லிஸ்ட்டில் வந்த "பயங்கரவாதிகள்".. தலிபான்களின் பதிவுகளை நீக்கியது ஃபேஸ்புக்.. தடை போட்டு அதிரடி..!
தாலிபன்களின் பதிவுகளை பேஸ்புக் நீக்கி உள்ளது
வாஷிங்டன்: தலிபான்களை பயங்கரவாதிகள் என்று குறிப்பிட்டு, அவர்களது பதிவுகளை ஃபேஸ்புக் அதிரடியாக நீக்கியுள்ளது. தலிபான் அமைப்பினரின் ஆதரவாளர்களுடைய கணக்குகள் முடக்கப்படும் என்பதுடன், விதிமுறைகளின் படி தலிபான்களின் கணக்குகள் முடக்கப்படும் என்று ஃபேஸ்புக் அறிவித்துள்ளது பரபரப்பை கிளப்பி வருகிறது.
மிகப்பெரிய பரபரப்பில் உலக அரசியல் நகர்ந்து வருகிறது.. 20 வருட காலத்துக்கு பிறகு, பல்வேறு அதிரடிகளுக்கு பிறகு, ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளை தலிபான் படையினர் சுற்றிவளைத்து விட்டனர்.. ஆப்கன் தங்களது முழு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாகவும் அவர்கள் அறிவித்து விட்டனர்.
இதையடுத்து, உலக நாடுகள் பலவும் காபூலில் இருந்த தங்களது தூதரகத்தை மூடியுள்ளனர். ஆப்கானிஸ்தானிலுள்ள தங்கள் நாட்டு பிரதிநிதிகளை நாட்டுக்கு கொண்டு வரும் முயற்சியில் தீவிரமாகவும் ஈடுபட்டுள்ளனர்.

பொறுப்பு
பெண்கள் உட்பட அனைத்து பொது மக்களுக்கும் தாங்களே பொறுப்பு, யாரும் பயப்பட தேவையில்லை என்று தாலிபன்கள் நம்பிக்கை தந்தாலும், அதை மக்கள் ஏற்க தயாராக இல்லை.. தலிபான்களின் பழமைவாத சிந்தாந்தங்களோடும், அவர்களின் அடக்குமுறைகளிலும் தங்களால் வாழ முடியாது என்று பல்லாயிரக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேறி கொண்டிருப்பதால் பதற்றம் நீடிக்கிறது.

சீனா
ஒருபக்கம், தலிபான்களுடனான நட்பு உறவுக்கு தயாராக உள்ளதாக சீனா அறிவிக்கிறது.. "தாலிபான்கள் இனியும் எங்களுக்கு எதிரி இல்லை" என்று ரஷ்யா இன்னொரு பக்கம் அறிவிக்கிறது.. ஆளாளுக்கு மனதை மாற்றி கொண்டு வருவதன் காரணங்களும் விவாதத்தை கிளப்பி கொண்டிருக்கின்றன. எனினும், ஆட்சி அமைக்க தாலிபான்கள் ரெடியாகிவிட்டனர்..

அரசு ஊழியர்கள்
ஆப்கானிஸ்தான் நாட்டை இனி "இஸ்லாமிக் அமீரகம்" என்று புது பெயருடன் அழைக்க போவதாகவும் அறிவித்துவிட்டனர்..புது அமைச்சரவையை ஏற்படுத்தும் முயற்சியிலும் இறங்கி உள்ளனர்.. இதற்கு நடுவில், அரசு ஊழியர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் என்றும் தலிபான்கள் அதிரடியாக அறிவித்து, அவர்களை பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் தலிபான்கள் உத்தரவிட்டும் விட்டனர். ஆனால், தாலிபான்களின் ஆதிக்கத்தை இத்தனை காலமாக எதிர்த்து கடும் போராட்டம் நடத்தி வந்த ஆப்கானிஸ்தான் ராணுவமோ, இதையெல்லாம் அமைதியாக வேடிக்கை பார்த்து வருகிறது.

கொள்கை
எப்படி பார்த்தாலும், ஆட்சியமைக்கும் பட்சத்தில் ஒட்டுமொத்த நாடும் கொடுமையான இஸ்லாமி கொள்கையைப் பின்பற்ற வேண்டியிருக்கும் என்பதுடன், அந்த நாட்டு பெண்களுக்கான கட்டுப்பாடுகளும் அதிகரிக்கும் என்ற கலக்கம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில்தான், தலிபான்களை "பயங்கரவாதிகள்" என்று குறிப்பிட்டு, அவர்களது பதிவுகளை ஃபேஸ்புக் அதிரடியாக நீக்கியுள்ளது. இத்தனை காலமும், அமெரிக்க சட்டத்தின் படி பயங்கரவாத அமைப்பாக தலிபான் வகைப்படுத்தப்பட்டுள்ளது..
Recommended Video

செயலி
தலிபான்களை பயங்கரவாதிகள் லிஸ்ட்டில்தான் பேஸ்புக்கும் வைத்திருந்தது.. இப்போது, அவர்கள் தொடர்பான பதிவுகளை அகற்றியுள்ளது.... இருந்தாலும், வாட்ஸ்அப், பேஸ்புக்கின் மெசஞ்சர் என்ற செயலியை பயன்படுத்தி தலிபான்கள் ஒருவருக்கொருவர் தகவல்களை பரிமாறி வருவதாகவும் சொல்லப்படுகிறது.. தலிபான் அமைப்பினர், ஆதரவாளர்களின் கணக்குகள் முடக்கப்படும் என்பதுடன், விதிமுறைகளின் படி தலிபான்களின் கணக்குகள் முடக்கப்படும் என்று ஃபேஸ்புக் அறிவித்துள்ளது மேலும் பரபரப்பை கிளப்பி விட்டு வருகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications