டெக் நிறுவனங்களின் கோர முகம்.. நடப்பாண்டில் 1 லட்சம் பேரை வேலையை விட்டு தூக்கிய அவலம்!
வாஷிங்டன்: நடப்பாண்டில் மட்டும் சுமார் 1 லட்சம் பேரை டெக் நிறுவனங்கள் வேலையை விட்டு தூக்கியிருக்கின்றன. அமேசான், கூகுள், இன்டெல், மெட்டா போன்ற நிறுவனங்களில் இந்த பணி நீக்கம் நடந்திருக்கிறது.
இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில், மொத்தம் 218 டெக் நிறுவனங்கள் இந்த ஆண்டு ஊழியர்களை லே ஆஃப் செய்திருக்கின்றன. இந்த பணி நீக்கங்களுக்கு காரணமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சொல்லப்படுகிறது. ஆனால் உண்மையான காரணம் பொருளாதார மந்தநிலைதான். மந்தநிலையால் தங்கள் முதலீடுகளை நிறுவனங்கள் குறைத்துக்கொண்டிருக்கின்றன.

எந்த நிறுவனங்களில் பணி நீக்கம் அதிகம்?
218 நிறுவனங்களில் அதிக அளவில் பணி நீக்கத்தில் ஈடுபட்டது அமேசான்தான். 14,000-30,000 வரை ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியிருக்கிறது. பெருநிறுவனப் பிரிவுகள், மனிதவளம், கிளவுட் சேவை ஆகிய துறைகளில் ஆட்குறைப்பு செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் அதிக முதலீடு செய்ய, செலவுகளைக் குறைப்பதாக அமேசான் சிஇஓ ஆண்டி ஜாஸ்ஸி தெரிவித்துள்ளார். செலவுகளை குறைப்பது எனில் முதலீட்டை குறையுங்கள். தொழிலாளிகளின் வயிற்றில் ஏன் அடிக்க வேண்டும் என்று கேள்வி எழுந்திருக்கிறது.
இன்டெல் நிறுவனம்
அமேசானுக்கு அடுத்து உள்ள நிறுவனம் இன்டெல். இது 24,000 பேர் வரை தொழிலாளர்களை வேலையை விட்டு தூக்கியிருக்கிறது. இந்த எண்ணிக்கை மொத்த ஊழியர்களில் 22% என சொல்லப்படுகிறது. அதேபோல கூகுள் நிறுவனமும் ஆட்குறைப்பில் ஈடுபட்டிருக்கிறது. ஆனால் இந்நிறுவனம் ஒரே கட்டமாக பணி நீக்கத்தை மேற்கொள்ளாமல், பல கட்டங்களாக செய்திருக்கிறது. கிளவுட் பிரிவு, ஆன்ட்ராய்டு, ஓஎஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய பிளாட்ஃபார்ம்ஸ், மனிதவள பிரிவு மற்றும் ஹார்டுவேர் பிரிவுகளில் ஆட்குறைப்பை செய்திருக்கிறது.
கூகுள் + மெட்டா
அடுத்துள்ள நிறுவனம் மெட்டா. இந்நிறுவனம் கடந்த 2023ம் ஆண்டு 'திறன் ஆண்டு' எனும் திட்டத்தை கொண்டு வந்தது. அதன்படி குறைந்த செலவில் நிறுவனம் இயங்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டது. இதற்காக ஆட்குறைப்பும் செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டம் 2025ம் ஆண்டும் பின்பற்றப்படுவதால் சில ஆயிரம் ஊழியர்கள் வேலையை விட்டு நீக்கப்பட்டிருக்கின்றனர். மெட்டாவின் தொடர்ச்சியாக மைக்ரோசாப்ட் நிறுவனமும் பணி நீக்கத்தை செய்திருக்கிறது.
பொருளாதார கொள்கைகள்
உலகம் முழுவதும் பின்பற்றப்பட்டு வரும் பொருளாதார கொள்கைகள் மிகப்பெரிய அளவில் தோல்வியை சந்தித்திருக்கின்றன. லாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு நிறுவனங்கள் செயல்படுவதால் அது சுரண்டலை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது. இந்த சுரண்டல் ஒரு புள்ளியில், தனது சொந்த வளர்ச்சியையே பாதிக்கும் என்கிற நிலை வரும்போதும் நிற்பதில்லை. இங்குதான் பொருளாதார மந்தநிலை ஏற்படுகிறது. இதனால் பணவீக்கம் ஏற்படுகிறது.
பணவீக்கமும் வேலையிழப்பும்
பணவீக்கத்தை கட்டுப்படுத்த மத்திய வங்கிகள் (RBI போல) வட்டி விகிதங்களை உயர்த்துகிறது. அதாவது தனியார் வங்கிகள் பெரிய நிறுவனங்களுக்கு கடன் கொடுக்கின்றன. இதற்கான பணத்தை மத்திய வங்கியிடமிருந்து கடன் வாங்குகின்றன. வாங்கும் கடனுக்கு வட்டி இருக்கும். இந்த வட்டியை உயர்த்தும்போது, தனியார் வங்கிகளும் தாங்கள் கொடுக்கும் கடனுக்கான வட்டியை அதிகரிக்கும். இதைத்தான் ரெப்போ ரேட் உயர்வு என்று சொல்கிறார்கள்.
முட்டு சந்தில் பொருளாதாரம்
இதனால் EMI உயரும். எனவே மக்கள் பொருட்களை வாங்குவதை தள்ளி போடுவார்கள். பெரிய நிறுவனங்களும் கடன் வாங்கி புதிய தொழிற்சாலையை அமைப்பது, அல்லது ஏற்கெனவே இருக்கும் ஆலைகளை விரிவாக்குவது போன்ற திட்டத்தை ஒத்தி வைக்கும். எனவே சந்தையில் பொருட்கள் தேங்கும். இதனால் விலை குறையும் என்று அரசுகள் கணக்கீடு செய்கின்றன. எவ்வளவு நாட்களுக்கு இதையே செய்துக்கொண்டிருக்க முடியும்? ஒரு கட்டத்தில் இந்த பிரச்சனை இலங்கை, வங்கதேசத்தில் ஏற்பட்ட போராட்டங்களாக வெடிக்கும். அதற்கான தொடக்க புள்ளியாக இந்த பணி நீக்கங்கள் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.
-
அதிகாலையில் வந்த மெயில்.. மீண்டும் வேலையை காட்டிய மெட்டா! ஊழியர்கள் கண்ணீர்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications