Hormuz: ஹார்முஸ் ஜலசந்தி திறக்குமா? திறக்காதா? 48 மணி நேரம் கெடு விதித்த டிரம்ப்.. ஈரான் அளித்த ரிப்ளை
தெஹ்ரான்: ஹார்முஸ் (Hormuz) ஜலசந்தியை 48 மணி நேரத்திற்குள் திறக்க வேண்டும். இல்லையென்றால் நடப்பதே வேற என்ற ரீதியில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானை பகிரங்கமாக மிரட்டிய நிலையில், ஈரானிடம் இருந்து இதற்கு பதில் வந்துள்ளது.
ஈரான் - அமெரிக்கா இடையேயான போரால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை தினமும் ஆயிரக்கணக்கான எண்ணெய் கப்பல்கள் கடந்து வந்த நிலையில், ஈரானின் அச்சுறுத்தலால் ஒரு சில கப்பல்களே கடக்கின்றன.

அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
உலக எண்ணெய் வர்த்தகத்தில் 20 சதவீதம் இந்த வழித்தடம் வழியாகவே நடப்பதால் சர்வதேச அளவில் எரிவாயு மற்றும் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படட்து. கச்சா எண்ணெய் விலையும் கடுமையாக உயர்ந்தது. இதற்கிடையே, ஹார்முஸ் ஜலசந்தியை 48 மணி நேரத்திற்குள் திறக்க வேண்டும் இல்லையென்றால் ஈரானில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களை தாக்குவோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்து இருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்த ஈரான், அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் எனவும் எதிரி நாடுகளின் கட்டமைப்புகள் ஐடி கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குவோம் என்று எச்சரித்தது. இதற்கிடையே ஹர்முஸ் ஜலசந்தி திறந்தே உள்ளதாக ஈரான் கூறியுள்ளது.
பதிலடி கொடுத்த ஈரான்
தங்கள் எதிரி நாடுகளின் கப்பல்களை மட்டுமே தாக்குவோம் என்றும் இதர கப்பல்களுக்கு ஹார்முஸ் ஜலசந்தி திறந்தே உள்ளது எனவும் ஈரான் கூறியுள்ளது. சர்வதேச கடல்சார் அமைப்பிற்கான ஈரானின் பிரதிநிதி அலி மௌசாவி இதுதொடர்பாக கூறியதாவது:-
"ஈரானின் எதிரிகள்" உடன் தொடர்பில்லாத கப்பல்கள் தெஹ்ரானுடன் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஒருங்கிணைத்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாகப் பயணிக்கலாம். கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்தவும், கடல் வழி பயனாளர்களை பாதுகாக்கவும் ஐ.நா.வுடன் ஒத்துழைக்க தங்கள் நாடு தயாராக இருக்கிறது" என்றும் கூறினார்.
மேலும், ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு இஸ்ரேல், அமெரிக்காவின் தாக்குதல்களே காரணம். ராஜாங்க ரீதியிலான பேச்சு ஈரானின் முன்னுரிமை. இருப்பினும், ஆக்கிரமிப்பை முழுமையாக நிறுத்துவதும், பரஸ்பர நம்பிக்கையும் மிக முக்கியம்" என்றார்.
நட்பு நாடுகளை தாக்குவோம்
எங்களின் மின் உற்பத்தி நிலையங்களை தாக்கினால், உங்களின் நட்பு நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, பக்ரைன், கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை தாக்குவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நாடுகள் குடிநீருக்கு 70 முதல் 90 சதவீதம் வரை கடல் நீரைத்தான் நம்பி இருக்கின்றன.
கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் தாக்கப்பட்டால் துபாய் உள்ளிட்ட பல நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும். எனவே மொத்த வளைகுடா நாடுகளும் தற்போது பதற்றத்தில் உள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்தில் 1.5 லிட்டர் குடிநீர் தற்போது ரூ.35 முதல் ரூ.55 வரை விற்கப்படுகிறது.
குடிநீர் பஞ்சம் ஏற்படும்
சவுதி அரேபியாவில் ரூ.45 முதல் ரூ.65 வரையும், குவைத்தில் ரூ.29 முதல் ரூ.43 வரையும் விற்கப்படுகிறது. அந்த நாடுகளில் குடிநீருக்கு அரசு மானியம் கொடுக்கிறது. ஆனால், ஈரான் தாக்குதல் நடத்தினால் குடிநீர் விலை உடனடியாக 5 முதல் 10 மடங்கு அதிகரித்துவிடும். அதாவது 1.5 லிட்டர் குடிநீர் ரூ.420 வரை விற்கப்படலாம். ஏற்கெனவே பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியதை போல, குடிநீர் விலையையும் டிரம்ப் உயர்த்தாமல் இருந்தால் சரி என்று வளைகுடா நாடுகளின் மக்கள் கூறுகின்றனர்.
-
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அமெரிக்காவின் புதிய வரி.. இந்தியாவுக்கு சுத்தி சுத்தி ஏகப்பட்ட 'அடி'.. திருப்பூர் மட்டும் எஸ்கேப்! -
இந்தியா மீது 12.5% கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்.. பூதாகரமாக வெடிக்கும் Section 301 பிரச்சனை! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம்












Click it and Unblock the Notifications