள்ளிட்டவற்றுக்கு இஸ்ரோ மொத்தம் ரூ.500 கோடி வரை செலவிட்டுள்ளதாக பிபிசி செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அதேநேரம் சுக்லாவின் இந்த பயணம் இஸ்ரோவின் விண்வெளி திட்டத்திற்குப் பெரியளவில் உதவும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ஏன் முக்கியம்

இஸ்ரோ விண்வெளி துறையில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வருவது அனைவருக்கும் தெரியும். வரும் 2027ஆம் ஆண்டில் இஸ்ரோ முதலில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது.2035ஆம் ஆண்டுக்குள் தனியாக விண்வெளி நிலையத்தை அமைக்கவும் 2040ஆம் ஆண்டுக்குள் நிலவுக்கு ஒரு விண்வெளி வீரரை அனுப்பவும் இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+