சீன தொழிலதிபருடன் கைகோர்த்த எலான் மஸ்க்.. ஸ்பேஸ்எக்ஸின் புதிய சாதனை.. இதுவரை இப்படி நடந்ததே இல்லை
வாஷிங்டன்: விண்வெளி துறையில் தொடர்ந்து புதிய சாதனைகளைப் படைத்து வரும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் இப்போது புதிய மைல்கல்லைத் தொட்டுள்ளது. ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் பூமியின் துருவப் பகுதிகளுக்கு மேலே உள்ள விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பியுள்ளது. இது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் முக்கிய சாதனையாகவே பார்க்கப்படுகிறது.
இப்போது விண்வெளி துறையில் தனியார் நிறுவனங்களின் ஆதிக்கம் மெல்ல அதிகரித்து வருகிறது. குறிப்பாக அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் விண்வெளி துறையில் தொடர்ச்சியாகச் சாதனை படைத்து வருகிறது. விண்வெளி துறையில் ஸ்பேஸ்எக்ஸ் சாதனைகள் தனியார் நிறுவனங்களுக்கு ஊக்கமளிப்பதாகவே இருந்து வருகிறது.

ஸ்பேஸ்எக்ஸ்
இதற்கிடையே ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் மற்றொரு மைல்கல்லாகப் பூமியின் துருவப் பகுதிகளுக்கு மேலே உள்ள விண்வெளி பகுதிக்கு மனிதர்களை அனுப்பியுள்ளது. உள்ளூர் நேரப்படி திங்கள் இரவு 9.46 மணிக்கு புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் குழுவினர் விண்ணுக்கு ஏவப்பட்டனர். அவர்கள் டிராகன் காப்ஸ்யூலில் இந்த பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்கள்.
இந்த திட்டத்திற்கு "ஃப்ராம்2" பெயரிடப்பட்டுள்ளது. கடந்த 19ம் நூற்றாண்டில் ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிக் பயணங்களுக்காகக் கட்டப்பட்ட புகழ்பெற்ற நார்வே கப்பலின் நினைவாக இந்த பெயரை வைத்துள்ளனர். விண்வெளியில் முதல் எக்ஸ்ரே எடுப்பது, காளான்களை வளர்ப்பது உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளை இதில் மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளனர். செவ்வாய்க் கிரகத்திற்கு மனிதர்களைக் குடியேற வைக்க வேண்டும் என்பதே ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் திட்டமாக இருக்கும் சூழலில், அதற்கான முதல் படியாக இது இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.
விண்வெளிக்குச் சென்றது யார்
சீனாவில் பிறந்த வாங் என்பவர் இந்த திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார். தேவையான நிதியுதவிகளையும் அவரே வழங்கியுள்ள நிலையில், தன்னுடன் வரும் மற்ற குழுவினரையும் அவரே தேர்ந்தெடுத்தார். அதன்படி இந்த குழுவில் நார்வே திரைப்பட இயக்குநர் ஜானிக்கே மிக்கேல்சன், ஜெர்மனியைச் சேர்ந்த ரோபாட்டிக்ஸ் ஆராய்ச்சியாளர் ரபியா ரோஜ்; ஆஸ்திரேலியா ஆய்வாளர் எரிக் பிலிப்ஸ் உடன் செல்கிறார்கள்.
இந்த விண்வெளி பயணத்திற்காக இந்த குழு கடந்த பல மாதங்களாகவே தீவிரமாகப் பயிற்சி செய்துள்ளனர். கிட்டதட்ட விண்வெளிக்கு இணையான சூழல் நிலவும் அலாஸ்காவில் சுமார் எட்டு மாதங்கள் இந்த குழு தீவிர பயிற்சி பெற்றுள்ளது. அதன் பின்னரே இன்று விண்வெளிக்கு இவர்கள் சென்றுள்ளனர். மொத்தம் 4 நாட்கள் இந்த பயணம் இருக்கும் எனத் தெரிகிறது.
ஆய்வுகள்
விண்வெளியில் மட்டுமின்றி பூமிக்குத் திரும்பிய பிறகும் சில ஆய்வுகளைச் செய்யத் திட்டமிட்டுள்ளனர். அதாவது பூமிக்குத் திரும்பிய பிறகு கூடுதல் மருத்துவ உதவி இல்லாமல் விண்கலத்திலிருந்து வெளியேற முயல்வார்கள். விண்வெளிப் பயணத்திற்குப் பிறகு விண்வெளி வீரர்களால் பூமியில் குறிப்பிட்ட பணிகளை எவ்வளவு சிறப்பாகச் செய்ய முடியும் என்பதைக் கண்டறிய இந்த ஆய்வுகளை நடத்துகிறார்கள்.
இதுவரை இப்படி நடந்ததே இல்லை
பொதுவாகப் பூமியின் துருவங்கள் என்பது விண்வெளி பயணங்களில் தவிர்க்கப்படும் ஒன்றாகவே இருக்கிறது. அமெரிக்காவின் அப்பல்லோ நிலவு ராக்கெட்டை தவிர்த்து எந்தவொரு விண்கலனும் துருவ பகுதிக்கு மேல் பறந்ததே இல்லை. அப்பல்லோ கூட பூமியின் துருவங்களுக்கு மேலே நேரடியாகப் பறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஸ்பேஎஸ்எக்ஸ் நிறுவனத்தின் இந்த விண்வெளி பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications